OTT Tamil This Week: மெகா பிளாக் பஸ்டர் படங்கள்.. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் மாஸ் காட்டுதே!
சென்னை: இந்த வாரம், OTT தளங்கள் புதிய பிளாக்பஸ்டர் படங்களால் நிரம்பி வழிகின்றன. Netflix, Jio Cinema, Amazon Prime, ZEE5 மற்றும் SonyLiv போன்ற ஓடிடி தளங்களில் பல்வேறு புதிய படங்கள் மற்றும் தொடர்கள் திரையிடப்பட உள்ளன. இந்த வீக் என்டை குதூகலமாக்க என்னவெல்லாம் பார்க்கலாம், ஒரு ரவுண்ட் அப்.
பிரபாஸ், கமல்ஹாசன்,அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் நடித்த "கல்கி 2898 AD", இப்போது அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ்சில் உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் Amazon Prime-லும், ஹிந்தி மொழியில் நெட்பிளிக்சிலும் படத்தை பார்க்க முடியும்.

ராயன்
தனுஷின் அதிரடி த்ரில்லர் "ராயன்" இன்று ஆகஸ்ட் 23 ஆம் தேதி அமேசான் பிரைமில் களமிறங்கிவிட்டது. ஜூலை 26 ஆம் தேதி வெளியான இந்த படம் வசூலில் நல்ல சாதனையை பதிவு செய்தது. தனுஷ் நடிப்போடு மட்டுமின்றி இப்படத்தை எழுதி இயக்கியும் இருக்கிறார். இதில் வரலக்ஷ்மி சரத்குமார், சரவணன், சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தனுஷின் 50வது படமான இது தமிழில் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

ஃபாலோ கர் லோ யார்
"ஃபாலோ கர் லோ யார்" என்ற ஸ்கிரிப்ட் இல்லாத தொடர், சமூக ஊடகங்களில் பரபரப்பான உர்ஃபி ஜாவேத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது இன்று அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

ஆங்கிரி யங் மென்
"ஆங்கிரி யங் மென்" என்ற ஆவணப்படத் தொடர் ஆகஸ்ட் 20 அன்று அமேசான் பிரைமில் வெளியானது. இந்தத் தொடர் 70களில் சலீம் கான்-ஜாவேத் அக்தர் உருவாக்கி வைத்த கோபக்கார இளம் ஹீரோ வகையை பிரதிபலிக்கிறது. எக்ஸெல் மீடியா & என்டர்டெயின்மென்ட் மற்றும் டைகர் பேபியுடன் இணைந்து சல்மான் கான் பிலிம்ஸ் தயாரித்துள்ள இதை, சல்மா கான், ரித்தேஷ் சித்வானி, ஃபர்ஹான் அக்தர், ஜோயா அக்தர் மற்றும் ரீமா காக்தி ஆகியோருடன் இணைந்து சல்மான் கான் தயாரித்துள்ளார்.

ஆக மொத்தம் வரைட்டியான ஓடிடி வெளியீடுகளை இந்த வாரம் நீங்கள் ரசிக்க முடியும். ரெடியா?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications