பெப்சி உமாவை ஞாபகம் இருக்கிறதா? பாண்டியன் ஸ்டோரில் அறிமுகம்..?இந்த கேரக்டர் தானா?
சென்னை: தொகுப்பாளர் பெப்சி உமா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
ஏற்கனவே தான் சின்னத்திரையில் சீக்கிரத்தில் வருவேன் என்று சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்து பெப்சி உமா இருந்தார்.
இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இவருடைய அறிமுகம் பாண்டியன் ஸ்டோரில் இருக்கும் என்று செய்திகள் பரவுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு பலதரப்பட்ட ரசிகர்களால் ரசிக்கப்படும் சீரியலாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது.
இத்தனை வருடங்களாக ஒன்றாக இருந்த பாண்டியன் ஸ்டோர் குடும்பம் இப்போது அடுத்தடுத்து பிரிந்து போய் இருக்கின்றனர். அதனால் இனி மீண்டும் சேர்வார்களா? அல்லது இது இன்னும் பிரச்சனை ஏற்பட இருக்கிறதா? என்று எல்லாம் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் இனி விரைவில் அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒன்று சேர்ந்ததும் கதை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போல தான் தற்போது கதையும் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அண்ணனோடு சண்டையிட்டு மாமனார் வீட்டுக்கு சென்று இருந்த ஜீவாவிற்கு மாமனார் வீட்டிலும் அடுத்தடுத்து அவமானங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

இதற்கு மூர்த்தி வீட்டில் எவ்வளவோ பரவாயில்லை என்று அடிக்கடி ஜீவாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கண்ணனும் கடன் மேல் கடன் வாங்கி கையில் பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யாவின் மருத்துவ செலவிற்கு கூட கதிர் தான் பணம் கொடுத்து உதவி இருக்கிறார். சாப்பாட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு பணம் இல்லை என்று தெரிந்ததும் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா கோபித்துக் கொண்டு கிளம்பி இருக்கிறார். சாப்பாட்டுக்கு இவ்வளவு பணம் ஆகிறது என்பதை புரிந்து கொண்ட கண்ணனுக்கு அண்ணனின் மீது பாசம் கூடுகிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் பெப்சி உமா அறிமுகமாக இருக்கிறார் என்ற செய்திகளும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே கண்ணனும் ஐஸ்வர்யாவும் youtube சேனல் ஒன்று தொடங்கி இருப்பதால் அவர்கள் பெப்சி உமாவை பேட்டி எடுப்பது போன்று கதை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பல திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களோடு நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையிலும், பெப்சி உமா அதை மறுத்த நிலையில் இப்போது சீரியலில் நடிப்பாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில நாட்கள் பொறுத்து இருந்து பார்த்தால் தெரியும்.












Click it and Unblock the Notifications