கெனிஷா சொன்னது பொய்யா? ரவி மோகனுடன் கோவாவில் டூர்.. லீக்கான போட்டோ! ரசிகர்கள் கேள்வி இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரவிமோகன் ஆர்த்தி விவாகரத்து விவகாரம் கடந்த 2 வருடங்களாக ஓயாமல் பேசப்பட்டு வருகிறது. அதிலும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் பெயர் இந்த விவாகரத்துக்குள் வந்த பிறகு இவர்களை சுற்றி சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. ஒரு கட்டத்தில் ரவிமோகனை விட்டு விலக்குகிறேன் என்று கெனிஷா வெளியிட்ட பதிவு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதே என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் இப்போது வெளியாகியிருக்கும் ஒரு கோவா வீடியோ மீண்டும் அதே கதையை தூசி தட்டி எடுத்திருக்கிறது.

கோவாவில் ரவி மோகனும் கெனிஷாவும் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கெனிஷா ரவி மோகனுடன் நடந்து கொண்டிருப்பது போலவும், ஒரு இடத்தில் அவர் புகைபிடிப்பது போன்ற காட்சிகளும் இணையத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ரவி மோகன் பற்றிய சர்ச்சை

இந்த வீடியோ தற்போது வைரல் ஆனதற்கு காரணம் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? என்று கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் இல்லாததுதான். சில மாதங்களுக்கு முன்பு ரவி மோகன் கெனிஷா விவகாரம் உச்ச பெரிய அளவில் பேசப்பட்ட போது கெனிஷா தொடர்ந்து வந்த ஆன்லைன் விமர்சனங்கள், ட்ரோல்க்கள் காரணமாக சோசியல் மீடியாவில் இருந்து விலகுவதாகவும், சென்னையை விட்டு வெளியேறுவதாகவும் பேசி இருந்தார்.

கெனிஷா கம்பேக்

அதைவிட முக்கியமாக ரவிமோகனை அன்புடன் விட்டு விலகுவதாகவும் இனிமேல் அவருக்காக போராட போவதில்லை என்றும் அவர் பேசியிருந்தார். அதற்கு பிறகு ரவி மோகனும் செய்தியாளர்களை சந்தித்து உருக்கமாக பேசியிருந்தார். அதில் கெனிஷா தன்னை விட்டு விலகியது குறித்தும் அவர் பேசியிருந்தார். அதற்குப் பிறகு கெனிஷா சில மாதங்கள் சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருந்தாலும் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு திரும்பினார்.

Ravi Mohan Kenisha Francis

லீக்கான வீடியோஸ்

அப்படி இருக்கும்போது இப்போது இவர்கள் இருவரும் கோவாவில் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இது இப்போது எடுத்த வீடியோவா? அல்லது இருவரும் ஆரம்பத்தில் சேர்ந்து இருந்தபோது எடுத்த வீடியோவா? என்ற கேள்விகளும் எழுந்து இருக்கிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ரவி மோகனின் மாமியாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது ரவி மோகனுடன் தான் கெனிஷா இன்னும் கோவாவில் வசித்து வருகிறார், இருவரும் பிரியவில்லை அது சோசியல் மீடியாவில் போட்ட நாடகம் என்று பேசியிருந்தார்.

ரசிகர்கள் பேச காரணம்

இதனால் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவை பார்த்ததும் நெட்டிசன்கள் அப்போ சுஜாதா சொன்னது தான் உண்மையா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் கெனிஷாவுடன் கோவாவில் இருப்பது ரவி மோகனின் தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் ரவிமோகன் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய சுக, துக்கங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக இருக்கும் ரவி மோகன் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை பற்றியும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+