ராமராஜனின் பிடிவாதம்.. "கரகாட்டக்காரன்" படத்துல கவுண்டமணி நடிக்க வந்தது எப்படி தெரியுமா? பிரபலம் நச்
சென்னை: கரகாரட்டக்காரன் படத்தில் கவுண்டமணிக்கு எப்படி அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றியும், கவுண்மணியின் குணநலன்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் நடிகர் கவுண்டமணியின் குணநலன்களை பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

ரசிகர்கள்: "ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வது கவுண்டமணிக்கு சுத்தமாக பிடிக்காது.. செந்தில் போன்றோர் ரொம்ப கட்டாயப்படுத்தினால், வேண்டா வெறுப்பாக வந்து போட்டோவுக்கு நிற்பார். அதேபோல, தலையில் விக் இல்லாவிட்டால், யாருக்குமே கவுண்டமணியை அடையாளம் தெரியாது. இது அவருக்குள் கொஞ்சம் வருத்தம்தான்.
சத்யராஜ் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர்.. கவுண்டமணியும் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர்.. ஆனால், சத்யராஜூம், மணிவண்ணனும் கல்லூரியிலிருந்து படித்து வந்தவர்கள்.. அதனால் அவர்கள் இருவரின் காமெடி வேற மாதிரி இருக்கும். கவுண்டமணியின் காமெடி வேற மாதிரியாக இருக்கும். ஆனால் மணிவண்ணன், சத்யராஜ் என எல்லாருமே, கவுண்டமணியை அண்ணன் என்றுதான் கூப்பிடுவார்கள். சீனியர் என்பதால், அனைவருமே கவுண்டமணியை அண்ணன் என்றுதான் சொல்வார்கள்.
வணக்கம், வணக்கம்: அதேபோல, சிவாஜி கணேசனுக்கு யாராவது வணக்கம் சொன்னால், மறுபடியும் வணக்கம் சொல்ல மாட்டார். அதுபோலவே கவுண்டமணியும், பதிலுக்கு யாருக்குமே வணக்கம் வைக்க மாட்டார். "இருக்கட்டும் இருக்கட்டும், வச்சிக்க வச்சிக்க" என்பார்.. எப்போதுமே அறிவாளிகளுக்கு ஒருவித திமிர் இருக்கும்.
கவுண்டமணியை பொறுத்தவரை சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட்.. ஆயிரம் மேடைகளை ஏறியவர்.. ஞாபகசக்தி நிறைந்தவர்.. டயலாக் பேப்பரை இன்னொருவரை படிக்கவிட்டு, அதை அப்படியே மனதில் ஏற்றிக் கொண்டு நடித்துவிடுவார். கரகாட்டக்காரன் படத்தின் தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமியும், மற்றொரு புரொடக்ஷன் மேனேஜரும் திமுகவை சேர்ந்தவர்கள்.. இவர்கள் ராமநாராயணனின் நபர்களும்கூட.
கரகாட்டக்காரன்: கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி நடிக்க வந்தது பற்றி ராமராஜன்கூட சமீபத்தில் உறுதி செய்திருந்தார். அப்போது எஸ்எஸ் சந்திரனும் திமுகவில் செல்வாக்காக இருந்தார்.. எனவே, எஸ்எஸ்சந்திரன், செந்திலும்தான் கரகாட்டக்காரன் படத்திற்கு காம்பினேஷன்.. ஆனால், அப்போதே அதிமுகவில் சேர்ந்துவிட்டார் ராமராஜன்.
படத்தின் டைரக்டர் கங்கை அமரனிடம், "எஸ்எஸ் சந்திரன் திமுகவில் இருப்பதால், திமுக சம்பந்தப்பட்ட விஷயத்தையே பேசுவார். அது சரியா வராது.. அதனால், அவருக்கு பதில் கவுண்டமணியை இந்த படத்தில் போடுங்க" என்றார்..
கங்கை அமரன்: உடனே கங்கை அமரன், "இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று எஸ்.எஸ் மாமா கிட்ட சொல்லிட்டேனே.. இப்போ எப்படி திடீர்னு மாற்ற முடியும்?" என்று கேட்டுள்ளார்.. அதற்கு ராமராஜன், "கவுண்டமணியை வைத்து 2 நாள் சீன் எடுங்க.. நல்லா இல்லாவிட்டால், மாற்றிக் கொள்ளுங்கள்" என்று ராமராஜன் சொல்லி உள்ளார்.
கவுண்டமணி ஹீரோவாக நடித்து படம் எதுவும் ஓடாமல், 3 மாசம் வீட்டில் சும்மா இருந்த நேரம் அது.. உடனே கரகாரட்டகாரன் படத்தின் சீன்கள் எடுக்கப்பட்டது.. கவுண்டமணி ஓஹோன்னு நடிச்சார்.. செந்திலுடன் காம்பினேஷன் ஒர்க்அவுட் ஆகிவிட்டது.. கவுண்டமணிக்கு ரீஎன்ட்ரிதான் கரகாட்டக்காரன்..
ராஜ்கிரண்: அதுவரை கவுண்டமணி, செந்தில் சோலாவாக காமெடி நடிச்சிட்டு இருந்தவங்க, இந்த படத்துக்கு பிறகு தொடர்ந்து காம்பினேஷன் பண்ணாங்க. ராமராஜன் படங்களிலும் கவுண்டமணி தொடர்ந்து வந்தார். ஆனால், ராஜ்கிரனுக்குதான் கவுண்டமணியின் நடவடிக்கைகள் பிடிக்காம போயிடுச்சு.. அதுக்காகவே வடிவேலுவை கொண்டுவந்தார்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications