காலையில் கமல்ஹாசன் வெளியிட்ட “K” போஸ்ட்.. மாலையில் பிக் பாஸில் இருந்து விலக காரணமா?
சென்னை: நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் தான் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் இருந்து தான் விலகப்போவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே கமல்ஹாசன் இன்று காலையில் ஒரு குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது தன்னுடைய திடீர் முடிவு அறிவித்திருக்கும் நிலையில் இது பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
நடிகர் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி உலக சினிமா ரசிகர்களே வியந்து பார்க்கும் அளவிற்கு தன்னுடைய திறமையால் உலகநாயகன் என்று பெயர் வாங்கி சினிமாவில் புது புது விஷயங்களை புகுத்திக் கொண்டிருக்கிறார். வெள்ளித் திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கடந்த ஏழு சீசன்ங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

ஆனால் திடீரென்று இன்று தான் வரப்போகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். கமல்ஹாசனின் திடீர் முடிவு இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. கமல்ஹாசன் இந்த நேரத்தில் எடுத்த இந்த முடிவு சரியானது என்று சிலர் கூறி வருகின்றனர். கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.

ஏற்கனவே வெளியான விக்ரம் திரைப்படம் பெரிய அளவில் கமல்ஹாசனுக்கு பிரபலத்தை கொடுத்தது ஆனால் இந்தியன் 2 திரைப்படம் பல வருடங்களாக உருவாக்கி இருந்தாலும் கடைசியில் கதை மக்கள் எதிர்பார்க்கும் வகையில் இல்லை என்று பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

அதுபோல சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்காக ஷெட் அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கும் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து கமலஹாசனிடமும் சம்பள பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் முதலில் சம்பள உடன்படிக்கை கமலுக்கு திருப்திகரமாக இல்லை என்று கூறப்பட்டது, பிறகு கமல்ஹாசன் எதிர்பார்த்த தொகையை சேனல் தரப்பினர்கள் கொடுப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இன்று கமல்ஹாசன் தான் திரைப்படத்தில் நடிப்பதால் தன்னால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று காரணத்தை சொல்லி தான் இந்த சீசனில் விலகப் போவதாக அறிவித்திருக்கிறார். அதே நேரத்தில் இன்று காலை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஒரு குழந்தையோடு இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
ஏற்கனவே இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி சில மாதங்களுக்குள் இந்தியன் 3 திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது அதனால் இந்த புகைப்படம் இந்தியன் 3 படத்திற்கான புகைப்படமா? என்று கேள்விகள் எழுபபப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இது விக்ரம் 3 திரைப்படத்திற்கு ஆன ஷூட்டிங் புகைப்படமாக இருக்குமோ என்றும் கேள்விகள் எழுந்து வருகிறது. விக்ரம் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் விக்ரம் அவருடைய பேரனை காப்பாற்றுவதற்காக கதை போய்க் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது பாகத்திற்கான வேலைகள் தொடங்கியதால் தான் கமல்ஹாசனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லையா? இதை சொல்வதற்காக தான் கமல்ஹாசன் காலையில் ஒரு குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டாரா? என்று கேள்விகள் குவிந்து வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications