அடேங்கம்மா..! சிவாங்கி 12ஆம் வகுப்பில் இவ்வளவு மார்க் எடுத்து இருக்காங்களா? வெளியான ரிசல்ட்
சென்னை: சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வெளியாகியிருக்கும் நிலையில் சிவாங்கி தான் ஐந்து வருடங்களுக்கு முன்பு படித்த பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் பற்றி பேசியிருக்கிறார்.
படிக்கும் போது படு சுட்டியாகவும், படிப்பில் கெட்டிக்காரராகவும் இருந்திருந்த சிவாங்கி 1200 மதிப்பெண்களுக்கு 1112 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறாராம்.
சிவாங்கி சொன்ன தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிறது.

பாடகர்களில் குடும்பத்தில் பிறந்த சிவாங்கி, இயற்கையாகவே நன்கு பாடும் திறமை பெற்றிருந்தார். மலையாளியான இவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், இவரது பாடல்கள் இவரது குரலுக்காக மட்டுமின்றி அழகான தமிழ் வரிகள் உச்சரிப்பிற்காகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. என்னதான் முக்கி.. முக்கி.. பாடல்கள் பாடினாலும்.. இவர் வாழ்க்கையில் சுற்றாத அதிர்ஷ்ட சக்கரம், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் ஓவர் ஸ்பீடில் சுத்த ஆரம்பித்தது. பெரும்பாலான தமிழ் ரசிகர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் களை கொஞ்ச நாட்கள் ஆக்கிரமிக்கும் அளவிற்கு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி ரீச் க்கு பிறகு இவர் என்ன செய்தாலும் அது ட்ரெண்டிங் ஆகவே இருந்து வந்தது. போதாத குறைக்கு நடிகர் அஸ்வினுடன் காதல் என்று பரப்பி விடப்பட்ட கிசுகிசுக்கள் இவரை புகழ் வெளிச்சத்திலேயே வைத்திருந்தது. சிவாங்கியின் ஃபேமஸ் யை நன்கு பயன்படுத்திக் கொண்ட விஜய் டிவி, அடுத்தடுத்து சில நிகழ்ச்சிகளில் அவரது முகத்தை பப்ளிசிட்டிக்காக பயன்படுத்திக்கொண்டது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டிருக்கும் சிவாங்கி அடுத்து இனி நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று நேற்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டு கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அதிகமான ரசிகர்கள் சமூகவலை தளத்தில் முடிவை மாற்றிக்கொள்ள கூறி சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பிளஸ் 2 ரிசல்ட் வந்து இருக்கிறது. இதைத்தொடர்ந்து சிவாங்கி லைவில் ரசிகர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது அவரிடம் அதிகமான ரசிகர்கள் நீங்கள் ஸ்கூல் படிக்கும்போது எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கினீங்க என்று கேள்வி எழுப்பி கொண்டே இருக்க, அது குறித்து நான் பிளஸ் 2வில் 1200 மதிப்பெண்களுக்கு 1112 மதிப்பெண்கள் பெற்றேன் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.

ஸ்கூலில் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்த சிவாங்கி பிறகு காலேஜில் பல அரியர் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு அவர் அதிகமாக சூட்டிங்கில் கலந்து கொண்டு இருந்ததால் காலேஜுக்கு சரியாக போக முடியாமல் இருந்தது தான் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது சிவாங்கியின் மதிப்பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் மீம்ஸ்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications