நெட்பிளிக்ஸ் கந்தகார் விமானக் கடத்தல் வெப் சீரிஸ்.. "இயக்குநர் செய்த வேலையை பாருங்க.." பாஜக கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனுபவ் சின்ஹா இயக்கிய 'ஐசி 814: தி கந்தஹார் ஹைஜாக்' என்ற நெட்ப்ளிக்ஸ் சீரிஸ் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விமர்சகர்கள் தொடரை பாராட்டியுள்ள நிலையில், பாஜக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மேலும் பாஜக ஆதரவாளர்களும் இந்த தொடரை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்துள்ளனர். கடத்தலில் இந்து மதத்தைச் சேர்ந்த யாருமே ஈடுபடவில்லை என்றபோதிலும் நெட்பிளிக்ஸ் தொடரில் கடத்தல்காரர்கள் சிலரின் பெயர்களை இந்து பெயராக இயக்குநர் சூட்டியதற்கு இவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா, கூறுகையில், இஸ்லாமியர்களல்லாத பெயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் பயங்கரவாதிகளின் குற்ற உணர்வை சட்டப்பூர்வமாக்கியுள்ளது படக்குழு என்று குற்றம் சாட்டினார். "ஐசி-814 ஹைஜாக் செய்தவர்கள் தங்கள் இஸ்லாமிய அடையாளத்தை மறைக்க போலி பெயர்களை வைத்திருந்தனர். ஆனால் பயங்கரவாதிகள் சூட்டிக் கொண்ட போலி பெயர்களை இயக்குநர் அனுபவ் சின்ஹா பயன்படுத்தியுள்ளார். அரசு அப்போது வெளியிட்ட உண்மையான பெயர்களை சூட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ott netflix

இதனிடையே தகவல் ஒலிபரப்பு அமைச்சக வட்டாரங்கள், நெட்பிளிக்சில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் 1999 இல் இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் ஐசி814 விமான கடத்தல் நிகழ்வின் உண்மை நிகழ்வுகளை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்று தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானி பயங்கரவாதிகளின் குற்றங்களை சினிமா மூலம் மறைப்பது இடதுசாரி நோக்கத்துடன் இணைந்திருப்பதாக மால்வியா மேலும் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி பெயரை மாற்றி வெளியிடுவதால் பலரும் கடத்தலில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதாக நம்பிவிடும் வாய்ப்பு உள்ளது. இது எதிர்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலவீனப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

ott netflix

மால்வியா மேலும் கூறுகையில், 1970களிலிருந்தே கம்யூனிஸ்டுகள் பாகிஸ்தானி பயங்கரவாதிகளின் குற்றங்களை மறைக்க சினிமாவைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த விஷயம், காலப்போக்கில் இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலவீனப்படுத்தும் என்று கூறியுள்ளார் மால்வியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+