சரிதா பிளேட்டையே திருப்பிட்டாங்க.. நடிகைகளுக்கு பணத்தாசை.. நடிகர் சிவக்குமார் இல்லேனா? பிரபலம் பளிச்
சென்னை: சில நடிகைகளுக்கு எப்போதுமே பணம் ஆசை.. தேதி இல்லாவிட்டாலும்கூட பணம் வர வர வாங்கி போட்டுக்கணும்" என்று கூறியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. அத்துடன் தங்கள் படத்தயாரிப்பில் நடந்த, சிக்கல் ஒன்றையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
Better Today என்ற யூடியூப் சேனலுக்கு பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆஸ்கார் பாஸ்கர் அவர்களின் மகன் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், தன்னுடைய தந்தை தயாரித்த "தண்டிக்கப்பட நியாயங்கள்" படத்தில் ஏற்பட்ட சிக்கல் ஒன்றை விலாவரியாக கூறியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

"தண்டிக்கப்பட்ட நியாயங்கள்" படத்தை பொறுத்தவரை சென்ட்டிமென்ட்டான படம். பண்பட்ட திறமையான நடிகையால் மட்டுமே அதில் கேரக்டரை செய்ய முடியும்.. சாதாரணமாக எல்லோராலும் நடித்துவிட முடியாது.
சிறந்த நடிகை: சரிதா அப்போது புகழ்பெற்றிருந்தார்.. தேசிய விருதையும் வாங்கியவர்.. நிறைய படங்களிலும் அவர் நடித்து கொண்டிருந்தார். சரிதா மிக சிறந்த நடிகை என்பதில் சந்தேகமில்லை.. அதனால், இந்த படத்தில் சரிதாவை கதாநாயகியாக போடலாம் என்று என் அப்பா முடிவு செய்தார். இதற்காக சரிதாவிடம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அதற்குரிய ரூ.25 ஆயிரம் அட்வான்ஸ் பணம் தந்தாச்சு.. மிச்ச பணத்துக்கு செக் எழுதி, அக்ரிமென்ட்டும் போட்டு, சரிதா மேடமிடம் அதற்குரிய கையெழுத்தும் என் அப்பா வாங்கிவிட்டார்.
2வது நாளே சரிதா, அந்த செக்கை பேங்கில் போட்டு, என்னுடைய அப்பாவின் வங்கி கணக்கிலிருந்து ரூ.25 பணத்தை எடுத்துக் கொண்டார். இதையடுத்து, மைசூரில் சூட்டிங் நடத்துவதற்காக ஒட்டுமொத்த யூனிட்டும் தயாராகி விட்டது.
மேனேஜர் போன்: அந்த நேரம் பார்த்து, சரிதாவின் மேனேஜர் என்னுடைய அப்பாவுக்கு போன் செய்து, "அக்னி சாட்சி" படத்தில் நடித்து கொண்டிருப்பதால், சரிதா மேடமால் நாளைக்கு மைசூர் ஷூட்டிங் வரமுடியாது, ஒரு வாரம் கழித்து வரலாமா? என்று கேட்டிருக்கிறார்.. இதைக்கேட்டு என் அப்பா அதிர்ச்சியடைந்து, கடைசி நேரத்தில் இப்படி கேட்கிறீங்களே? சின்னபிள்ளைத்தனமாக இது இருக்கிறது.. தயாரிப்பாளர்களின் சிக்கல்கள் உங்களுக்கு தெரியாதா? நாளைக்கு ஷூட்டிங் இருக்கே" என்றார்.
பிறகு சரிதாவிடமே நேரடியாக என் அப்பா போனில் பேசினார்.. "அக்ரிமென்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு 25 ஆயிரம் வாங்கிட்டு, கடைசி நேரத்தில் இப்படி சொல்வது சரியல்ல" என்றார்.
