என்னாது... VJ ரம்யா சைக்கோவா!
சென்னை: டிவி சீரியல்களில் தொகுப்பாளராக அறிமுகமாகி வெள்ளித்திரையில் இப்போ கலக்கிக் கொண்டிருக்கும் விஜே ரம்யா ஒரு நிகழ்ச்சியில் நான் ஒரு சைக்கோ என்று கூறியிருக்கிறார் இதைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஆனால் மேட்டர் அவ்வளவு சீரியஸ் கிடையாது..ஸோ எல்லோரும் ஷோல்டரை கீழே இறக்குங்க.
VJ ரம்யா தொகுப்பாளர் மட்டுமல்ல ஆடை வடிவமைப்பாளர், விளம்பரம்,மாடல் என பல முகம் கொண்டவர். இவருக்கு சின்னத்திரையில் மிகப் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.
இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய பிட்னஸ் போட்டோக்களை குவித்துக் கொண்டு வருகிறார். இவர் முன்னாடி எடுத்த போட்டோஸ்களுக்கும் இப்ப எடுக்கிற போட்டோஸ் களுக்கும் உள்ள வித்தியாசத்தை போட்டிருக்கிறார்.

மெய் சிலிர்க்கும் ரசிகர்கள்
இதை பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்த்து போயிருக்கிறார்கள். இப்போ டிரண்ட் ல இருக்கிற பிட்னஸ்ல இவருக்கும் அதிகமான ஆர்வமாம். ஃபிட்னெஸ்ஸில் இவருக்கு இருக்கும் ஆர்வத்தினால் இவர் தன்னையே நான் ஒரு ஃபிட்னஸ் சைக்கோ என்று கூறியிருக்கிறார். என்னுடைய மன திருப்திக்காகவும் என்னுடைய அழகுக்காகவும் நான் பண்ணுகிறேன். இதில் வெறியாக ஈடுபடுவேன் என்று கூறியிருக்கிறார்.

ஆர்யா ஸ்மார்ட் சைக்கோ
இப்ப கூட ஆர்யாவைப் பற்றி இவர் கமெண்ட் போட்டு இருக்கிறார். அதில் ஆர்யா 'ஸ்மார்ட் சைக்கோ' என்று கூறியிருக்கிறார். ஏனென்றால் அவரும் பிட்னஸ் பிரியரம். உடம்பை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஆர்வமாக செயல்பட்டுக் கொண்டே இருப்பதால் அவரை பற்றி அப்படி கூறியிருக்கிறாராம்.
நடிகை சமந்தாவும் இவரும் நெருங்கிய தோழிகளாம். இவர்கள் இருவரும் வருடத்திற்கு ஒருமுறை திருப்பதிக்கு நடந்தே சென்று விடுவார்களாம்.

பிட்டான உடம்பு
இப்போ சமந்தாவும் இதில் ஆர்வம் காட்டி உடம்பை குறைத்திருக்கிறார். ரம்யாவிற்கு போரடிக்கிறது, டைம் பாஸ் ஆகவில்லை என்றாலே உடனே டிரஸ்ஸை கழற்றி விட்டு.. அட.. எக்சர்சைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவார்னு சொல்ல வந்தோமுங்க. அவருடைய பயிற்சியாளரை கேள்விகளாக கேட்டு ஒரு வழி செய்து விடுவாராம். அவரே போதும் என்று சொன்னாலும் இன்னும் கத்து தாங்க என்று அடம் பிடிப்பாராம். அந்த அளவுக்கு எக்சர்சைஸ் செய்வதில் ஆர்வமாம்.

பெருகும் நட்புகள்
அதுமட்டுமல்ல ஆடை படத்தில் இவர் நடித்திருக்கிறார். இதன்மூலம் அமலாபாலுக்கும் இருவருக்கும் நல்ல நட்பு கிடைத்தது. மேலும் சமீபத்தில் சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல விஜய்யின் 64ஆவது படத்திலும் நடித்துள்ளார். இப்படி சினிமா பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது.

2வது திருமணம்
இவர் லைஃப்ல சில கஷ்டமான காலங்களை கடந்து தான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறாராம். இவருக்கு 2014 இல் ஆடிட்டர் ஜெயராம் என்பவருடன் திருமணம் முடிந்தது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆகி விட்டது. அதற்கு பிறகு இப்போ நிறைய ரசிகர்கள் கமெண்டில் நீங்கள் அடுத்த திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். இதற்கு விரைவில் நல்ல ஆண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார் .

கருப்போ என்னவோ
அதற்கு ரசிகர்கள் உங்களுக்கு கருப்பா இருந்தா பிடிக்குமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் கருப்பு சிவப்பு என்பது எனக்கு பிரச்சனை இல்லை. நல்ல குணமான மனிதராக இருந்தால் மட்டும் போதும் என்று கூறியிருக்கிறார். இதனால் இவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அது மட்டுமல்ல தன்னுடைய புது பட வாய்ப்புகளுக்காக உடம்பை குறைத்து இவர் வெளியிட்டிருக்கிறார்.

ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி
இதுதொடர்பாக அவர் புகைப்படங்களையும் போட்டு ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளார். அவர் போட்டுள்ள கலர்ஃபுல் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இணையதளத்தில் இவரிடம் உடம்பை குறைப்பதற்கு டிப்ஸ் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு இவர் மாற்றத்தை ஏற்படுத்தி போட்டோஸ்கள் ஆக குவித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications