தனலட்சுமி பற்றி ஹாட்ஸ்டார் போட்ட பதிவு.. கடைசியில் இப்படி ஒரு ட்விஸ்ட்? இதை எதிர்பார்க்கலையே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரம் வெளியேறிய தனலட்சுமி பற்றி hotstar புதிய பதிவு வெளியிட்டு இருக்கிறது.
எந்த செய்தி சேனல்களுக்கும் தனலட்சுமி பேட்டி கொடுக்கவில்லையே என்று பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் அதைப் பற்றி ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதுவரைக்கும் இல்லாத வகையில் தனலட்சுமி விஷயத்தில் புது மாற்றம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
முதல்முறையாக தனலட்சுமியை பற்றி hotstar தங்கள் திறப்பு கருத்தை கூறியிருக்கின்றனர்.

கோபத்துக்கு குறைவில்லை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேறி வருவார்கள். அந்த வகையில் கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனலட்சுமி வெளியேற்றம் இருந்தது. தனலட்சுமி ஆரம்பம் முதலே விளையாட்டில் வெறிகொண்டு விளையாடி வந்தார். தான் எப்படியும் ஜெய்த்து விட வேண்டும் என்ற ஒரே ஒரு இலக்கை மையமாகக் கொண்டு அவருடைய விளையாட்டு இருந்தது. கோபப்படும்போது இவர் அசீமிக்கு சற்றும் குறைந்தவர் இல்லை என்று சொல்லும் விதத்தில் தான் நடந்து கொண்டார். அசிமே கூட இவருக்கு சில நேரங்களில் அட்வைஸ் கொடுக்கும் விதத்திலும் தனலட்சுமி தன்னுடைய கோபத்தை காட்டியிருக்கிறார்.

மக்கள் பிரதிநிதி
மக்கள் பிரதிநிதியாக இந்த சீசனில் முதல் முறையாக கலந்து கொண்ட தனலட்சுமி பலமுறை தான் டாஸ்க் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக விளையாடிய விளையாட்டு ரசிகர்களை ரசிக்க வைக்கும் விதத்தில் இருந்தது. அதுவும் முதல் வாரத்தில் பொம்மை டாஸ்க்கில் இவருடைய விடாப்பிடியான விளையாட்டை ரசிகர்கள் அதிகமாக ரசித்து ஆதரவு கொடுத்து வந்தனர். அதனாலேயே பெரிய அளவில் இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியது. எந்த பின்புலமும் இல்லாமல் சாதாரண நிலையில் இருந்து வந்த தனலட்சுமிக்கு முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ஆதரவு கிடைக்கத் தொடங்கியது.

எதிர்பாராத வெளியேற்றம்
அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் இவர் ஜி பி முத்து, அசல் கோளாறு,அசீம் ஆகியோருடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் காரணமாக ரசிகர்களின் மத்தியில் முகசூழிப்பையும் பெற்று வந்தார். ஆனாலும் இவரும் அசீமும் இந்த நிகழ்ச்சியில் சண்டை போடாமல் இருந்தால் நிகழ்ச்சியில் சுவாரசியமே இருக்காது என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்து கூறிக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு ஏத்தி கொண்டு இருந்த தனலட்சுமி கடந்த வாரம் வெளியேறியது பெரிய அளவில் ஏமாற்றம். அவரை விட உள்ளே ஒன்றுமே பேசாமல் எதுவும் செய்யாமல் இருக்கும் போட்டியாளர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்று பலர் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர் .இந்த நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தனலட்சுமி பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்து வருகிறது.

தொழில்நுட்ப கோளாறு
இதற்கு முந்தைய போட்டியாளர்கள் வெளியே வந்ததும் டிவி சேனல்கள் அவர்களை சுற்றி சுற்றி பேட்டி எடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்தது, இவர்களுடைய சொந்த வாழ்க்கையில் நடந்தது, பிடித்தது, பிடிக்காதது என்று எல்லாத்தையும் ரசிகர்களோடு ஷேர் செய்து வருகிறார்கள். ஆனால் தனலட்சுமி விஷயத்தில் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றும் அதனால் தனலட்சுமி சீக்ரெட் ரூமில் இருந்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் சில தொழில்நுட்ப காரணங்கள் காரணமாக தனலட்சுமி லைவில் வர முடியவில்லை என்று காரணத்தை கூறி இருக்கின்றனர். இது ரசிகர்களை மேலும் சந்தேகங்களை எழுப்பி, எப்படியும் இந்த வாரம் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் தனலட்சுமிக்கு வந்து விடுவார் என்று உறுதியாக ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications