திருமண சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லாவண்யா.. இத்தனை வருடம் திருமணம் செய்யாததற்கு காரணம் இதுதானா?
சென்னை: நடிகை லாவண்யாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.
44 வயதில் லாவண்யாவிற்கு திருமணம் தேவையா என்று பல்வேறு கேள்விகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
தன்னுடைய உண்மையான வயது பற்றியும் இத்தனை வருடங்கள் தான் எதற்காக திருமணம் செய்யவில்லை என்றும் நான் நடிகை லாவண்யா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

அறிமுகம்
நடிகை லாவண்யா தேவி 1997 ஆம் ஆண்டு வெளியான சூரியவம்சம் திரைப்படத்தின் சொப்னா என்ற கேரக்டரில் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி இப்ப வரைக்கும் பல திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். 44 வயதாகும் நடிகை லாவண்யா திடீரென்று தற்போது திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். நடிகை லாவண்யாவோடு சீரியலில் ஒன்றாக நடிக்கும் நடிகர்கள் பலரும் அவருடைய திருமணத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். இத்தனை வருடங்களாக இவருக்கு திருமணமாகாமல் இருக்கிறதா என்று பலரும் வியப்பில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

திடீர் திருமணம்
இந்த நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் லாவண்யா தேவி நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது நல்ல வரவேற்போடு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் நடிகை லாவண்யா தேவிக்கு திருமணம் ஆகி இருக்கும் தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் பிரசன்னா என்பவரை திருப்பதியில் திருமணம் செய்து இருந்தார்.

நடிக்காத காரணம்
இவர்களுடைய திருமணத்திற்கு சீரியல் பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். குறிப்பாக அருவி சீரியல் டீம் மொத்தமாக இவருடைய திருமணத்தில் கலந்து பல புகைப்படங்களையும் வெளியிட்டு வந்திருந்தனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு பேட்டி அளித்த லாவண்யா தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகள் நடிப்பிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டேன். அதற்கு பிறகு தான் எனக்கு அருவி சீரியலின் வாய்ப்பு கிடைத்தது .தற்போது அந்த சீரியலும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.

திருமணம் தள்ளிப்போன காரணம்
நான் திருமணமே வேண்டாம் என்று எல்லாம் தள்ளிப் போடவில்லை. நடிப்பில் கவனம் செலுத்தியதால் திருமணம் தள்ளிப் போய்விட்டது. என்னுடைய குடும்பம் தான் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. இதுவரைக்கும் அவர்களால் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விகளை நான் எதிர்கொண்டதே இல்லை என்று கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நடிகை லாவண்யாவிற்கு 44 வயதில் திருமணமா? என்று விமர்சனம் தற்போது சமூக வலைத்தளத்தில் எழுந்து வருகிறது.

கணவரின் ஆதரவு
தன்னை பற்றிய விமர்சனத்திற்கு நடிகை லாவண்யா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் தனக்கு தற்போது 43 வயது தான் ஆகிறது. வயது தப்பாக போட்டிருக்கிறார்கள். வயது என்பது வெறும் நம்பர் தானே இது போன்ற செய்திகளை எல்லாம் என்னை காயப்படுத்தவில்லை. என்னுடைய கணவர் பிரசாந்தும் என்னுடைய கேரியருக்கு ஆதரவாக தான் இருக்கிறார். படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயம் மீண்டும் நடிப்பேன் என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications