உதயநிதி பேசியதில் என்ன இரட்டை அர்த்தம் இருக்கு? திரிஷா வழக்கு போட்டாரா? காயத்ரி ரகுராம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பரவி வரும் சர்ச்சை பேச்சு தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த பேச்சுக்கு எதிராக அரசியல் தலைவர்கள், நடிகர்கள், சமூக வலைதள பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது நடிகையும் அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த விவாகரத்தில் இதுவரை குஷ்பூ, கஸ்தூரி, சின்மயி உள்ளிட்ட பலர் உதயநிதி பேச்சுக்கு எதிராக பேசி வந்த நிலையில் காயத்ரி ரகுராம் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் என்ன டபுள் மீனிங் இருக்கிறது எனக்கு புரியலையே என்று கேள்வி கேட்டிருப்பது அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

Gayathri Raghuram Udhayanidhi Stalin Trisha

காயத்ரி ரகுராம் பதிவு

காயத்ரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? அல்லது புகார் அளித்தாரா? உதயநிதியின் இரட்டை அர்த்த பேச்சை திரிஷா புரிந்து கொண்டாரா? அந்த இரட்டை அர்த்தம் என்ன எனக்கு அது புரியவில்லை.. தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திற்கு ஆக பெண் பாலினத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக காவிரி விவாகரத்தை திசை திருப்ப..." என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் இதுதான் இப்போது இணையத்தில் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு சப்போர்ட்

அதாவது, காவிரி உரிமை தொடர்பான பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசு மற்றும் விஜய்யை விமர்சித்து பேசி கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்து சிலர் திரிஷா... திரிஷா என்று கத்தி கொண்டு இருந்தனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசிய வார்த்தை தான் இந்த சர்ச்சைக்கு காரணமே. அது இரட்டை அர்த்தமாக இருப்பதால் அதை பேசுவதற்கே பலரும் தயங்குகின்றனர். ஆனால் அந்த வீடியோவை கட் பண்ணி சேர்த்தது, நான் பேசவே இல்லை என்று உதயநிதி சொல்லி இருக்கிறார்.

Gayathri Raghuram Udhayanidhi Stalin Trisha

சோசியல் மீடியா விவாதம்

தவெக தரப்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளன. பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உதயநிதி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் கடந்த தேர்தல் வரைக்கும் திமுக கட்சி உடன் இணைந்து இருந்த பல கட்சியினர் கூட உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அதிமுக கட்சியை சேர்ந்த காயத்ரி ரகுராம் உதயநிதி ஸ்டாலினுக்காக சப்போர்ட் செய்திருப்பதும், அவர் பேசியது இரட்டை அர்த்த வார்த்தை போல தெரியவில்லை என்று சொன்னதையும் வைத்து பலர் விமர்சித்து வருகிறார்கள்.

ரசிகர்கள் கேள்வி

ஒரு சிலர் காயத்ரியிடம், நீங்க என்ன கட்சி மாற போறீங்களா? திடீர்னு திமுக காரங்களுக்கு சப்போர்ட் பண்றீங்களே? என்று கேட்கின்றனர். இன்னும் ஒரு சிலர் ஒரு பெண்.., அதுவும் உங்களைப் போன்ற ஒரு நடிகை... அவரை பற்றி ஆபாசமான ஒரு வார்த்தையை சொல்லி இருக்கிறார். நீங்கள் அந்த வீடியோவை பார்த்தீர்களா? இல்லை என்றால் இன்னொரு முறை பார்த்துவிட்டு வந்து போஸ்ட் போடுங்க... எதுவும் முழுசா தெரியாம இப்படி சப்போர்ட் பண்ணாதீங்க என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் திமுக தொண்டர்கள் காயத்ரியின் பதிவை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+