என் போராட்டம் தொடரும் பிக்பாஸ் விக்ரமன் கூறிய வார்த்தை.. கடைசியில் அப்பாவின் நெருடல் வார்த்தை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கிராண்ட் பினாலே கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் அசின் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரை தொடர்ந்து விக்ரமன் ரன்னராகவும் ஷிவின் ரன்னர் அப் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரமன் மேடையில் பேசிய வார்த்தை ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நான் ஒவ்வொரு இடத்திலும் போராடி தான் வெற்றியை பெற்று இருக்கிறேன் இதுவரையும் அதுபோல நான் இரண்டாவது வந்ததில் வருத்தப்படவில்லை. வெளியேயும் என் போராட்டம் தொடரும். இப்போதும் சொல்கிறேன் அறம் வெல்லும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

எதிர்பாராத திருப்பங்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடைசி கட்டத்தை எட்டி தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்லும் விதமாக கடைசி நேர வெற்றியாளர் பட்டியல் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து விக்ரமன் அல்லது ஷிவின் ஜெயிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் கருத்து கூறி வந்திருந்த நிலையில், தற்போது அசீம் ஜெயித்திருக்கிறார். இது விக்ரமுடைய ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. இந்த நிலையில் விக்ரமன் இரண்டாவதாக ரன்னராவற்கு என்ன பேச போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

மாறாத போராட்ட குணம்
ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு இடத்திலும் விக்ரமன் அறம் வெல்லும் என்று கூறிக் கொண்டிருந்தார் .பிக் பாஸ் வீட்டிற்குள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் குரல் கொடுத்து தன்னுடைய குணத்தை அனைவருக்கும் காட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் விக்ரமன் ரன்னராக தேர்ந்து எடுக்கப்பட்ட பிறகு கமல் விக்ரமனை பேச சொல்ல அப்போது அங்கிருக்கும் ரசிகர்கள் அறம் வெல்லும் என்று கூக்குரல் இடுகின்றனர். சிறிது யோசித்து விக்ரமன், "காலம் பூராவும் போராடிட்டே இருக்கக்கூடிய குணம் கொண்டவன் நான். இந்த போராட்டம் தொடரும். மக்களுக்கான பயணம் தொடரும் என்று சொல்ல, கூட்டத்தில் கரகோசை ஒலிக்கிறது .உலகம் பூராவும் பரவி வாழக்கூடிய தாய் தமிழர் சொந்தங்கள் ஆகிய அனைவரும் தந்த தீர்ப்பையும் தலைவணங்கி மனமாற ஏற்கிறேன் என்று தலை சாய்த்து கும்பிடுகிறார்.

தந்தையின் பாராட்டு
இப்போதும் அறம் வெல்லும் என்று கையை தூக்கி விக்கிரமன் கூற அதற்கு கமல்ஹாசன் இது உங்கள் வெற்றிக்கான முதல் படி இதை இப்போதும் சொல்கிறேன் அறமே வெல்லும் என்று கூறுகிறார். பின்பு விக்ரமனின் தந்தை மேடைக்கு அழைத்து பேச சொல்கின்றனர். அப்போது உண்மையில் தன்னிலை மாறாமல் நடுநிலைவாதியாக இருந்த விக்கிரமன் அதற்கு ரசிகர்கள் இத்தனை நாளும் கொடுத்த ஆதரவுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல பிக் பாஸ் பெரிய மேடை மிகப் பிரம்மாண்டமான மேடை முப்பது மில்லியன் மக்கள் பார்த்து இருக்கிறார்கள் அந்த அளவிற்கு ஆடியன்ஸை ரீச் ஆகி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

பெற்றோருக்கு பெருமை
அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசன் ஐயா நேற்று எங்களிடம் பேசும் போது சொன்னார்கள் வெற்றி தோல்வி என்பது இல்லை. வெற்றியும் ஒன்றுதான், தோல்வியும் ஒன்றுதான். அந்த கையை தூக்கி இருந்தால் அவர் வெற்றி, இந்த கையை தூக்கி இருந்தால் இவர் வெற்றி, இரண்டு பேரும் சமத்துக்கு வந்து விட்டார்கள். இவர்களை குறை கூற முடியாது. இவர்கள் ஒரு தராசு தட்டை வைத்து சரிசமமாக செய்து இருக்கிறார்கள் .ஏதோ நிபந்தனைக்காக சிலதை செய்து இருக்கிறார்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறி இருக்கிறார் .உண்மையில் கமல் அனைவரையும் செதுக்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் .ஒரு கம்யூனிகேஷன் இல்லாத இடத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல தான் எல்லோரும் இருக்கிறார்கள். அந்த மாதிரி இத்தனை நாளும் அனைவரும் சர்வே பண்ணி இருக்கிறீர்கள். விக்ரமன் இந்த மேடை வரைக்கும் கொண்டு வந்தது ஒரு பெற்றோராகிய எங்களுக்கு பெருமை தான். நாங்கள் உண்மையில் அவரை பாராட்டுகிறோம் என்று பேசி முடித்திருக்கிறார்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications