Bigg Boss 3: கவின் செய்வதை லாஸ்லியாவும் செய்கிறார்...என்னவாக இருக்கும்?
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் 3 சீசன் மூலம் பிரபலம் ஆனவர்கள் கவினும் லாஸ்லியாவும். இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் காதலில் திளைத்து இருந்த போதிலும் வெளியில் வந்து, இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல நடந்துக்கொண்டு வருகிறார்கள்.
இந்த சமயத்தில் கவின் கண்ணாடி முன் நின்று செல்ஃபி எடுத்து, தனது இன்ஸ்டாவில் பதிவிட, இது போன்று ஒரு செல்ஃபியை லாஸ்லியாவும் எடுத்து, தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கார். ஆக மொத்தம் இருவர் எடுத்த செல்ஃபியும் டிரையல் ரூமில் எடுத்ததுதான்
இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கவினை பின் தொடர்வது போல இருக்கும் இந்த போட்டோ பதிவு கவின், லாஸ்லியா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

பிக்பாஸ் 3 காதல்
பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்துக்கொண்ட ஹவுஸ் மேட்ஸில் கவினும் லாஸ்லியாவும், ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர்கள். இவர்கள் காதல் பிக்பாஸ் வீட்டுக்கு வெளியிலும் தொடர வேண்டும் என்று இருவரது ரசிகர்களும் விரும்பினார். ஆனால், ஏனோ இவர்கள் தங்களுக்குள் காதல் இல்லாத மாதிரியே வெளியில் இருக்கிறார்கள்.

இருப்பினும் ரசிகர்கள்
இவர்கள் எப்படி இருப்பினும், ரசிகர்கள் இவர்கள் இருவரையும் ஒன்றாக வைத்தே பார்க்க விரும்பி, சமூக வலைப் பக்கங்களில் இவர்கள் எது பதிவிட்டாலும், ஒருவருக்கு ஒருவர் அளிக்கும் பதிலாகவே எடுத்துக்கொண்டு இருவர் காதலுக்கும் சப்பைக்கட்டு கட்டி வருகின்றனர்.

கவின் கண்ணாடி செல்ஃபி
கவின் ஒரு புது உடையை அணிந்துக்கொண்டு கண்ணாடி முன்னால் நின்று செல்ஃபி ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கார். கூடவே எடுக்காத டிரஸில் போட்டு எடுத்து வச்சுக்கிட்டா அதுவும் உதவும் என்று சொல்லி இருக்கார். அடுத்த ஒரு புகைப்படத்தில் வாழக்கையில் பாஸ் இருக்கிறது. ஆனால், அதை ரிவைண்ட் செய்து பார்க்கும் பட்டன் மிஸ்ஸாகி விட்டது என்றும் பதிவிட்டு இருக்கார்.

லாஸ்லியா கண்ணாடி செல்ஃபி
கவின் போன்று லாஸ்லியாவும் கண்ணாடி முன் நின்று ஒரு செல்ஃபி எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். அதில், வாழ்க்கை ஏதோ ஒன்றை கற்றுக்கொடுக்க நினைக்கிறது என்றும் கவினுக்கு பதில் அளிப்பது போல பதிவிட்டு இருக்கார். இதை பார்த்த இருவரின் ரசிகர்களும், கவினும், லாஸ்லியாவும் இன்னமும் ட்ச்சில் இருக்கிறார்கள் போலும் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications