எழில் திருமணத்தை முன் நின்று நடத்தும் கோபி.. அமிர்தாவின் காதலை சேர்த்து வைப்பாரா? முடிவு இது தானா?
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் திருமணத்தின் மணமேடையில் பரபரப்பாக கோபி வேலை செய்து கொண்டிருக்கிறார். அமிர்தாவின் காதல் தெரிந்ததும் கோபி எடுக்கப் போகும் முடிவு பற்றி தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எழிலுடைய திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது.
எழில் ஏற்கனவே அமிர்தாவை காதலித்து வரும் நிலையில் வீட்டில் எழிலுடைய பாட்டி மற்றும் செழியன் வர்ஷினியை திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் வர்ஷினி மற்றும் எழிலுடைய திருமணம் மணமேடை வரைக்கும் வந்திருக்கின்ற வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.
இந்த நிலையில் அமிர்தா கடைசியாக மண்டபத்திற்குள் வந்ததும் கோபி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

எழிலின் சவால்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்த பரபரப்பான திருப்பங்கள் நடைபெற இருக்கிறது. இந்த சீரியலில் எழில் யாரை திருமணம் செய்த போகிறார் என்று ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து இருக்கின்றனர். ஏற்கனவே கோபியால் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. பாக்கியாவின் பெயரை வீட்டில் வைத்ததால் இந்த வீட்டை நான் விற்க போகிறேன் என்று கோபி பிரச்சனை செய்ய, இந்த வீட்டை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று எழில் சவால் விட்டு இருக்கிறார். எழில் விட்ட சவாலில் ஜெய்ப்பதற்காக பாக்யாவும் ராமமூர்த்தியும் பரம்பரை சொத்தை விற்கலாம் என முடிவு செய்தாலும் அதையும் விற்கவிடாமல் கோபி சூழ்ச்சி செய்திருக்கிறார்.

ஈஸ்வரியின் சுயநலம்
இந்த நிலையில் ஏற்கனவே எழில் அமிர்தாவை காதலித்து வரும் விஷயம் ஈஸ்வரிக்கு தெரிந்ததும் அமிர்தாவை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த திருமணம் நடக்கக்கூடாது என்று ஈஸ்வரி ஆரம்பத்தில் இருந்தே கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வீட்டில் இருக்கும் பண பிரச்சனையை காரணம் காட்டி வர்ஷினியை எழிலுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று முயற்சி செய்து அதற்காக எழிலை பிளாக்மெயில் செய்து வருகிறார். தொடர்ந்து கோபியின் மீது எவ்வளவு தப்பு இருந்தாலும் அது அவன் அப்படித்தான் என்கிற ஒரே வார்த்தையால் முடித்துவிட்டு இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் எழில்தான் என்று ஈஸ்வரி மற்றும் செழியன் இருவரும் சுயநலமாகவே பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த மணமேடை பிரச்சனை
எழிலுடைய காதலுக்கு ஆரம்பத்திலேயே ஈஸ்வரி முட்டுக்கட்டை போட்டாலும் பாக்கியா நான் சேர்த்து வைக்கிறேன் என்று வாக்கு கொடுத்து இருந்தார். இதனால் யார் சொன்னது நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் வர்ஷினி மற்றும் எழிலுடைய பெயர் போட்டு மண்டபத்திலே மணமேடையில் அலங்கரித்து இருக்கின்றனர். அங்கு அனைவரும் இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே கோபியின் திருமணத்தில் பெரும் பரபரப்போடு இருந்த நிலையில் கடைசியில் கோபி ராதிகாவை திருமணம் செய்திருப்பார்.

நல்ல முடிவு எடுங்க கோபி
அதுபோல எழில் அமிர்தாவை திருமணம் செய்வாரா? அல்லது வர்ஷினியை திருமணம் செய்வாரா? என்று எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இத்தனை பிரச்சனைக்கும் காரணமான கோபி எழிலின் திருமணம் மேடையில் மும்பரமாக வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் கூடவே ராதிகாவும் இருக்கிறார். எழிலும் பாக்கியாவின் அருகில் மணமேடையில் இருக்க, கீழே கோபி ராதிகா அனைவரும் திருமணத்தை பார்ப்பதற்காக வந்திருக்கின்றனர். இந்த நிலையில் அமிர்தா இனி மண்டபத்திற்குள் வந்து நிற்க ,எழிலுடைய காதல் விஷயம் தெரிந்ததும் கோபி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பரபரப்பாக எபிசோடுகள் வர இருக்கிறது. இந்த நிலையில் எழிலுடைய திருமணத்திற்கு கடைசியில் கோபி சம்மதம் தெரிவித்து விடுவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. என்னை போல என்னுடைய மகனும் கஷ்டப்பட வேண்டாம் என்று கோபி கூறுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் என்ன வேணாலும் ட்விஸ்ட் ஏற்படலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications