இனி யாரும் என்னை அப்படி சொல்ல முடியாது.. 10 ஆண்டு ஏக்கம் நிறைவேறியது.. பிரியங்காவின் பதிவு
சென்னை: தொகுப்பாளராக இதுவரைக்கும் பரிச்சயமான பிரியங்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறார். அந்த மகிழ்ச்சியை தனக்கு சப்போர்ட் செய்த ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து இருக்கிறார். அதில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கிடைக்காத வெற்றி இப்போது கிடைத்துவிட்டது என்று சந்தோஷப்பட்டு இருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை பெரும் பிரச்சனையாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு கொண்டு இருந்தது. எவ்வளவோ விமர்சனங்கள் வந்தாலும் அதற்கு வாயை திறக்காமல் இருந்த பிரியங்கா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்ததும் மணிமேகலைக்கு பதிலடி கொடுக்கும் பதிவாக இருக்கும் என்று எதிர்பார்க்க ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

ஆனால் தனக்கு சப்போர்ட் செய்த ரசிகர்களுக்கு பிரியங்கா நன்றி கூறி இருக்கிறார். அதாவது பிரியங்கா தான் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வாகி இருக்கிறார். தான் ஜெயிப்பதற்கு உதவி செய்து தன்னுடைய பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். பிரியங்கா தான் டைட்டில் ஜெயித்திருக்கிறார் என்பது சில வாரங்களுக்கு முன்பே எல்லோருக்கும் தெரியும்.
டைட்டில் வெற்றி பெற்றதும் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வந்த பிரியங்கா இப்போது மீண்டும் சென்னைக்கு வந்திருக்கும் நிலையில் நேற்று அவர் ஜெயித்த எபிசோடுகள் ஒளிபரப்பானது. அதைத் தொடர்ந்து இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக கிச்சன் சூப்பர் ஸ்டார் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற முடியாத நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வென்றது குறித்து அதில் பகிர்ந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் தற்போது நடப்பன, பறப்பன, நீந்துவன என எல்லாவற்றையும் நான் சமைப்பேன் என்று பெருமையாக கூறுவேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமைப்பதற்கு தனக்கு சிறப்பாக பயிற்சி அளித்த அனைவருக்கும் நன்றி நான் சூட்டிங் முடித்துவிட்டு எந்த நேரத்தில் வந்தாலும் என்னை உற்சாகமாக வரவேற்று தனக்கு சமையலில் பயிற்சி அளித்தவர்களை நான் மறக்க மாட்டேன்.
வாரந்தோறும் நான் சமைக்கும் சமையலை பல நேரங்களில் நானே சுவைக்க மாட்டேன். என்னால் அந்த சாப்பாடை சாப்பிட முடியாது. ஆனால் அதன் சுவை மற்றும் குறை, நிறைகளை சொன்ன நடுவர்களுக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் நன்றி. சோறு தான் முக்கியம் என்று அந்த பதிவில் கீழே கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதோடு குக் வித் கோமாளி என்ற பயணத்தில் என்னை ஊக்குவித்தவர்களுக்கும், ஆதரவளித்தவர்களுக்கும் துணை நின்றவர்களுக்கும் எனக்காக கண்ணீர் விட்டவர்களுக்கும் நன்றி.
நான் தினமும் காலையில் எழுவதற்கு நீங்கள் தான் காரணம். உங்கள் வீடுகள் மற்றும் டிவிகளில் நான் உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வருவேன். நீங்கள் பாசிட்டிவிட்டியாக இருப்பதற்கு நான் உங்களை மகிழ்விப்பேன். அதுபோல என்னை பற்றி எவ்வளவோ விமர்சனங்கள் வந்தாலும் எனக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினர்களுக்கும் நன்றி என்று தன்னுடைய தம்பி, அம்மா, தம்பியின் மனைவி, குழந்தை என எல்லோரையும் டேக் செய்து பிரியங்கா அந்த பதிவை முடித்து இருக்கிறார்.
தன்னை பற்றி பரவி வரும் நெகட்டிவ் கமண்ட்டுகளுக்கோ அல்லது சர்ச்சைகளுக்கோ, மணிமேகலை சொன்ன குற்றச்சாட்டுகளுக்கோ பிரியங்கா இதில் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதனால் அவருடைய ரசிகர்கள் பிரியங்காவின் பெருந்தன்மையை பாராட்டி வருகிறார்கள்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications