பல நாள் ஆசை,எதிர்பார்த்தது வந்துவிட்டது.. மகிழ்ச்சியை கொண்டாடும் மகாலட்சுமி.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: இந்த நாளுக்காகவே திருமணத்தை செய்திருந்த மகாலட்சுமியின் ஆசை தற்போது நிறைவேறிட்ட மகிழ்ச்சியை கணவரோடு கொண்டாடி இருக்கிறார்.
தல தீபாவளி கொண்டாடும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தீபாவளி நாளில் மகாலட்சுமி தன்னுடைய கணவருக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்.

தல தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி நாளில் மகிழ்ச்சியாக எல்லோரும் மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, இந்த தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாட வேண்டும் என்று கண்டிஷன் போட்டு திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமியும் தன்னுடைய தல தீபாவளியை கணவர் ரவீந்தரோடு சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். இருவரும் மேட்சிங் மேட்சிங் உடை அணிந்து சிறப்பாக தீபாவளியை வரவேற்று ஒரு சில போட்டோக்களை எடுத்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களோடு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

அப்போ தொகுப்பாளர் இப்போ வில்லி
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குவதில் மூலமாகவும் ரசிகர்களுக்கு ஏற்கனவே பழக்கமானவர்தான். இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஷனை பார்த்து 90ஸ் கிட்ஸ்கள் பலர் இவருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர். தொகுப்பாளராக அறிமுகமான விஜே மகாலட்சுமி தற்போது சின்னத்திரை சீரியல்களில் கதாநாயகிகளை மிரட்டும் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

திடீர் திருமணம்
வில்லியாக நடித்தாலும் தனக்கென்று இருக்கும் ஒரு கெத்து, அது தனி சிறப்பு என்று அடிக்கடி மகாலட்சுமி நிரூபித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் பலமுறை சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் மகாலட்சுமி அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்பட்டதே கிடையாது. ஆரம்பத்தில் கணவரோடு பிரச்சனை, அதற்கு பிறகு இவருடன் சீரியலில் ஒன்றாக நடித்த நடிகருக்கும் இவருக்கும் தப்பான உறவு என்ற ஒரு பிரச்சனை என இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்து கொண்டிருந்த வண்ணமாகவே இருந்தது .சில மாதங்களாகத்தான் இவருடைய பெயர் எந்த இடங்களிலும் அடிப்படையாமல் இருந்த நிலையில், இவருடைய திடீர் திருமணம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.

சூப்பர் சத்தியம்
சமூக வலைதளத்தில் ரெண்டிங் ஜோடியாக இருக்கும் மகாலட்சுமி தன்னுடைய கணவரோடு தீபாவளியில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு அதற்கு அவர் வெளியிட்ட கேப்ஷன் தான் ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. "உங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் தீபாவளி போன்றது .எனவே என்றென்றும் இப்படியே இருப்போம் என்று சத்தியம் செய்வோம். லவ் யூ மை புருஷா..."என்று மகாலட்சுமி பதிவிட்டு இருக்கிறார். இவருடைய இந்த பதிவிற்கு இவருடன் அன்பே வா சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் டெல்னா இனிய தலை தீபாவளி என்று இருவருக்கும் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களும் அதிகமானோர் இவர்களுடைய தல தீபாவளிக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications