சேரனுக்கு என் நடிப்பை பார்தது வயிறு எரியுது.. அறிவுரை சொன்னவரை வசைப்பாடிய வாட்டர் மெலன் திவாகர்!
சென்னை: தன்னை யாராவது விமர்சித்தால் அதற்கு சரியான விளக்கத்தை கொடுக்காமல் அவர்களையே திருப்பி விமர்சிப்பது வாட்டர் மெலன் ஸ்டார் திவாகருக்கு வழக்கம் ஆகிவிட்டது. இயக்குனர் சேரன் ஒரு நிகழ்ச்சியில் திவாகருக்கு நடிப்பு குறித்து அட்வைஸ் கொடுத்திருந்தார். குறிப்பாக நடிகர் சிவாஜி கணேசனுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவது சரியல்ல என்று சேரன் சொல்லி இருக்கிறார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த திவாகர் வெளியிட்ட வீடியோவில் சேரனை கடுமையாக விமர்சித்திருப்பது புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தனியார் தொலைக்காட்சியில் இயக்குனர் சேரன் தொகுத்து வழங்கும் "யார் சரி" நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் கலந்து கொண்டார். அப்போது தனது ஸ்கூல் டைமில் இருந்து கலை ஆர்வம் அதிகமாக இருந்தது அதனால் தான் ஸ்டேஜில் அதிகமாக பரிசு வாங்குவேன். எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வேன் என்றும் சோசியல் மீடியாவில் வெளியாகும் தனது வீடியோக்கள் குறித்து பெருமையாக பேசியிருக்கிறார்.

சேரன் வைத்த குட்டு
தன்னுடைய வீடியோக்கள் பல மில்லியன் பார்வைகளை பெறுகிறது என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது சேரன் அவரிடம், மற்றவரிடம் நீங்கள் நிரூபிக்க வேண்டியது உங்களின் உண்மையான திறமை இருக்கிறது என்பதைத்தான். உங்களுடைய பேச்சு வளர்ச்சியை விட அதிகமாக இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள். உங்களை காமெடியாக பார்க்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் நீங்கள் உங்களை நடிகர் சிவாஜி கணேசனுடன் ஒப்பிட்டு பேசுவது தான். அதை பார்த்தபோது எனக்கு கோபம் வந்தது என்று சேரன் அட்வைஸ் கொடுத்தார்.
அது மட்டும் இல்லாமல் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படத்தில் வரும் நடிப்பை செய்து காட்ட திவாகரிடம் கேட்டார். வழக்கம்போல திவாகர் செய்து காட்டி இருந்தார். அவர் எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் சரி, தனது சோசியல் மீடியா வீடியோக்களிலும் சரி, இதே ரியாக்ஷன் தான் மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறார். தனது கைகளை வைத்து இதயத்தில் குத்துவது போல ஒரு ஆக்சன் போட்டு, இதுதான் சிவாஜி கணேசனின் ரியாக்சன், அவரைவிட நான் நல்லா நடிக்கிறேன் என்று அவர் பெருமையாக பேசி வருகிறார்.
சேரனுக்கு பதில் வீடியோ
அதற்கு தான் இப்போது சேரன் பதிலடி கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த விவகாரம் அத்துடன் முடிந்து விடவில்லை. நிகழ்ச்சிக்கு பிறகு திவாகர் வெளியிட்ட வீடியோவில் சேரனின் அட்வைஸை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக அவரையே விமர்சித்திருக்கிறார். "சேரன் சாருக்கு என்னுடைய நடிப்பை பார்த்து வயிறு எரியுது. என்னை சிவாஜி சாரோடு ஒப்பிடக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? எப்படியும் இப்போ உங்களுக்கு படங்கள் எதுவும் இல்லாம சும்மா தானே இருக்கீங்க, நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிப்பு பயிற்சி டாஸ்க்கில் எல்லோருக்கும் நடிப்பு சொல்லிக் கொடுத்ததை போய் பாருங்கள். என்னுடைய நடிப்பை பார்த்து பொறாமை படாதீங்க" என்று பேசி இருக்கிறார்.
தொடர்ந்து, "நான் சின்ன பையனாக இருந்தபோது உங்களுடைய பாரதி கண்ணம்மா படத்தை பார்த்திருக்கிறேன். அந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் இப்போது நீங்கள் பேசுவது சரி இல்லை" என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த பேச்சு தான் இப்போ சோஷியல் மீடியாவில் விவாதமாக மாறி இருக்கிறது.
ஜெயிலர் 2 மூர்த்தி கேரக்டருக்கு போட்டி
திவாகர் தர்பூசணியை சாப்பிட்டபடி வெளியிட்ட வீடியோ மூலமாகத்தான் சோசியல் மீடியாவில் அதிகம் பிரபலமானார். அதற்கு பிறகு தன்னைத்தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்று அழைத்துக் கொண்டார். அதோடு விட்டாரா? அதுவும் இல்லை, நான் தான் நடிப்பு அரக்கன் என்று அவருக்கு அவரே பட்டம் வைத்துக்கொண்டு, என்னை மக்கள் கொண்டாடுகிறார்கள் நான் ஜெயிலர் 2 படத்தில் நமோ நாராயணன் நடித்த மூர்த்தி கேரக்டரில் நடித்திருந்தால் வசூல் இன்னும் அதிகமாக பிச்சி இருக்கும். மூர்த்தி அண்ணன் கேரக்டர் எனக்காக எழுதுனது மாதிரி இருக்கிறது. அது நான் நடிக்க வேண்டிய காட்சி, என்றெல்லாம் பெருமையாக பேசி கொண்டிருக்கிறார்.
இதுதான் இவருக்கே வினையாக மாறி இருக்கிறது. இவருடைய வீடியோக்கள் மில்லியன் கணக்கான வியூஸ் பெறுகிறது. ஆனால் அவருடைய கமெண்ட் செக்சன் முழுக்க நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள்தான் குவிந்து வருகிறது. அதை எல்லாம் இவர் படிப்பாரா? இல்லையா? என்பதுதான் அனைவருக்குமே சந்தேகம்.



Click it and Unblock the Notifications
