வாட்டர்மெலன் ஸ்டார்.. ரூ.17 கோடியில் விஜய் ஆண்டனியின் பங்களா.. ஆமைக்கு மாலை போட்டு இதெல்லாம் அபத்தம்
சென்னை: விஜய் ஆண்டனி நடிக்கும் 25வது படம் சக்தித்திருமகன்.. இந்த படவிழாவை, தன்னுடைய 50வது பிறந்தநாள் விழாவுடன் சேர்த்து சென்னையில் கொண்டாடினார் விஜய் ஆண்டனி.. அப்போது, துப்பாக்கியால் சுட்டு விருந்தினர்களை மேடைக்கு அழைத்த விஜய் ஆண்டனி, பிறந்தநாள் கேக் வெட்டுவதற்கு பதிலாக பிரியாணி வெட்டினார்.. பிறகு ஒரு ஆமை பொம்மையை மேடைக்கு எடுத்து வந்து, மாலையிட்டு மரியாதை செய்தார். மார்கன் படம் வெற்றி பெற்றுள்ளதால், இனி ஆமையை அதிர்ஷ்டம் இல்லாதது என்று யாரும் சொல்லாதீர்கள் என்றார். இதுகுறித்துதான் பாலாஜி பிரபு கருத்து கூறியிருக்கிறார்.
Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "விஜய் ஆண்டனி இவ்வாறு செய்திருப்பதன் நோக்கம் சரியானது என்றாலும், அது பிறரது மனதை புண்படுத்தலாம். தன்னுடைய கருத்துக்களை கொள்கையாக சொல்லலாம். அல்லது படத்தில் காட்சியாகவும் வைக்கலாம்..

அதைவிட்டுவிட்டு, ஒரு பொதுவிழாவில், தனிநபர் விருப்பத்தை திணிப்பதும், அதை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவதும் தவறு..
வாட்டர் மெலன் ஸ்டார்
அதை நடிகர் சூர்யா கஜினி படத்தில் வாட்டர் மெலன் சாப்பிட்டதை பார்த்து, ஒருவர் அதை காப்பியடித்து நடித்தார்.. இப்போது அவர் வாட்டர் மெலன் ஸ்டாராகவே மாறிவிட்டார்..
கருப்பு படத்தில் சூர்யா, மீண்டும் தர்பூசணியை சாப்பிடுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.. ஆனால், அந்த வாட்டர் மெலன் ஸ்டார், தன்னை பார்த்துதான் சூர்யா காப்பியடித்துள்ளார் என்கிறார். இது எவ்வளவு பெரிய அபத்தம்?
விஜய் ஆண்டனியின் அபத்தம்
இப்படியான அபத்தத்தை ஒருவர் செய்கிறார் என்றால், மக்கள் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக செய்யக்கூடிய வேலைகள்தான் இதெல்லாம்.. அப்படித்தான் கூல் சுரேஷூம் சில விஷயங்களை செய்து வருகிறார்.. இதுபோன்றவர்களுடன், விஜய் ஆண்டனியும் இணைந்துவிடக்கூடாது என்பதே நம்முடைய கோரிக்கை.
பூனையை குறுக்கே விட்ட மன்சூரலிகான்
ஒருமுறை மன்சூர் அலிகான், தன்னுடைய படபூஜையின்போது, பூனையை குறுக்கே ஓடவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.. ஒவ்வொரு மக்களுக்கும் , ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும்.. அந்த நம்பிக்கைக்கு நாம் மரியாதை தரவேண்டும்.. நாலு சுவற்றுக்குள் செய்யக்கூடிய தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளை பொதுவெளியில் செய்யக்கூடாது.. இதை மன்சூரலிகான் செய்தாலும் தவறுதான், விஜய் ஆண்டனி செய்தாலும் தவறுதான்.
அதாவது ஒருவரின் நம்பிக்கையை சீரழிப்பதுபோல செய்யக்கூடாது. கொலைகாரன், எமன், பிச்சைக்காரன், ரத்தம் இப்படியெல்லாம் நெகட்டிவ்வாக பெயர் வைத்தால் படம் ஓடும் என்று நினைப்பதுகூட, ஒருவகையான மூடநம்பிக்கையே.
விஜய் ஆண்டனியை பொறுத்தவரை, இதுவரை நடித்த படங்களில் 4 படங்கள் நன்றாக ஓடியிருக்கிறது.. மற்றபடி அவர் நடித்த படங்கள் தோல்விப்படங்கள்தான்..
ரூ16 கோடிக்கு பங்களா
பிச்சைக்காரன் 1, பிச்சைக்காரன் 2 இரண்டுமே அவரது சொந்த படங்கள்.. அந்த படங்கள் நன்றாக ஓடி வெற்றி பெற்றன.. பெரிய அளவிலான லாபமும் கிடைத்தது.. பேங்க் கடன் போட்டு, 16 கோடி ரூபாய்க்கு ஆழ்வார்பேட்டையில் சொந்தமாக வீடு வாங்கிட்டாரு..
இதற்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்த படங்கள் எல்லாமே தோல்விப்படங்கள்தான்.. இன்றைய உண்மையான நிலவரம், பெரிய கடன் சுமையில் சிக்கியிருக்கிறார்.. இந்த கடனை நடித்து அடைப்பதற்காக முயன்று வருகிறார்.. கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் நடித்தும்கூட, அந்த பணத்தை அப்படியே வட்டி கட்டிவிடுகிறார்..
நாலு பேருடன் உட்கார்ந்து பேசி, படத்தயாரிப்பு, கடன் அடைப்பது போன்றவற்றை பற்றி விவாதிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, இதுபோன்ற கேமாளித்தனமான வேலைகளை செய்து, தவறான முன்னுதாரணமாகி, மக்கள் மனதிலுள்ள நல்ல பெயரை கெடுத்துக் கொள்ளக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications