வயிற்றில் குழந்தை இருக்கும்போது சூட்டிங்குக்காக ஆலியா செய்த செயல்..பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்
சென்னை: என்னதான் வேலை முக்கியமாக இருந்தாலும் அதற்காக இப்படியா?? என்று ஆலியா செய்த செயலை பார்த்து பலர் பதறி வருகின்றனர்.
Recommended Video
ராஜா ராணி சூட்டிங் ஸ்பாட்டில் ஆலியா நடந்து கொண்டதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ராஜா ராணி செம்பா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ஆலியா மானசா முதல் பாகத்தில் திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துவிட்டார். இந்த சீரியலின் கதாநாயகனை வாழ்க்கையில் கதாநாயகனாக இவர் தேர்ந்தெடுத்ததும் அவருடைய ரசிகர்கள் ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்பு வாழ்த்துக்களை கூறிவந்தனர். ராஜா ராணி முதல் பாகத்தில் செம்பா கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பதிந்து போன ஆலியா மானசாவிற்கு இப்ப வரைக்கும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இரண்டாம் பாகத்தில் சந்தியா
ஏற்கனவே ஆலியா மானசாவிற்க்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது அவர் இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் முதல் குழந்தை பிறந்து சிறிது காலம் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தற்போது இரண்டாம் பாகமும் அவருக்கு நல்ல ஒரு கேரக்டரை கொடுத்திருக்கிறது. இந்த சீரியலில் சந்தியா கேரக்டரில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் இவர் இரண்டாவதாக கர்ப்பமாக இருக்கிறார். இது அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான். இந்த சீரியலில் இவர் ஒரு போலீஸ் ஆபிசராக ஆசைப்பட்டுக் கொண்டு தனது கணவருக்காக அதை மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

படப்பிடிப்பு வீடியோ
தனக்கு பிடிக்காத திருமணமாக இருந்தாலும் தனது தந்தையின் ஆசைப்படி இவர் இந்த திருமணத்தை செய்து கொண்டதால் திருமணத்திற்கு பிறகு இது தான் தன் குடும்பம் என்று இவர் வாழ தொடங்கிவிட்டார். இந்த நிலையில் தற்போது சந்தியா தன்னுடைய கணவர் சரவணன் வெற்றிக்காகவும் அவருடைய திறமையை நிரூபிப்பதற்காக வும் போராடிக் கொண்டிருக்கிறார். சமையல் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் சரவணன் வெற்றி பெற்று வீடு திரும்பும் நிகழ்ச்சிகள் தற்போது படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

இப்படி ஒரு விளம்பரமா
கதையின்படி ஒரு ஆற்றைக் கடந்து ராஜா-ராணி-சீரியல் குழுவினர் செல்வது போன்று படமாக்கப்பட்டிருக்கிறது.ஏற்கனவே ஆலியாவிற்கு நீச்சல் தெரியாது. இந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் ஆலியா மானசா அந்த ஆற்றை கடந்து செல்வதை பார்த்து ரசிகர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். என்னதான் இருந்தாலும் சூட்டிங்கிற்காக இப்படி ஒரு ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று பலர் கூறி வருகின்றனர் ஆனால் பல நெட்டிசன்கள் அந்த அளவிற்கு ஆற்றிலும் தண்ணீர் வரவில்லை குறைவாகத்தான் வருகிறது. எதற்காக இந்த வீண் விளம்பரம் என்று தங்களுக்கே உரிய வழக்கமான நக்கலோடு கலாய்த்து வருகிறார்கள். இந்த எபிசோடு இன்னும் ஒரு சில வாரங்களில் ஒளிபரப்பப்படும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications