பொண்ணுங்க கிட்ட இதை பத்தி பேசாதீங்க ஓபன் ஆக பேசிய ரியா.. இப்போதான் நிம்மதியாக இருக்கிறாராம்
நடிகை ரியா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்
சென்னை: நடிகை ரியா சமீபத்தில் ராஜா ராணி சீசன் 2 சீரியல் இருந்து விலகி இருந்தார்.
தற்போது வரைக்கும் எந்த புது சீரியலிலும் நடிக்காமல் இருக்கும் இவர் தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அவருடைய வயது பற்றியும், அவருடைய உயரத்தின் அளவையும் கேட்டதற்கு ரியா பதில் கொடுத்து இருப்பது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

திடீரென விலகல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் இருந்து சமீபத்தில் சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா விலகி இருந்தார். தன்னுடைய விலகல் பற்றி திடீரென உருக்கமாக பேசியபடி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து அடுத்த நாளே புதிய நடிகை நடித்த எபிசோடு ஒளிபரப்பாகி இருந்தது. இந்த நிலையில் ரசிகர்கள் எதற்காக ரியா விலகினார் என்று தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். அதைத்தொடர்ந்து அதற்கான விளக்கத்தையும் தான் விலகியதற்கான உண்மை காரணத்தையும் ரியா கூறியிருந்தார்.

விலகளுக்கான காரணம்
அதில் தனக்கு ஒரு நாள் கூட லீவு கொடுக்கவில்லை என்றும் ஆரம்பத்தில் தனக்கு மாதத்தில் 15ஆம் நாளில் இருந்து 30-ஆம் நாள் வரைக்கும் தான் கால்ஷீட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆலியா மானசா வெளியேறிய நேரத்தில் கைவசம் எந்த எபிசோடுகளும் இல்லை என்பதற்காக என்னை இரண்டு ஷிப்ட் வேலை பார்க்க சொன்னார்கள். நானும் பார்த்தேன் பிறகு சில மாதங்கள் கழித்து எனக்கு ஒரு சில நாட்கள் விடுமுறை தந்திருந்தார்கள்.

அதிகப்படியான நேரம்
ஆனால் அதற்குப் பிறகு காலை தொடங்கி இரவு வரை முழு நேரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மற்றவர்களுக்கு ஆறு மணி உடன் முடிவடைந்து விடும். முதலில் வளசரவாக்கம் பகுதியில் சூட்டிங் எடுத்து கொண்டிருந்தனர். ஆனால் அதற்குப் பிறகு போலீஸ் ட்ரைனிங் காக வண்டலூர் பகுதியில் சூட்டிங் மாற்றினார்கள். காலை 7:30 மணிக்கு சூட்டிங் தொடங்கிவிடும் என்பதால் நான் வீட்டில் இருந்து 6:30 மணிக்கு எழுந்து செல்ல வேண்டும். அப்படி சென்றாலும் ஆறு முப்பது மணிக்கு மற்றவர்களுக்கு சூட்டிங் முடியும் நிலையில் எனக்கு மட்டும் இரவு 9 மணி 10 மணி வரை சூட்டிங் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

விடுமுறையே கிடையாது
குறிப்பாக டிரைனிங்கில் அந்த அறையில் சரவணன் ஆங்காங்கே தோன்றும் காட்சிகள் எல்லாம் இரவு 10:00 மணி வரை சூட்டிங் எடுக்கப்பட்டது. இதனால் என்னால் போனில் கூட என் குடும்பத்துடன் பேச முடியவில்லை. எனக்கு இது முதல் சீரியல் என்பதால் என்னால் இந்த சூழ்நிலைகளை கையாளவும் தெரியவில்லை. இன்றைக்கு எடுக்கும் சூட்டிங் வைத்து தான் நாளை அடுத்த நாள் சீரியல் ஒளிபரப்பாகும் எனவே கடைசி நிமிடம் தயாரித்து சீரியல் எடுக்கப்பட்டது. எனக்கு மிகவும் மன உளைச்சலாக இருந்தது. உடைமாற்ற கூட நேரம் கொடுக்க முடியாமல் என்னை அவசரப்படுத்தினார்கள். இதனால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், மாதத்தில் ஒன்று முதல் 15 நாட்கள் லீவு தர வேண்டும். 15 முதல் 35 ஆம் தேதி வரை சூட்டிங் ஆனால் எனக்கு ஒன்று முதல் 15 நாட்கள் லீவு கிடைக்காது. ஆறு நாட்கள் மட்டுமே லீவு கிடைக்கும் அதுவும் இடையில் ஒரு நாள் கிடைக்கும். அந்த லீவு போவதே தெரியாது. அடுத்த நாள் கிளம்பி சூட்டிங் செல்வது போல தான் இருக்கும்.இதனால் தான் சீரியலை விட்டு விலகினேன் என்றும் அவர் கூறினார்.

கேள்விக்கான பதில்
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரியாவிடம் தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். அவர்களின் கேள்விகளுக்கு தான் பதில் அளித்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ரியா பதிவிட்டு இருக்கிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் ரியாவிடம் உங்களுக்கு எத்தனை வயது ஆகிறது என்று கேட்க, அதைப்பற்றி ரியா இதை பெண்களிடம் கேட்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து உங்களுடைய உயரம் என்று இன்னொரு ரசிகர் கேட்க அது 5.9 இருக்கும் என்று நினைக்கிறேன் என கூறி இருக்கிறார். அதைத்தொடர்ந்து திருமணம் எப்போது என்றும், அடுத்த சீரியலில் எப்போது நடிப்பீர்கள் என்றும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்க அதற்கெல்லாம் பதில் அளித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ராஜா ராணி சீரியலில் இப்போ நீங்க இல்லையே என்று வருத்தப்படுகிறீர்களா? என்று கேட்க, இல்லை இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.இப்படி சகஜமாக ஜாலியாக பேசிய ஸ்கிரீன்ஷாட் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications