பிக் பாஸ் சனத்துக்கு என்ன ஆச்சு..கண்கலங்கி அழுதபடி வெளியிட்ட வீடியோ..மறக்கிறது ரொம்ப கஷ்டமாம்..!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சனம் ஷெட்டி கண்ணீரோடு இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
ரீல்ஸ் வீடியோவில் குறிப்பிட்ட டயலாக்குக்கு கண் கலங்கியபடி அவர் பேசியதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
மறக்கிறது ரொம்ப கஷ்டம் அழகாய் பிறந்தது என் தப்பா என்கிற வசனம் அந்த வீடியோவில் இடம் பெற்று பிடித்திருக்கிறது.

சனம் ஷெட்டி எனும் பெயரைச் சொன்னதுமே படபட பேச்சால் தனக்கே உரிய திமிரோடு அடுத்தவர்களின் மீது பாசத்தோடும் இருந்த ஒரு கேரக்டரை தான் ஞாபகத்திற்கு வருகிறது. இதற்கு முன்பு இவர் ஒரு மாடலாக இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் பரிச்சயமான முகம் ஆக மாறிவிட்டார் .இந்த வீட்டில் ஆரம்பத்தில் இவர் இருக்கும் போது இவரை ரசிக்காதவர்கள் கூட நாள் போகப்போக இவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர்.
அந்த அளவிற்கு தன்னுடைய உண்மையான கேரக்டரால் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.சனம் 2016இல் மிஸ் தென்னிந்தியா எனும் பட்டத்தை பெற்றிருந்தாலும் சினிமா படங்களிலும் அடிக்கடி பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். ஒரு நடிகையாகவும் மாடலாகவும் ஜொலித்துக் கொண்டிருந்த இவரை இந்த பிக்பாஸ் வீட்டில் அறிமுகப்படுத்தியதும் பலருக்கு யாருடா இந்த பொண்ணு இப்படி இருக்கிறதே என யோசிக்க வைத்து விட்டார்.
ஆனால் சிலரை பார்த்ததும் பிடிக்கும் சிலரை பழகிப் பார்த்தால் தான் பிடிக்கும் என்பது போல இவரை பழகி பார்க்க தான் பலருக்கும் பிடித்துவிட்டது. இவர் இந்த வீட்டில் பாதியிலேயே வெளியேறி போகிறார் என அறிவிப்பு வெளியானதும் கூட பதறிப்போன ரசிகர்கள் இவருக்காக சமூக வலைத்தளங்களில் ஹாஸ்டேக் உருவாக்கி இவர் மீது வைத்திருக்கும் பாசத்தை தெரிவித்து வந்தனர்.
முதல்முதலில் அம்புலி படத்தில் பூங்காவனம் எனும் கேரக்டரில் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றார் .அதற்குப்பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பேரும் புகழும் வாங்கி தந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் .இந்த நிகழ்ச்சி மூலம் இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார்.

கோவக்கார பெண்ணாக இருந்தாலும் பாசக்கார பொண்ணு என அடிக்கடி நிரூபித்து மக்களின் மனதில் நல்ல இடத்தைப் பெற்று தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தையும் பெருகிவிட்டார் .இதுவும் போதாது என்று இந்த நிகழ்ச்சியில் இவரை காணாமல் தவித்து வந்த அவருடைய ரசிகர்களுக்காக அடிக்கடி இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போட்டு வருகிறார். அதுவும் தற்போது இவர் வெளியிட்ட போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது.
அந்த வகையில் தற்போது வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவில் பச்சை வண்ணத்தில் உடை உடுத்திக் கண்களுக்கு எடுப்பாக மேக்கப் போட்டு, உனக்கு என்ன மறக்கணுங்கிறது கஷ்டமான விஷயம் என்கிறது எனக்கு தெரியும். அழகா பிறந்தது ஏன் தப்பா? என்கிற துப்பாக்கி திரைப்படத்தில் வரும் டயலாக்கை தன்னுடைய ஆக்டிங்கை காட்டி இருக்கிறார். அதை ரசிகர்கள் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications