விஜய் டிவில தான் என் குழந்தை இருக்கு.. விட்டு கொடுக்க முடியாது! வெளிப்படையாக பேசிய பிரியங்கா
சென்னை:விஜே பிரியங்கா தன்னுடைய குழந்தை விஜய் டிவியில் தான் இருக்கிறது என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய பிரியங்கா இப்போது பிரியங்கா இல்லாத நிகழ்ச்சியே விஜய் டிவியில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்.
திறமையும் அதற்கான முயற்சியும் இருந்தால் என்னதான் தடைகள் வந்தாலும் அதை தகர்த்து எறிய முடியும் என்பதற்கு சான்றாக ஒரு சிலர் பிரபலம் அடைந்து இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் விஜே பிரியங்கா. இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தாலும் இப்போது எந்த புதிய நிகழ்ச்சி தொடங்கினாலும் அதில் பிரியங்கா தான் முதல் ஆளாக அட்டெண்ட் ஆகிவிடுகிறார்.

பிரியங்கா இல்லாத நிகழ்ச்சி இருக்கா என்று தேடிப் பார்க்கும் அளவில் இவர் விஜய் டிவியில் பிரபலமாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பல பிரபலங்கள் தெறித்து ஓடுவார்கள்.. ஐயோ இதுவரைக்கும் வாங்கி வைத்திருக்கும் நல்ல பெயர் எல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மாறிவிடும் என்று பலர் பதறி இருக்கும் நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரியங்கா நெகட்டிவ் தாண்டி பாசிட்டிவோடு கடைசி நாள் வரைக்கும் உள்ளிருந்து வெளியே வந்தார்.
அப்போது கூட அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அவருடைய ரசிகர்கள் பலரும் அவருக்கு கருத்து தெரிவித்து வந்தனர். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்போது அடுத்த ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இதிலும் தன்னுடைய சமையல் திறமையை காட்டிக்கொண்டிருக்கும் பிரியங்கா இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆக போகிறாரா? இல்லையா? என்பது இப்போதைக்கு தெரியாவிட்டாலும் அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது என்று சொல்வது போல தான் நடந்து கொள்கிறார்.
அதோடு நான் இருக்கிற வரைக்கும் அத்தனை கேமராக்களும் என்னை தான் சுற்றிவர வேண்டும் என்று ரகளை செய்து அதிகமான கேமராக்களில் இடம் பிடித்து விடுகிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் விஜய் டிவியில் உங்களுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இருக்கிறது, அதுபோல ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியும் இருக்கிறது. இதில் உங்களுக்கு எது பிடித்த நிகழ்ச்சி என்று கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இல்லை என்றால் நான் இன்னைக்கு எந்த அளவிற்கு வளர்ந்திருப்பேனா என்பது எனக்கு தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியால் தான் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதனால் தான் நான் இவ்வளவு வளர்ந்து இருக்கிறேன். அது போல ஸ்டார் மியூசிக் என்னுடைய குழந்தை அது நல்லபடியா வளர்த்து மக்களிடம் கொண்டு சேர்க்கணும் என்பது என்னுடைய ஆசை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் பிரியங்கா அவருடைய கலகலவென சிரிப்போடு பேசி இருக்கிறார்.
ஏற்கனவே பிரியங்கா அவருடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்ற செய்திகள் சில வருடங்களாகவே இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் என்னுடைய குழந்தை விஜய் டிவியில் தான் இருக்கிறது என்று சொன்னதை கேட்டு ரசிகர்கள் ஒருவேளை இவர் எந்த குழந்தையாவது தத்தெடுத்து விட்டாரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் கடைசியில் வீடியோவில் பிரியங்கா பேசியதை கேட்டதும் தான் இவ்வளவுதானா அவருடைய குழந்தை ஸ்டார் மியூசிக்கா என்று சலித்துக் கொள்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications