பீஹாரி பிரியங்கா.. சுயமரியாதை மணிமேகலை.. அப்ப இது அத்தனையும் நாடகமா கோப்ப்பால்? இதென்ன புது ட்விஸ்ட்
சென்னை: மணிமேகலை - பிரியங்கா விவகாரம், குக் வித் கோமாளியின் டிஆர்பிக்காக நடத்தப்பட்ட நாடகமா? அல்லது பிக்பாஸ் சீசன் 8-க்காக நடத்தப்பட்ட நாடகமா? என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு ரவி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
"நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, பிரியங்கா - மணிமேகலை பிரச்சனை தேவைதானா? என்று பலரும் கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள். ஆனால், இந்த விவகாரம் இன்னமும் ஓயவில்லை..

ஆதரவு: இந்த ஒரு வாரமாகவே எங்காவது ஒரு இடத்தில் பிரியங்காவுக்கு ஆதரவு கிடைக்குமா என்று பார்த்து கொண்டே வருகிறேன். ஒரு இடத்தில்கூட ஆதரவு வரவில்லை.. இன்னமும் அடிச்சி துவைச்சிட்டுதான் இருக்காங்க..
நான் "கன்னடத்து பெண்" என்று பிரியங்காவை ஒரு வீடியோவில் சொன்னதற்கு, "பீகாரி, பீகாரி என்று கமெண்ட்களை பதிவிடுகிறார்கள்.. பீகாரியோ, குஜராத்தியோ, யாராக இருந்தால் என்ன? நம் இந்தியாவை சேர்ந்தவர்கள்தானே? விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும்.
பிக்பாஸ்: பிக்பாஸ் வீட்டுக்குள் அன்று பிரியங்கா செய்த அரசியலை, இப்போது வீடியோவாக நெட்டிசன்கள் வெளியிட்டு வருகிறார்கள்.. குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் நிரூப், பிரியங்காவை பார்த்து பேசிய வீடியோதான், இப்போது டிரெண்டிங்கில் ஓடிட்டு இருக்கு.. "நீ ஒரு செல்ஃபிஷ்.. என்ன வேணும்னாலும் செய்வே.. மற்றவர்களின் கஷ்டத்துக்கு ஆறுதல் சொல்வது போல சென்று, அவர்களது கஷ்டத்தை ரசிக்கக்கூடிய நபர் நீ" என்று பிரியங்காவிடம் சொல்வதை பார்த்து நமக்கே ஆச்சரியமாக உள்ளது
சினிமாவில் வருவதை போல "பொம்பள பிரகாஷ்ராஜ்" கேரக்டரா இது? விஜய் டிவி சேனல் பிரியங்காவுக்கு ஆதரவு தருகிறது.. பிரியங்கா டிவி என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் சொல்கிறார்கள். இதற்கு நிறைய காரணங்களும் சொல்கிறார்கள். ஆனால், அதெல்லாம் உண்மைத்தன்மை இல்லை. அதற்குள் நாம் போக வேண்டியதுமில்லை.
என்ன காரணம்: ஆனால், இந்த பெண்ணை மட்டும் விஜய் டிவியில் ஏன் இப்படி வளர்க்கிறீர்கள்? மற்றவர்களை ஏன் நசுக்கிறீர்கள்? என்ற கேள்விதான் எழுகிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் பிரியங்கா வந்ததுமே எல்லாருமே அலறிவிட்டார்கள். பிரியங்கா அப்போது டார்கெட் செய்தது தாமரையைதான்.. அப்போது ஒவ்வொரு நாளும் பிரியங்கா அந்த வீட்டில் பிரச்சனைகளை தந்து கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் டைட்டில் வின்னராக பிரியங்காவை கொண்டு வர நிறுவனம் முயற்சித்திருக்கிறது. ஆனால், கமல் சார் அதற்கு வார்னிங் கொடுத்தாக தகவல் வருகிறது.
ஆச்சரியம்: திறமையானவர்கள், மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் எல்லாம் இருக்கும்போது, இப்படி பிரியங்காவை வின்னராக அறிவிக்க முடியாது என்று எச்சரித்தாராம் உலகநாயகன் கமல்ஹாசன். இந்த பெண் இப்படியொரு அரசியல் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாரும் நமக்காக ஜால்ரா அடிக்கும்போது, மணிமேகலை மட்டும் தன்னை ஜால்ரா தட்டலையே, குழைந்து பேசலையே, சலாம் போடலையே? என்ற எண்ணம்தான் பிரியங்காவுக்கு வந்துள்ளது.
இந்த நேரத்தில், சுயமரியாதையை கையில் எடுத்ததுதான், மணிமேகலையின் மிகப்பெரிய பலமாக உருவெடுத்துள்ளது., ஆனால், இந்த பிரச்சனையே, ஒரு செட்டப் செல்லப்பாடா என்கிறார்கள்.. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி நன்றாக போய் கொண்டிருக்கிறது. அடுத்த சீசன் நன்றாக நடக்க வேண்டும்.
கமல்ஹாசன்: அதேபோல, கமல்ஹாசன் இல்லாத பிக்பாஸ் சீசன் வரப்போவதால், அதற்கான எதிர்பார்ப்பும் உள்ளது.. விஜய் சேதுபதி மீது நிறைய நம்பிக்கை இருக்கிறது என்றாலும், இந்த 100 நாளும் விஜய் சேதுபதி எப்படி கையாள போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் மணிமேகலையை அனுப்புவதற்காகவே இப்படியொரு நாடகம் நடத்தப்படுகிறது என்ற தகவலும் கசிந்து வருகிறது.
அதாவது, பரபரப்பு செய்து, மீடியாவில் பேசப்பட்டால்தான், மக்கள் சப்போர்ட் கிடைக்கும், அப்போதுதான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய முடியும்.. இதைத்தான் அன்று கூல் சுரேஷ் செய்திருந்தார்.. அதுபோல, அதற்கான நாடகம் இது என்கிறார்கள்.
நாடகமா: ஆனால், உங்க காசு வேணாம், உங்க நிகழ்ச்சியும் வேணாம், மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லிவிட்டு போன மணிமேகலை, இது போன்ற நாடகத்துக்கு ஒப்புக் கொண்டிருப்பாரா? அப்படியே ஒப்புக் கொண்டால், அது மணிமேகலைக்குதான் பின்னடைவாக இருக்கும்.. மணிமேகலை - பிரியங்கா விவகாரம், குக் வித் கோமாளியின் டிஆர்பிக்காக நடத்தப்பட்ட நாடகமா? அல்லது பிக்பாஸ் சீசன் 8-க்காக நடத்தப்பட்ட நாடகமா? என்று இனிமேல்தான் தெரியவரும்" என்கிறார் செய்யாறு ரவி.
இதனிடையே, சூப்பர் சிங்கர் பூஜா, பிரியங்காவின் தோழியான பாவனி ரெட்டி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சுனிதா போன்றோர் திடீரென பிரியங்காவுக்கான ஆதரவை தந்துள்ளார்கள்.. அதேபோல, குரேஷியும் பிரியங்காவுக்கே ஆதரவை வழங்கினார்.. பிரபல நடிகை ஷகிலாவும் பிரியங்காவுக்கு ஆதரவை வழங்கி, மணிமேகலையை விமர்சித்துள்ளதும் இங்கு பெரிதும் கவனம் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications