டி. ராஜேந்திரனால் அழாத நாளே கிடையாது.. முதலில் அந்த விளம்பரத்தில் நடித்தது!மனம் திறந்த நடிகை ரேணுகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளித்திரை சின்னத்திரையில் நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் நடிகை ரேணுகா தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து பல தகவல்களை கூறி இருக்கிறார்.

ஸ்ரீரங்கத்தில் பிறந்த இவர் தமிழ் சினிமாவில் எப்படி அறிமுகமானார் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

திரைப்படங்களில் நடிக்கும் போது டி ஆர் ராஜேந்திரனால் தான் அழாத நாளே இல்லை என்று கூறியிருக்கிறார்.

நடிகை ரேணுகாவின் ஆரம்ப காலம்

நடிகை ரேணுகாவின் ஆரம்ப காலம்

சின்னத்திரை, வெள்ளிதிரையாக இருந்தாலும் ஒரு சில நடிகைகள் தான் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருப்பார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை ரேணுகா. இவர் வெள்ளி திரையிலும் சின்ன திரையிலும் நடித்து பிரபலமானவர்தான். பெண்களுக்கு புரட்சியான திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களின் அம்மாவாகவும் திரைப்படங்களில் நடித்து பெயர் வாங்கிய நடிகை ரேணுகா தன்னுடைய ஆரம்ப காலத்தை குறித்து தான் எப்படி இந்த சினிமாவில் வளர்ந்து வந்தேன் என்று குறித்தும் பல தகவல்களை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

ஸ்ரீரங்கம் பொண்ணு

ஸ்ரீரங்கம் பொண்ணு

அதில் நான் எப்படி ஒரு நடிகையாக மாறினேன் என்று இப்போதும் எனக்கு வியப்பாக இருக்கிறது. என்னுடைய சொந்த ஊர் ஸ்ரீரங்கம் தான். அப்பா ஒரு அட்வகேட்டாக இருந்தார். அவர் திடீரென இறந்த பிறகு ஏற்பட்ட சூழ்நிலையால்தான் நாங்கள் சிறுவயதிலேயே வேலை தேடி சென்னைக்கு வந்தோம். அங்கே கோமல் சுவாமிநாதனின் குழுவில் நாடகக் கலைஞராக வேலைக்கு சேர்ந்தேன். நானும் பி ஏ பொருளாதாரம் அந்த காலத்திலேயே படித்திருக்கிறேன் என்று தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து நடிகை ரேணுகா உருக்கமாக பேசியிருந்தார்.

அழ வைத்த டி ராஜேந்திரன்

அழ வைத்த டி ராஜேந்திரன்

மேலும் அந்த காலத்திலேயும் தமிழ் நடிகைகள் என்றால் அந்த அளவிற்கு வரவேற்பு கிடையாது. அந்த நேரத்தில் டி. ராஜேந்திரன் அவருடைய திரைப்படத்திற்கு கதாநாயகி தேடிக் கொண்டிருக்கிறார். அந்த படம் சம்சார சங்கீதம் அந்த படத்தில் நான் செலக்ட் ஆனேன். அந்த படம் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒன்றரை வருடங்களுக்கு போனது. ஆனால் டி ராஜேந்தர் கசமுசான்னு திட்டுவாரு, டயலாக் வரலன்னு வைங்க கசமுசான்னு திட்டிக்கொண்டே இருப்பாரு. ஆனால் அந்த நேரத்தில் நான் ஒவ்வொரு நாளும் அழுதது தான் ஜாஸ்தி என்று கூறியிருக்கிறார்.

காரணம் இதுதானாம்

காரணம் இதுதானாம்

ஏன்னா இப்ப இருக்கிற மாதிரி அப்ப எல்லாம் டிஜிட்டல் கிடையாது. அப்போ பக்கத்துலயே கிர் என்று சத்தம் கேட்டுகிட்டே இருக்கும். குறிப்பா ராஜேந்திரன் சாரின் டயலாக்கில் ஒருமுறை இருக்கும் டயலாக் மறுமுறை வராது. அப்படி கஷ்டப்பட்டு பேசி முடித்து கடைசி நேரத்தில் பார்க்கும்போதுதான் எனக்கே கஷ்டமாக இருந்தது. ஆக இதைவிட கூட கொஞ்சம் நல்லா நடிச்சு அழகா பேசி இருக்கலாம் என்று தோணுச்சு. ஆனா அப்போ படமே முடிஞ்சு போச்சு.

நாடகங்களில் நடிப்பு

நாடகங்களில் நடிப்பு

ஆனால் டி ராஜேந்திரன் சார் வேற லெவல் குரு தான். அவரை யாராலும் அடிச்சுக்க முடியாது. அந்த அளவிற்கு எல்லா விஷயங்களையும் கற்றுக் கொடுப்பார்.அதற்கு முன்பு நான் எட்டு வருடங்களாக டிராமாக்களில் நடித்திருக்கிறேன். குறிப்பா தண்ணீர் என்கிற நாடகம், நள்ளிரவில் பெற்றோம், இருட்டிலே தேடாதிங்க என ஒரு சில நாடகங்களும் நான் இந்தியா முழுக்க பல மேடைகளில் நடித்திருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு எனக்கு பட்டர்பிளையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான்தான் பட்டர்பிளையில் முதல் முதலாக நடித்தது. இப்போதும் என்னுடைய போட்டோ தான் அந்த விளம்பரத்தில் இருக்கிறது. அது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் பல தகவல்களையும் கூறி இருக்கிறார்.

எதார்த்தமான நடிப்பு

எதார்த்தமான நடிப்பு

தற்போது இவருடைய நடிப்பை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இவருடைய கல்கி, மகளிர் மட்டும், தங்கைக்கு ஒரு தாலாட்டு, திருடா திருடா, அயன் திரைப்படத்தில் சூர்யாவின் அம்மாவாக நடித்ததாக இருந்தாலும் சரி, சின்ன திரையில் கங்கா யமுனா சரஸ்வதி சீரியலாக இருந்தாலும் சரி அதைத் தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்பு வெளியான நெஞ்சத்தைக் கிள்ளாதே என பல சீரியல்களும் இவருடைய எதார்த்தமான நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார் என்று பலரும் புகழ்ந்து வருகிறார்கள். உங்களுக்கு இவருடைய நடிப்பில் பிடித்த திரைப்படங்கள் மற்றும் சீரியல்களை டக்கென்று நினைவிற்கு வந்ததும் கமெண்டில் பதிவிடுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+