சரிதா சண்டை: அப்போதும் சரிதா, தன்னால வரமுடியாது என்றார்.. இந்த நேரத்தில் சண்டை போடக்கூடாது என்று முடிவு செய்த என் அப்பா, அட்வான்ஸ் பணத்தை திருப்பி தருமாறு சரிதாவிடம் கேட்டார். அதற்கு சரிதா, "நான்தான் ஒருவாரம் கழிச்சு நடிச்சு தரேன்னு சொல்றேனே, அட்வான்ஸையும் தர முடியாது" என்றார்.
"பணத்தை தந்தால்தானே, இன்னொரு ஹீரோயினுக்கு தந்து என்னால புக் செய்ய முடியும்" என்று என் அப்பா கேட்டதற்கு, "வாங்கின அட்வான்ஸை திருப்பி தந்தது கிடையாது, இது என் பாலிசி" என்றார் சரிதா.
பிரபலமான பேட்டி: இதனால் என் அப்பா, அப்போது வண்ணத்திரை என்ற பிரபலமான பத்திரிகையை அழைத்து பேட்டி தந்தார்.. "கடைசி நேரத்தில் சரிதா இப்படி செய்துவிட்டார். நாளைக்கு ஷூட்டிங்கிற்கு இன்னொரு நடிகையை இனிமேல்தான் நான் தேடணும். இந்த நடிகைகள் இப்படியிருந்தால் எப்படி? இதெல்லாம் சரியான பாலிசியா?" என்று நடந்த பிரச்சனைகளை சொல்லிவிட்டார்.
இந்த பேட்டி தந்ததுமே நடிகர் சிவக்குமாருக்கு போன் செய்த என் அப்பா, "சரிதா கேரக்டருக்கு வேற யாரை போடலாம்?" என்று கேட்டார்.. உடனே சிவக்குமார், லட்சுமி மேடம் பெயரை சொல்லியதுடன், அவரே நேரடியாக லட்சுமி மேடத்துக்கும் போனில் பேசி சம்மதம் பெற்றார். உடனே என் அப்பா லட்சுமியை நேரில் சந்தித்து அட்வான்ஸ் தந்து, சரிதாவுக்கு எடுத்த மைசூர் டிக்கெட்டை லட்சுமியிடம் தந்தார்.
வண்ணத்திரை: இதனிடையே, வண்ணத்திரையில் வந்த பேட்டியை பார்த்ததுமே சரிதாவுக்கு கோபம் வந்துவிடடது. உடனே அதே வண்ணத்திரையை கூப்பிட்டு, "தயாரிப்பாளர் தந்த செக்கை பேங்கில் போட்டேன், ஆனால், அது பவுன்ஸ் ஆகிவிட்டது. அவர் தந்த பணமே எனக்கு வராதபோது, அதை எப்படி திருப்பி தருவது? என்றெல்லாம் கூறியிருந்தார்.
உடனே அந்த பத்திரிகையாளர்கள் மைசூரிலிருந்த என் அப்பாவிடம் இந்த பேட்டியை சொல்லி, அதற்குரிய பதிலை கேட்டார்கள். அதற்கு என் அப்பா, "சரிதாவுக்கு செக் தந்துட்டேன். 2வது நாளே, ரூ.25,000 என்னுடைய வங்கியிலிருந்து அவருக்கு சென்றுவிட்டது. அதற்குரிய ஸ்டேட்மென்ட்டை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன், அதையும் பத்திரிகையில் போடுங்க. இதன்பிறகும் தன் தவறை உணர்ந்து பணத்தை சரிதா தந்துடனும். இல்லாவிட்டால் சென்னை திரும்பியதுமே, சரிதா மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். இதையும் உங்க பத்திரிகையில் போடுங்க" என்றார்
திருப்பி தந்தார்: இந்த பேட்டி வெளியான அடுத்த 2 மணி நேரத்தில், எதுவுமே தெரியாத மாதிரி, 25 ஆயிரம் பணத்தை சரிதா தந்துவிட்டார்.. நடிகைகளுக்கு எப்போதுமே பணம் ஆசை.. தேதி இல்லாவிட்டாலும்கூட பணம் வர வர வாங்கி போட்டுக்கணும்" என்றெல்லாம் கூறியிருக்கிறார் பாலாஜி பிரபு
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications