சீரியல் டீச்சரையே நிஜத்தில் திருமணம் செய்த விஜய் டிவி நடிகர்.. மணப்பெண் கூட இந்த சன் டிவி நடிகை தான்
சென்னை: டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் வெப் சீரிஸ் மூலம் பிரபலமான சங்கீதாவும் நடிகர் அரவிந்த்தும் காதலித்து வந்த நிலையில் அவர்களுடைய திருமணம் நேற்று நடைபெற்றது. அந்த திருமண பங்க்ஷனில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
தை மாதம் பிறந்ததும் பல பிரபலங்கள் தங்களுடைய திருமண விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்கள். ஏற்கனவே சின்னத்திரையில் சீரியல்களில் ஒன்றாக நடித்த நடிகர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. அந்த வரிசையில் இப்போது நடிகர் அரவிந்த் சேசு மற்றும் சங்கீதா இருவரும் ஜோடி இணைந்து இருக்கின்றனர்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் இவர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் இரண்டாவது சீசனில் நடித்திருந்தார்கள். அந்த சீரியலில் சங்கீதா மலர் டீச்சராக நடித்திருந்தார். பிரேமம் படத்தில் மலர் டீச்சர் ஆக வந்த சாய்பல்லவிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ அதுபோல சங்கீதாவிற்கும் அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக இருந்தனர்.
அந்த சீரியலில் சங்கீதாவிடம் படிக்கும் கலை என்ற மாணவனாக அரவிந்த் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் தற்போது காதல் மலர்ந்து இருக்கிறது. அந்த காதலுக்கு இரு வீட்டின் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டியதால் தற்போது திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுடைய எங்கேஜ்மென்ட் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று சங்கீதா சாய்- அரவிந்த் ஜோடியின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதிலும் சங்கீதா ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்து பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலமாகத்தான் கதாநாயகியானார்.
அழகு சீரியலில் சங்கீதாவிற்கு மாமனராக நடித்த தலைவாசல் விஜய்யும் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டார். அதுபோல பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மாமியாராக நடிக்கும் பாக்கியலட்சுமி இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டார். அதுபோல அரவிந்த் விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கிய அய்யனார் துணை சீரியலில் நடித்து வருவதால் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டனர்.
சங்கீதா மதுரையில் பிறந்து வளர்ந்தவர். சென்னையில் ஐடியில் வேலை பார்த்து வந்த இவருக்கு சன் மியூசிக் விஜேவாக வேலை கிடைத்தது. அதிலிருந்து தான் இவர் சீரியலில் நடிக்க தொடங்கினார். கடந்த வருடத்தில் முடிவுக்கு வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசு கேரக்டரில் பாதிக்கு மேல் சங்கீதா தான் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த தம்பதிக்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications