மனோஜின் லாஸ்ட் நிமிடம்.. புது தகவலா இருக்கே? மனோஜ்ஜின் மனைவி நந்தனாவின் வீட்டில் இளையராஜா பேசினாரா?
சென்னை: "சினிமாவில் நடித்த படங்கள் அனைத்தும் தனக்கு தோல்வியடைந்த நிலையில், மீண்டும் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை மனோஜுக்கு அதிகரித்து கொண்டே வந்தது.. குறிப்பாக அஜித்துக்கு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.. இதைத்தவிர 3 கதைகளையும் கையில் ரெடியாக வைத்திருந்தார்" என்று பத்திரிகையாளர் விகே சுந்தர் தெரிவித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, வலி அதிகமாகி, நெஞ்சை பிடித்துக் கொண்டே மனோஜ் விழுந்து இறந்துவிட்டதாக செய்திகள் பரவிய நிலையில், மனோஜ்ஜின் கடைசி நிமிடங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார் விகே சுந்தர்.
SS Buzz என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் விகே சுந்தர், "மனோஜ்ஜை ராசியான மகனாகவே பாரதிராஜா பார்த்தார்.. மனோஜ் பிறந்த பிறகுதான் அவருக்கு அத்தனை பட வாய்ப்புகளும் வந்தன.. மனோஜ் கிரியேஷனில், பாரதிராஜா தயாரித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்டாயிற்று. சமீபகாலமாக பிரைவசிக்காக இருவருமே தனித்தனியாக குடியிருந்து வருகிறார்கள்..

நிதி சிக்கல் - உதவி
மனோஜ் திருமணம் செய்த காலத்திலிருந்தே, அவருக்கான மாத செலவை பாரதிராஜா தந்து கொண்டுதான் இருந்தார். முதன்முதலில் மனோஜ் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்குவதால், மறைமுகமாக பாரதிராஜாவும் ஒரு பெரிய தொகையை அதில் முதலீடு செய்தார்.. படமும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது.. ஆனால், ரிலீஸ் நேரத்தில் நிதி சிக்கல் வந்துவிட்டது.
அதனால், சுசீந்திரனும், மனோஜும், அவரது அம்மாவை பார்த்து உதவி கேட்டார்கள்.. உடனே மனோஜ்ஜின் அம்மா, தான் கழுத்தில் அணிந்திருந்த நகை உட்பட, வீட்டில் சேர்த்து வைத்திருந்த நகைகளையும் தந்தார். அந்த பணத்தை அடமானம் வைத்து, படம் ரிலீஸ் செய்யப்பட்டது..
பொய் பொய்யா சொல்றாங்க
தங்கள் மகன் முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக தாய், தகப்பன் இருவருமே உதவி செய்திருக்கிறார்கள்.. அதனால், எந்த காலத்திலும் அவர்களுக்குள் இடைவெளியும், பிரிவும் இல்லை. மற்றபடி இவர்களுக்குள் பிரிவு கிடையாது., தவறான தகவல்களை பரப்பி கொண்டிருக்கிறார்கள். கண்டென்ட் தேவை என்பதற்காகவும், பரபரப்புக்காகவும் யூடியூப்களில் சிலர் இப்படியான வேலையை செய்கிறார்கள்.
சின்ன வயதிலிருந்தே மனோஜுக்கு டயாபடிக் இருந்துள்ளது. ஆனால், கன்ட்ரோலில் வைத்துக் கொள்ளவில்லை.
தன்னுடைய உடம்பு மீது கவனம் செலுத்தவில்லை.. அதிலும் கடந்த 2 வருடங்களாகவே ஜங்க் ஃபுட்டாகவே அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார்.. இது இதய நோய் வரை சென்றுவிட்டது.
தூங்க சென்ற மனோஜ்
ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யும் நிலைமை வந்துவிட்டது.. ஆபரேஷனும் நல்லபடியாக முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டார். 20 நாள் ரெஸ்ட்டில் இருந்தார்.. 20வது நாள் மதியம் உணவு சாப்பிட்டுவிட்டு, 3 மணிக்கு தன்னுடைய அப்பாவிடம் போனில் பேசியிருக்கிறார். பிறகு ஓய்வு எடுக்க தூங்க சென்றுவிட்டார்.
வழக்கமாக 1 அல்லது 2 மணி நேரம் தூங்கி எழுந்துவிடுபவர், அன்று 3 மணி நேரமாகியும் எழவில்லை.. பிறகுதான் படுக்கையிலேயே தூக்கத்திலேயே உயிர் பிரிந்துள்ளது தெரியவந்துள்ளது. மனோஜ்ஜின் உறவுக்காரர்கள் எனக்கு இந்த தகவலை சொன்னார்கள்.
இயக்குனராக விரும்பவில்லை
மனோஜுக்கு இயக்குனராக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், அதை பாரதிராஜா விரும்பவில்லை.. காரணம், இயக்குனராக இருப்பதில் தான் படும் கஷ்டத்தை, தன்னுடைய மகனும் படக்கூடாது என்று நினைத்தார்.. எத்தனையோ பேரை நடிகராக உயர்த்தியிருக்கிறோம், மகனையும் நடிகனாக்கிவிட்டால், கஷ்டப்படாமல் பிள்ளை இருக்கட்டுமே என்று நினைத்துதான், தாஜ்மகால் படத்தில் அறிமுகப்படுத்தினார்.
ஆனால், படங்கள் அனைத்தும் தனக்கு தோல்வியடைந்த நிலையில், மீண்டும் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை மனோஜுக்கு அதிகரித்தது.. அஜித்துக்கு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது.. 3 கதைகளையும் கையில் வைத்திருந்தார்.
இளையராஜாவிடம் ஓடிய மனோஜ்
சாதுரியன் படத்தில் தான் நந்தனாவை முதன்முதலாக சந்தித்தார்.. உடனே தன்னுடைய காதலையும் சொல்லிவிட்டார். பிறகு 2 வருடங்கள் இருவரும் காதலித்தனர்.. ஆனால், நந்தனா வீட்டில் இவர்களின் காதலை ஏற்கவில்லை. தன்னுடைய காதல் பற்றி பாரதிராஜாவிடம் சொல்ல பயந்த மனோஜ், இளையராஜாவிடம் சென்று திருமணம் செய்து வைக்க உதவி கேட்டுள்ளார்.
பிறகு இளையராஜாதான், நந்தனாவின் பெற்றோரிடம் "மனோஜ் நல்ல பையன், திருமணம் செய்து வையுங்கள்" என்று பேசி சம்மதிக்க வைத்துள்ளார். சினிமாவில் தோற்றிருக்கலாம், ஆனால் மனைவி, குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் மனோஜ்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications