உங்களுக்கு வந்தா ரத்தமா?எந்த வகையில் நியாயம்.. அசீம் ரொம்ப சாப்ட் கேரக்டர்.. தனலட்சுமி கூறிய வார்த்தை

அசீம் ரொம்ப சாப்டான கேரக்டர், கேமராக்கு முன்பும், சரி கேமராக்கு வெளியேவும் சரி, அவர் யாரைப் பற்றியும் புறம் பேச மாட்டார் என தனலட்சுமி கூறி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசீமுடைய கேரக்டர் பற்றி தனலட்சுமி பல தகவல்களை கூறி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் தான் என்னை போன்றே அசீமுடைய கேரக்டர் இருக்கும் ஆனால் வெளியே ரொம்ப அமைதியானவர் என்று தனலட்சுமி கூறி இருக்கிறார்.

அசீம் இதுவரைக்கும் யாரைப் பற்றியும் அவர்கள் இல்லாத போது பேசமாட்டார், அவர்கள் என்னதான் நம்மை குறை கூறினாலும் அவர்களை பற்றி பேச மாட்டார் என்று தனலட்சுமி பெருமையாக கூறியிருக்கிறார்.

தொடரும் பிரச்சனை

தொடரும் பிரச்சனை

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இந்த சீசனின் போட்டியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி கொடுத்து வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் இவர்களுடைய வீடியோக்கள் தான் அதிகமாக எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இவர்கள் பேசும் வார்த்தைகளை வைத்து நெட்டிசன்கள் ஒரு பக்கம் கலாய்த்து கொண்டிருந்தாலும் மாறி மாறி ஒரு சில போட்டியாளர்கள் பல்வேறு தகவல்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் தான் இவர்களுடைய பிரச்சனை முடிவடையாமல் இருந்தது என்று பார்த்தால் வெளியே வந்தும் இது முடிவே இல்லாமல் தொடர்ந்து வருகிறது.

விக்ரமனின் கருத்து

விக்ரமனின் கருத்து

அந்த மாதிரி தான் டைட்டில் வின்னர் ஆக விக்ரமன் வருவார் என்று ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் அசீம் டைட்டில் ஜெயித்ததும் ரசிகர்கள் அதிகமாக அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல விக்ரமும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பிக் பாஸ் கிராண்ட் பினாலே மேடையில் மக்களின் தீர்ப்பை நான் மதிக்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் கொடுத்த பேட்டிகளில் இந்த ஓட்டு முறை தவறானது என்று கூறி இருக்கிறார். அதை குறித்து தற்போது போட்டியாளராக இருந்த தனலட்சுமி கலாய்த்து வருகிறார்கள்.

அசீம் கேள்வி

அசீம் கேள்வி

உங்களுக்கு வந்தால் ரத்தம் அதுவே எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? இது எந்த வகையில் நியாயம்? இதுவே அந்த நபரோ அல்லது அவரை சார்ந்தவர்களோ ஜெயித்திருந்தால் இது மக்கள் எங்களுக்கு கொடுத்த வரவேற்பு, ஆதரவு, மக்களின் ஆசை இதுதான். என்றெல்லாம் பேசி இருப்பார்கள். ஆனால் இதுவே நான் அல்லது என்னுடைய தங்கச்சி தனலட்சுமி என்னுடைய மாப்பிள்ளை கதிரவன், மணிகண்டன் இவர்களில் யாராவது ஒருவர் ஜெயித்திருந்தால் மட்டும் இது பொய்யானது என்றெல்லாம் பேசுவார்களா? இது எந்த வகையில் நியாயம் என்று அசீம் கேட்டிருக்கிறார்கள்.

அசீம் பற்றி தனலட்சுமி கருத்து

அசீம் பற்றி தனலட்சுமி கருத்து

இந்த நிலையில் தனலட்சுமி எனக்கும் அசீமிற்க்கும் பிக் பாஸ் வீட்டுக்குள் அதிகமாக சண்டை வந்திருக்கிறது. அதற்கு காரணம் எங்கள் இருவருடைய கேரக்டரும் ஒரே போல இருப்பதால் இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டும் தான் எங்கள் இருவருடைய கேரக்டர் ஒன்று போல இருந்தது. பிக் பாஸுக்கு வெளியே அசீமுடைய கேரக்டர் வேறு. அவர் ரொம்பவே சாஃப்ட்டான கேரக்டர். அமைதியான கேரக்டராக இருக்கிறார். அவர் அந்த இடத்தில் இல்லாதவர்களை பற்றி பேசுவதே கிடையாது. யாராவது உங்களை பற்றி அந்த வார்த்தை சொன்னால் இப்படி சொன்னார் என்றால் அது சொல்லிவிட்டு போகட்டும் என்று எளிமையாக அதை கடந்து விடுகிறார். இந்த கேரக்டர் தான் எனக்கு அசீமிடம் அதிகமாக பிடித்திருக்கிறது என்று தனலட்சுமி கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+