குக் வித் கோமாளி சீசன் 5இல் புது தொகுப்பாளர்.. இதுக்கு பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் மணிமேகலை விலகிய பிறகு அவருக்கு பதிலாக புது தொகுப்பாளராக விடிவி கணேஷ் அறிமுகம் ஆகி இருக்கிறார். அவரோடு புகழும் புது தொகுப்பாளராக வந்திருக்கிறார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன் என்று மணிமேகலை திடீர் போஸ்ட் வெளியிட்டு இருந்தார். அதோடு தான் விலகியதற்கு காரணம் போட்டியாளராக வந்த தொகுப்பாளர் தான். அவர் என்னை வேலை செய்ய விடாமல் ஆரம்பத்திலிருந்து தடுத்துக் கொண்டிருக்கிறார். என்னுடைய வேலையில் அவர் தலையிடுவதால் என்னால் முழுமையாக வேலை செய்ய முடியவில்லை.

television vijay tv manimegalai

நான் வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் அது இன்னொரு நபரால் தடுக்கப்படுகிறது என்று கூறியிருந்தார். இது பிரியங்காவை தான் என்பது எல்லோருக்கும் தெரியும் நிலையில் பிரியங்காவிற்கு எதிராக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவிற்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ஆனாலும் கடந்த வாரத்தில் மீண்டும் மணிமேகலை ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை சொம்பு என்று கலாய்ப்பது போன்று பேசியிருந்தார். இதுவும் அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சி ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டது.

இதற்கான சூட்டிங் முடிவடைந்து விட்டது. ஷூட்டிங் முடிவடைந்த பிறகு தான் பிரியங்கா வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று இருக்கிறார் என்று அவருடைய நண்பரான அமீர் மற்றும் வனிதா உட்பட பலர் பேசியிருக்கிறார்கள். பிரியங்கா தான் இந்த சீசனில் டைட்டில் வின்னராக தேர்வாகி இருக்கிறார். வெற்றி பெற்றதும் தான் அதை கொண்டாடுவதற்காக வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் நேரத்தில் தான் பிரியங்கா பற்றி மணிமேகலை தன்னுடைய கோபத்தை கொட்டி விட்டார் என்றெல்லாம் பேசி வருகிறார்கள்.

ஆனால் மணிமேகலை விலகிய பிறகு இரண்டு வாரங்களுக்கான சூட்டிங் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று விஜய் டிவி தரப்பில் இருந்து புது போஸ்ட் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் இந்த ஐந்தாவது சீசனில் புதிய தொகுப்பாளர் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்... அது உங்களுக்கு தெரிந்தவராக இருக்கலாம். நன்கு அறிமுகமானவர்களாக கூட இருக்கலாம் என்று க்ளூ கொடுத்திருந்தனர்.

television vijay tv manimegalai

அதுபோல ஐந்தாவது சீசனில் இருக்கும் தொகுப்பாளரே ஆறாவது சீசனிலும் தொகுப்பாளராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தனர். இதனால் யாராக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் புகழ் மற்றும் விடிவி கணேஷ் இருவரும் தொகுப்பாளராக கலந்து கொள்வது தெரிய வந்திருக்கிறது.

வழக்கம் போல ரக்சன் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கிறார். அவரோடு சேர்ந்து புகழ் மற்றும் விடிவி கணேஷ் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். ஏற்கனவே விடிவி கணேஷ் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வந்திருந்தார். அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் எலிமினேஷன் ஆகி இருந்தார். அவர் எலிமினேஷன் ஆன அன்று நடந்த சூட்டிங்கில் தான் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே பிரச்சனையை ஏற்பட்டது. இந்த நிலையில் இவர் இப்போது தொகுப்பாளராக மீண்டும் வந்திருப்பது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+