சீமானின் தம்பி என்று சொல்லிவிட்டு.. அசீம் சொன்ன வார்த்தையை கேட்டீங்களா? சர்ச்சை பேச்சுக்கு விளக்கம்
சென்னை: சீமானின் சர்ச்சை பேச்சு மற்றும் நீங்களும் ஒரு இஸ்லாமியர் தானே? என்று கூறிய பத்திரிக்கையாளருக்கு பக்காவாக விளக்கம் கொடுத்துள்ள பிக் பாஸ் பிரபலம் அசீமின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அசீமை காண்டாக்குவதற்காக மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியே நிருபர் கேட்டாலும் கொஞ்சமும் அசராமல் சிரித்து கொண்டு சீமானின் பேச்சுக்கு முட்டு கொடுத்த அசீமை கமெண்ட்களில் பலர் பாராட்டியும் சிலர் வறுத்தெடுத்தும் வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் வாரத்தில் இருந்து இறுதியாக டைட்டில் வின் பண்ணும் வரை சர்ச்சை போட்டியாளராகவே வலம் வந்தவர் அசீம்.சீமான் பேசும் தமிழ் தேசியம் பற்றிய கருத்துக்கள் தனக்கு பிடிக்கும் என்றும் ஆனால் தான் ஒரு திமுககாரன் என்றும் வெளிப்படையாக கூறி வந்தார். அந்த நேரத்தில் அசீம் டைட்டில் வின் பண்ணுவதற்கும் விக்ரமன் நூலிழையில் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டதற்கும் நாம் தமிழர் கட்சியின் இணையதள தம்பிகள் தான் காரணம் என்று ஒரு கருத்தும் பரவியது.
சமீபத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் குறித்து சீமான் பேசிய மேடைப்பேச்சு சர்ச்சைக்கு உள்ளானது.கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்று சீமான் பேசிய பேச்சுக்கு பல தரப்பிலிருந்து கண்டனங்களும் குவிந்தது. சீமானின் இந்த சர்ச்சை பேச்சு குறித்து அசீமிடம் கேட்ட பொழுது, முதலில் அவர் பேசியது சரியான கருத்து தான் என்று கூறியவர். சீமான் பேசியதில் முன்னும் பின்னும் பேசியதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சாத்தானின் பிள்ளைகள் என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்றும் கூறினார்.
மறுபடியும் நிருபர் இது குறித்து கேள்வி எழுப்பிய போது சீமான் பேசியது தவறுதான் அந்த கருத்தை அவர் இப்படி கூறியிருக்கக் கூடாது என்றும் கூறினார். தொடர்ந்து நிருபர் அசீமிடம் இஸ்லாமியர்களை சாத்தானின் பிள்ளை என்று சீமான் கூறுகிறார், அப்படி என்றால் நீங்கள் இஸ்லாமியர்தானே சாத்தானின் பிள்ளைகளா நீங்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கேள்வியால் சற்று உணர்ச்சிவசப்பட்ட அசீம், ஆட்சி செய்த கட்சிகளை அமர வைத்த அனைவரையும் சேர்த்துதான் சீமான் அண்ணன் கூறியுள்ளார். அசீம் சாத்தானின் பிள்ளை, ஜோசப் சாத்தனின் பிள்ளை என்று யாரையும் குறிப்பிட்டு சீமான் கூறவில்லை,ஓட்டு போடும் சாதாரண குடிமகன் போல் நானும் ஓட்டு போடும்போது திமுகவிற்கு போடுவேன் அவ்வளவுதான். மற்றபடி நான் யாருக்கும் சப்போர்ட்டும் கிடையாது எதிர்ப்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த அசீம் ரசிகர்கள் சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் என்று கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர்.பிக் பாஸ் வீட்டில் மிகவும் உறுதியான மனிதராக தனது கருத்தை எடுத்துரைப்பது போல் காட்டிக் கொண்ட அசீம் இப்படி கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லாமல் மேலோட்டமாக பட்டும் படாமல் பூசிமொழுகினார் போல் பதில் சொல்லிவிட்டு நழுவி விடுகிறீர்களே என்று கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications