முன்பக்கம் காற்று வாங்க....தலையை திருப்பி பார்த்து..ரசிகர்களை பரிதவிக்க வைத்த பிரியங்கா!
சென்னை : இந்தப் புன்னகையில் முன்பு பொன் நகைகள் எதுவும் தேவை இல்லை என்று ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பிரியங்காவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அசந்து போய் விட்டார்கள்
படபடவென பேசும் பேச்சை குறைத்து அமைதியும் சொரூபமாக இவரைப் பார்த்த ரசிகர்களால் ஆச்சரியம் தாங்க முடியவில்லையாம்.
என்னதான் இவர் அமைதியாக உட்கார்ந்தாலும் இவரை வம்பிழுக்க நெட்டிசன்கள் நாங்க வரோம் என்று ஓடோடி வருகின்றனர்

கெட்டப்பில் மாஸ் தான்
வராத சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவழைத்து போஸ் கொடுத்துள்ளாரோ!! என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை போஸ்ட் செய்துள்ளார் பிரியங்கா. பற்றாக்குறைக்கு கருப்பு நிற கவுன் வேறு....எந்த நிகழ்ச்சியாக இருக்குமோ? எந்த இடமாக இருக்குமோ?என்று போட்டோவையே அவரது ரசிகர்கள் உற்று உற்றுப் பார்த்து வருகின்றனர்.பொதுவாக விஜய் டிவியை பொறுத்தவரை நிகழ்ச்சி நன்றாக இருக்கிறதோ இல்லையோ அதை பொதுமக்களிடம் ரீச் ஆகும் வண்ணம் கொண்டு சேர்ப்பதற்கு அவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

கலகலப்புக்கு சொந்தக்காரர்
அந்த நிகழ்ச்சிகளை வெற்றிபெற வைக்க பல ஐடியாக்களை பின்பற்றுவது விஜய் டிவியின் வழக்கம்.பெரும்பாலும் ரியாலிட்டி ஷோக்களில் காம்பியரிங் செய்பவர்களை வைத்து நிகழ்ச்சியின் ரேட்டிங்கை எகிற வைத்து விடுவார்கள்.உதாரணமாக சிவகார்த்திகேயன், டிடி ,என்று ஒரு பெரிய லிஸ்டே உள்ளது.அந்த வரிசையில் விஜய் டிவியில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து அந்த நிகழ்ச்சியை எந்தவித போரடிக்காமல் கலகலப்பாக கொண்டு செல்வதில் பிரியங்காவிற்கு என்று தனி ஸ்டைல் உண்டு.

யாரையும் கண்டு கொள்வதில்லை
பொதுவாக ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் விஜே க்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை கலாய்ப்பது தான் வழக்கம். ஆனால் நிகழ்ச்சியின் கன்டஸ்டன்ட்களே விஜே வை கலாய்ப்பது என்பது பிரியங்கா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் மட்டுமே நடைபெறும் ஒரு விஷயமாகும்.கண்டஸ்டன்டுகள் மட்டுமின்றி நடுவர்கள் கலாய்த்தாலும் அதையே நகைச்சுவையாக மாற்றி நிகழ்ச்சியை சலிப்பு தட்டாமல் கொண்டு செல்லும் அளவிற்கு ஒரு பக்குவமான விஜே வாக ஜொலித்து வருகிறார். பெரும்பாலும் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் ப்ரமோக்கள் இவரை மையப்படுத்தியே இருக்கும்.அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார்.

எப்போதுமே ரீச் தான்
தன்னைப் பற்றிய நெகட்டிவ் கமெண்டுகளை பாசிட்டிவ் ஆக மாற்றி அதை நகைச்சுவையாக அனைவரும் ரசிக்கும் வண்ணம் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்லும் பிரியங்கா கொஞ்ச நாட்களுக்கு முன்பு,தான் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தை கூட அவரை அவரே கலாய்த்துக் கொண்டு வீடியோ வெளியிட்டு வந்தார்.அந்த வீடியோவும் இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாது பல யூடூபர்ஸ்கள் அதை கன்டன்ட் ஆக எடுத்து கலாய்க்கும் அளவிற்கு ரீச் ஆனது.

கூச்சம் எல்லாம் இல்லை
விஜய் டிவிக்கென்று தத்து கொடுக்கப்பட்ட பிரியங்கா, 2013 ஆண்டு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை மட்டுமல்ல ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றிக்கும் பிரியங்காவின் அழகான தொகுத்து வழங்கும் முறையும் ஒரு முக்கிய காரணமாகும்.தன்னுடன் சேனலில் பணியாற்றிய சக ஒளிப்பதிவாளரை திருமணம் செய்துகொண்ட பிரியங்கா பொதுவாக தன்னை ஒரு சாப்பாட்டு பிரியையாக காட்டிக் கொள்ள கூச்சப் பட்டதில்லை. உள்ளூர் மட்டுமின்றி எந்த ஒரு வெளிநாடு நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் ஏதேனும் ஒரு உணவு உண்பதை குறித்த வீடியோவை போடுவதை கொஞ்ச நாள் முன்பு வரை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பழைய புத்துணர்வு பொங்குது
ஃபுட்டியாக(foodi) தன்னைக் காட்டிக் கொண்டு இருந்ததாலோ என்னவோ? யார் கண் பட்டதோ தெரியவில்லை!அதனாலேயே ஃபுட் பாய்சன் ஆகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ட்ரீட்மென்ட் எடுத்து வந்தார்.அந்த ஓய்வுக்குப் பின்பு திரும்பவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த பிரியங்கா தேஷ்பாண்டே விடம் பழைய புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் கொஞ்சம் குறைவாகவே இருப்பதாக சில நாட்களாக அவரது ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து வந்தனர். இனிமேலாவது கொஞ்சம் வாயை கட்டுப்படுத்தி உடல் நலத்தில் அக்கறை செலுத்தி பழைய பிரியங்கா வாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனைவரையும் கலகலப்பாக வைத்திருப்பாரா? என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர். ரசிகர்களின் ஏக்கத்தை பிரியங்கா சீக்கிரம் நிறைவேற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications