அடக்கடவுளே! விஷாலுக்கு என்ன ஆச்சு? மீண்டும் மீண்டுமா? போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் விஷால் இப்போது தனது மகுடம் படத்தின் ப்ரோமோஷனின் எடுத்த சில புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகின்றன. காரணம் விஷாலின் ஒரு கையில் பெரிய கட்டு போடப்பட்டு இருப்பது தான். அதைப் பார்த்து பலரும் பதறிப் போய் இருக்கின்றனர்.

கையில் கட்டுடன் விஷால்

இந்த போட்டோக்கள் வெளியான சில நிமிடங்களிலேயே சோகமான பின்னணி இசை உடன் ரசிகர்கள் பலரும் வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். விஷாலுக்கு என்ன ஆச்சு? மீண்டும் உடல் நல பிரச்சனையா? விரைவில் குணமாக வேண்டும்... என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். இந்த பக்கம் பதட்டத்திற்கு காரணம் இருக்கிறது. ஏற்கனவே போன வருஷம் பல ஆண்டுகளாக முடங்கி கிடந்த மத கத ராஜா படம் வெளியான போது நடந்த ப்ரமோஷனில் விஷால் கலந்து கொண்ட காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.

Vishal VHealth

விஷாலின் உடல்நிலை

அப்போது அவர் முகம் வீங்கி இருந்தது, கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. அவரால் அந்த இடத்தில் உட்கார கூட முடியாத மாதிரி இருந்தார். அவ்வளவு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கூட நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் விஷாலுக்கு என்ன ஆச்சு என்று கேள்விகள் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. அதுபோல விஷால் நிலைமை இனி அவ்வளவுதான், அவரால் பழைய நிலைக்கு வர முடியாது என்றெல்லாம் பலரும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆனால் அதற்குப் பிறகு சில வாரங்களிலேயே அவர் உடல்நிலை சரியாகி மீண்டும் பழைய நிலையில் வந்தார். அதே சம்பவத்திற்கு பிறகு இப்போது மீண்டும் கையில் கட்டுடன் விஷால் வந்திருப்பதால் ரசிகர்களின் கவலை மீண்டும் அதிகரித்திருக்கிறது. இருந்தாலும் இதுவரை விஷால் தரப்பில் கையில் கட்டு போட்டதற்கான எந்த விளக்கத்தையும் சொல்லவில்லை. ஒரு வேலை மகுடம் படத்தின் சூட்டிங்கில் கூட அடிபட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது போல தான் தெரிகிறது என்றும் பலரும் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

மகுடம் பட ரிலீஸ் தேதி

இதற்கு இடையே மகுடம் படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் விஷால் மூன்று கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.

விஷால் திருமணம்

ஏற்கனவே இந்த படத்திற்கான பிரமோஷனில் விஷால் படத்தை தாண்டியும் அரசியல் குறித்தும் நடிகர் சங்க கட்டட பணிகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். நடிகர் சங்க கட்டிடம் வேலை முடிவடைந்ததும் தன்னுடைய திருமணம் என்று கூறியிருக்கும் நிலையில் இன்னும் சில மாதங்களில் இந்த கட்டிடத்தின் திறப்பு விழா இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒரு வழியாக விஷால் திருமணம் சீக்கிரத்தில் நடக்க போகிறதா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதுபோல ஒரு காலத்தில் ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஷால், இப்போது மீண்டும் கையில் கட்டுடன் பார்ப்பது ரசிகர்களை கவலை அடைய வைத்திருக்கிறது. மகுடம் வெற்றி பெறட்டும் அதைவிட விஷால் உடல் நலத்துடன் திரும்பி வரட்டும் என்பது அவருடைய ரசிகர்கள் கொடுக்கும் கமெண்டாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+