முயல் ரத்தம்.. கூடவே "இதை” சேர்த்து.. நீயா நானா "நீண்ட கூந்தல்” பெண்களின் ரகசியம்.. இவ்வளவு ஈஸியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு நீண்ட தலைமுடி உடைய பெண்களும் குட்டையான தலைமுடியை உடைய பெண்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதில் நீண்ட தலை முடி உள்ள பெண்கள் அதற்கான ரகசியத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கின்றனர்.

தற்போதைய சூழலில் பலருக்கும் சொட்டை தெரியாத அளவிற்கு முடி இருந்தாலே போதும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் தரையைத் தொடும் அளவிற்கு தலைமுடியை வளர்த்து வைத்திருக்கும் ரகசியத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.

What is the hair secret of the long haired girls who participated in the show Neeya Naana

தற்போதைய சூழலில் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி வேண்டாம் என்று வெறுக்காத ஒரு பொருளாகவே தலைமுடி இருந்து வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான பெண்களுக்கு தலைமுடி முட்டி தொடும் அளவிற்கு இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இப்போதைய சூழ்நிலையில் அப்படி பார்ப்பவர்கள் ஒரு சிலர் மட்டும்தான்.

காரணம் பலருக்கு அந்த மாதிரி அமைவதில்லை. ஒரு சிலருக்கு அமைந்தாலும் அதற்கான விருப்பம் இல்லாமல் பல பெண்கள் கூட தங்களுடைய மார்டன் வாழ்க்கைக்கு தகுந்த மாதிரி தலை முடியை குட்டையாக மாற்றி விடுகிறார்கள். ஆனாலும் அதிலும் அடர்த்தி இல்லையே என்பது பலருக்கும் இருக்கும் ஏக்கமாகவும் ஆசையாகவும் இருக்க தான் செய்கிறது.

இந்த நிலையில் கடந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் நீண்ட தலை முடி உடைய பெண்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அடடா என்று வியந்து போயிருந்தனர். பல விளம்பரங்களில் எங்கள் கம்பெனி எண்ணெயை தேய்த்தால் இவ்வளவு அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளரும் என்று பார்த்திருப்போம்.

அது உண்மையான முடியா அல்லது டூப்ளிகேட் முடியா என்று குழப்பம் இருந்திருக்கும் ஆனாலும் இப்போது நிஜத்தில் இவ்வளவு நீளமான தலை முடியை பார்த்த ரசிகர்கள் இவங்க என்னதான் பண்றாங்க என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள்.இந்த நிலையில் தங்களுக்கு எப்படி எந்த அளவிற்கு நீண்ட தலை முடி வளர்ந்தது என்பது பற்றி பேட்டி ஒன்றில் விரிவாக கூறியிருக்கிறார்கள்.

அதில் ஒரு பெண் எனக்கு சில வருடங்களுக்கு முன்பு தலைமுடி ரொம்பவே குறைய தொடங்கிவிட்டது. தலையில் இருக்கும் வகுடு கூட தெரிய ஆரம்பித்து விட்டது. அந்த நேரத்தில் என்னுடைய பாட்டி சொன்ன வைத்தியம் எனக்கு கை கொடுத்தது. நாங்க முயல் ரத்தத்தை எண்ணெயில் போட்டு அதை காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்ததாலே எனக்கு இப்படி முடி வளர்ந்தது என்று கூறியிருக்கிறார்.

What is the hair secret of the long haired girls who participated in the show Neeya Naana

அதுபோல அதை எப்படி தயாரிக்க வேண்டும் என்பது பற்றியும் கூறியிருக்கிறார். பொதுவாக அவர்களுடைய வீட்டின் அருகில் இருக்கும் முயல் கறிக்கடையில் ஒரு வெள்ளை துணியை வாங்கி கொடுத்து விடுவார்களாம். அதில் முயல் கடைக்காரர் கறி வெட்டும் போது சிந்தும் ரத்தத்தை அந்த துணியிலே பிடித்து வைத்து விடுவாராம். ரத்தத்தில் அந்த துணி நன்றாக நனைந்துவிடும்.

பிறகு அந்த துணியை அப்படியே நிழலில் உலர்த்தி அதை சின்ன சின்ன பீசாக கட் பண்ணி தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து அதில் இதை துணியோடு போட்டு விடுவார்களாம். பிறகு அந்த துணியில் இருக்கும் ரத்தம் எல்லாம் அந்த எண்ணெயில் இறங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு பிறகு அதை தலைக்கு எண்ணெய்யாக பயன்படுத்துவார்களாம்.

வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மூன்று முறை கூட இதை பயன்படுத்தலாம் என்று அவர் கூறி இருக்கிறார். அதுபோல இந்த எண்ணெயை பயன்படுத்தியதும் என்னுடைய முடி அந்த அளவிற்கு வேகமாக வளர்ந்தது என்று கூறி இருக்கிறார். அதோடு அதிகமான பெண்கள் கூறியது கற்றாழையை தான். அதை தங்களுடைய தலைமுடியில் தேய்த்து 20 நிமிடங்களுக்கு நாங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்வோம். வாரத்தில் ஒருமுறை இதை பண்ணுவோம் என்றும் கூறியிருக்கின்றனர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் நான் இப்படி எல்லாம் செய்ததே இல்லை எனக்கு முடி தரை வரைக்கும் இருந்தது. பலமுறை நானே என்னுடைய தலைமுடியை மிதித்து கீழே விழுந்து விட்டேன். அதனால் இப்போது கொஞ்சம் கட் பண்ணி எடுத்து விட்டேன் என்று கேஸ்வலாக கூற, இது பலருக்கும் வியப்பாக இருந்திருக்கிறது. அதோடு அந்தப் பெண் எனக்கு நீண்ட தலைமுடியாக இருப்பதால் பைக்கில் போகும்போது கூட பைக்கில் மாட்டிக் கொள்கிறது.

இதைத் தொடர்ந்து இன்னொரு பெண் என்னுடைய நீண்ட தலை முடி ரகசியத்திற்கு நானும் முயல் ரத்தம் தான் யூஸ் பண்ணி இருக்கிறேன். ஆனால் அது பல நேரங்களில் கிடைக்காததால் தேங்காய் எண்ணெயோடு, விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணையை சூடு பண்ணி அதை தலையில் தேய்ப்பேன். வாரத்திற்கு ஒரு முறை தான் தலைக்கு குளிப்பேன். தலைக்கு குளிக்கும்போது எண்ணெயை தேய்த்து நன்றாக தலைமுடியை மசாஜ் செய்துவிட்டு அதற்கு பிறகு தான் குளிப்பேன் என்றும் கூறுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+