எல்லாமே வதந்தி.. இவங்க தான் என்னுடைய உயிர், உலகம்.. மேடையில் விஜே பிரியங்கா உடைத்த ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் பலருக்கும் பரிச்சயமான விஜே பிரியங்கா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர் இவர்தான் என்று தன்னுடைய குடும்ப ரகசியத்தை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
விஜே பிரியங்கா விஜய் டிவி பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். திருமணம் ஆன சில வருடங்கள் ஒற்றுமையாக இருந்த பிரியங்காவின் வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது.

அதை நிரூபிக்கும் வகையில் பிரியங்காவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவருடைய கணவரை குறித்து எந்த இடத்திலும் பேசவில்லை. அதே நேரத்தில் அவருடைய அம்மா மற்றும் தம்பியை குறித்துதான் அதிகமாக பேசிக்கொண்டிருந்தார். இதனால் பிரியங்கா அவருடைய கணவரை பிரிந்து விட்டாரா? என்று அதிகமான ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் நெகட்டிவ் பெயர் வாங்கி விடுவதால் பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று பலர் கூறி வந்தனர். ஆனால் அதை எல்லாம் தாண்டி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா பாசிட்டிவ் பெயரோடு தான் வெளியே வந்திருந்தார். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருக்கிறார். அந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா பிஸியான வாழ்க்கையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தன்னுடைய வாழ்க்கையில் உயிர், உலகம் எல்லாமே என்னுடைய தம்பியின் மகள் இஷா தான் என்று கூறியிருக்கிறார்.
இஷா மட்டும் என்னுடைய வாழ்க்கையில் இல்லை என்றால் நான் இன்று சந்தோஷமாக இருக்க முடியாது என்று எனக்கே தோன்றுகிறது. ஆரம்பத்தில் நான் ரீல்ஸ் வீடியோஸ்கள் பார்க்கும்போது இப்படியெல்லாமா அத்தையும் மருமகளும் இருப்பாங்க என்று நினைத்திருக்கிறேன். என்னுடைய அத்தைகள் ஊரில் இருந்தாங்க. நாங்க சென்னையில் இருந்தோம். அதுபோல அத்தைக்கு அதிகமான வயசு இருந்ததால் எங்களுக்குள் பெரிய அளவில் பாண்டிங் கிடையாது.
ஆனால் இப்போது எனக்கும் என்னுடைய மருமகளுக்கும் அதிகமான பாண்டிங் இருக்கிறது. அவள் குழந்தையாக இருக்கும்போது இருந்தே என்னுடைய பேவரைட் ஆக மாறிவிட்டாள். அவள்தான் எனக்கு எல்லாமே என்று சொல்லும் அளவிற்கு மாறி இருக்கிறார். அவள் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள், குறும்புகள், அழகான பேச்சுக்களை நான் அதிகமாக ரசிக்கிறேன். அதே நேரத்தில் நான் என்னுடைய தம்பி மகளோடு அதிகமாக நெருக்கமாக இருப்பதை குறித்து அவருடைய அம்மா எதுவும் சொல்ல மாட்டார்.
காரணம் நாங்க சின்ன வயசுல இருந்து பிரண்டாக தான் இருக்கிறோம். என்னுடைய தம்பியின் மனைவி எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவளும் என்னை நன்றாக புரிந்து கொள்கிறார் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு பிரியங்கா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தபோது அவருடைய அம்மா பிரியங்காவிடம் நீ திருமண வாழ்க்கையில் ஏற்கனவே எடுத்த முடிவு தப்பாக போய்விட்டது.
ஆனால் இனி எடுக்கப் போகும் முடிவு உன்னை எந்த சூழ்நிலையிலும் அழ வைக்காததாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார். இதனால் பிரியங்காவிற்கு விரைவில் திருமணம் இருக்குமா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications