தலை தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடிய விஜே பிரியங்கா! போஸ்டில் அவர் கேப்ஷனை பாத்தீங்களா? குவியும் வாழ்த்து
சென்னை: விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாகவும், கலகலப்பான தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் விஜே பிரியங்கா. பல சர்ச்சைகள், முதல் திருமண முறிவு போன்றவற்றைச் சந்தித்த பிரியங்கா, தற்போது தனது இரண்டாவது கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இந்தத் தம்பதியர் தங்கள் முதல் தலை தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடியதோடு, தங்கள் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்றுள்ளனர்.

யார் இந்த விஜே பிரியங்கா
தொகுப்பாளினிகள் என்று சொன்னாலே ஒரு சில தொகுப்பாளர்கள் முகம் பலருக்கும் பரீட்சையமனதாக இருக்கும் அந்த வரிசையில் ஒருவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே (விஜே பிரியங்கா). தமிழ் தொலைக்காட்சியில் இவருடைய கலகலப்பானப் பேச்சும், இயல்பான நகைச்சுவை உணர்வும், விஜய் டிவியில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. பல ரியாலிட்டி ஷோக்களையும், சிறப்பு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இவர் பிரபலமானார்.
சர்ச்சைகள்
பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற போது, இவருடைய பேச்சும், சில நேரங்களில் இவர் காட்டிய அணுகுமுறையும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இவர் மீது "அலட்சியம்" மற்றும் "போலித்தனம்" இருப்பதாகச் சில எதிர்ப்புகள் எழுந்தாலும் தன்னோட வேலையில எப்போதுமே ஸ்பெஷல் ஆகத்தான் இருந்து வருகிறார்
திருமணம்
விஜே பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகளால் சூழப்பட்டிருந்தது. பிரியங்கா, விஜய் டிவி பிரபலமான பிரவீன் குமாரைத் திருமணம் செய்தார். பல ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்த இந்தத் தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர். பிரியங்கா தனது முதல் திருமண முறிவு குறித்து பெரிதாக எந்த இடத்திலும் வெளிப்படையாக பேசவில்லை.
இரண்டாவது திருமணம்
முதல் திருமணம் விவாகரத்திற்கு பிறகு, பிரியங்கா தனது இரண்டாவது திருமணத்தை எளிமையான முறையில் முடித்துக் கொண்டார். அவர் திருமணம் செய்து கொண்டது தனது இரண்டாவது கணவர் வசி என்பவரைத் தான்.
தீபாவளி கொண்டாட்டம்
விஜே பிரியங்கா, தனது இரண்டாவது கணவர் வசியுடன் குடும்ப உறுப்பினர்கள் சூழத் தீபாவளியைக் கொண்டாடியுள்ளார். பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், அவர் தனது இரண்டாவது கணவர் வசி, அம்மா, மற்றும் குடும்பத்தினர் சிலருடன் சந்தோஷமாக இருக்கிறார்.
உருக்கமான பதிவு
அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து பிரியங்கா, "வாழ்க்கையின் இந்தக் கட்டமே மகிழ்ச்சி" என்ற பொருள் தரும் கேப்ஷனை பதிவிட்டுள்ளார். இரண்டாவது கணவருடன் அவருக்கு இது முதல் தலை தீபாவளி என்பதால், இந்தக் குடும்பப் படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன.
சுவாரஸ்யமான பேட்டிகள்
விஜே பிரியங்கா தனது பேட்டிகளில் பொதுவாகத் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்கள் குறித்தும், அதிலிருந்து மீண்டு வந்த விதம் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். முதல் திருமண முறிவுக்கு பிறகு தான் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளானார் என்றும், அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் தொழிலில் கவனம் செலுத்தியது குறித்தும் அவர் உருக்கமாகப் பேசி இருக்கிறார்.
அடுத்த இன்னிங்ஸ்: இவருடைய இந்தப் புதிய திருமண வாழ்க்கை, இவருடைய மன உறுதிக்கும், மீடியா துறையில் இவர் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற துடிப்புக்கும் ஓர் எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது. எல்லா சர்ச்சைகளையும் கடந்து, பிரியங்கா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தனது குடும்பத்துடன் உற்சாகமாகக் கொண்டாடுவது, அவருடைய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications