மீண்டும் நடிக்க தொடங்கியதும் கணவருக்கு ஆலியா கொடுத்த இன்ப அதிர்ச்சி... என்னம்மா யோசிக்கிறாங்க!?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கதாநாயகி ஆலியா மானசா தற்போது தன்னுடைய கணவருக்கு துபாயில் கொடுத்த பரிசு சமூக வலைதளத்தில் பலருடைய பாராட்டையும் பெற்று வருகிறது.
விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவி சீரியலில் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இனியாவிற்கு சமூக வலைத்தளத்திலும் ஆதரவு அதிகரித்து வருகிறது.
சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க துவங்கியிருக்கும் நிலையில் தன்னுடைய கணவருக்காக ஆலியா கொடுத்த இன்ப பரிசு அவருடைய கணவர் அதிகமாக மகிழ்ச்சியடைந்து இருக்கிறாராம்.

திடீர் திருமண அறிவிப்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த ஆலியா மானசா முதல் சீரியலில் சீரியலின் கதாநாயகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இளைஞர்களையும் குடும்ப இல்லத்தரசிகளையும் கவர்ந்து வந்த ஆலியா மானசா தன்னுடைய காதலன் சஞ்சய் உடன் தன்னுடைய காதல் ரகசியத்தை சமூக வலைதளத்தில் கூறியதும் ரசிகர்கள் அதிகமாக அதிர்ச்சி அடைந்தனர். பின்பு இவர்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் சரியாக இருப்பதாகவே இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது.

மீண்டும் நடிப்பு தொடக்கம்
ராஜா ராணி முதல் சீசனில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அந்த சீரியலில் போலவே நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டு சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த ஆலியா சீரியல் முடிவடைந்தது முதல் குழந்தையை பெற்றெடுத்தார். பின்பு இரண்டாவது பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது குழந்தையும் பெற்று தற்போது அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் சன் டிவியில் இவருக்கு இனியா சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்ததும் தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் தன்னுடைய நடிப்பை தொடங்கி இருக்கிறார்.

சமூக வலைத்தள பதிவு
இந்த நிலையில் இனியா சீரியல் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது டிஆர்பி அளவில் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து சன் டிவியில் இந்த சீரியல் மூன்றாவது நான்காவது இடத்தில் இருந்து வரும் நிலையில் சூட்டிங் இல்லாத நேரத்தில் தனது கணவர் சஞ்சீவ் உடன் ஆலியா துபாய் பறந்திருக்கிறார். அங்கே புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா தான் எங்கே சென்றாலும் அங்கே புகைப்படங்களை எடுத்து குவித்து அதை சமூக வலைத்தளத்தில் தட்டி விட்டு வருவது வழக்கம் தான் தற்போது கூட அதை தான் செய்திருக்கிறார்.

எதிர்பார்க்காத பரிசு
ஆலியா மானசாவும் சஞ்சய்வும் அடிக்கடி பரிசு பொருட்களை மாற்றிக் கொள்வது எப்போதும் நடப்பது தான். சில மாதங்களுக்கு முன்பு தான் ஆலியா மானசா தனது உடல் எடையை குறைத்ததற்காக சஞ்சி அவருக்கு ஹேண்ட் பேக் பரிசளித்திருந்தார். அதே நிலையில் தற்போது அவருடைய கணவருக்காக ஆலியா மானசாவும் ஒரு சூட்கேஸை பரிசாக வழங்கி இருக்கிறார். அதை குறித்து புகழ்ந்து சஞ்சீவ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் .இந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது. சமீபத்தில் கயல் சீரியலில் சஞ்சீவ் அதிகமாக காணப்படாத நிலையில் தற்போது மனைவியோடு இவர் சுற்றிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் இவர் சீரியலில் இருந்து நிஜத்தில் வெளியேறப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications