ஹன்சிகா மோத்வானி விவாகரத்து? இரண்டே ஆண்டுகளில் கணவரை விட்டு பிரிந்து வாழ என்ன காரணம்! புது தகவல்
மும்பை: தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்த ஹன்சிகா கடந்த 2022ல் சோஹேல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகி இருந்தார். இதற்கிடையே ஹன்சிகா- சோஹேல் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து வாழ்ந்து வருவதாகச் சமீபத்தில் தகவல் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. இருவருக்கும் இடையேயான சிக்கலுக்கு என்ன காரணம் என்பது குறித்து இப்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
33 வயதான ஹன்சிகா மோத்வானி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு சோஹேல் என்ற தொழிலதிபரைக் கல்யாணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கோட்டையில் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அவர் மும்பையிலே செட்டிலாகிவிட்டார்.

மூன்று ஆண்டுகளில் விவாகரத்து?
ஹன்சிகா- சோஹேல் தம்பதிக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் கூட முடிவடையவில்லை. அதற்குள் இருவரும் பிரிந்து வாழ்வதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ஆங்கிலச் செய்தி நிறுவனம் இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தது. குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே அந்தச் செய்தி வெளியிடப்பட்டது.
தற்போது ஹன்சிகா மோத்வானி தனது அம்மாவுடன் வசித்து வருவதாகச் சொல்லப்பட்டது. அதேபோல சோஹேலும் கூட தனது பெற்றோருடன் தங்கி இருப்பதாக அதில் கூறப்பட்டு இருந்தது. கடந்த 2022 டிசம்பரில் தான் இருவருக்கும் திருமணமாகியிருந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குள் இதுபோல தனித்தனியாக இருவரும் வாழ்ந்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.
காரணம் என்ன
இதற்கிடையே இந்தத் தம்பதிக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது திருமணத்திற்குப் பிறகு ஹன்சிகா- சோஹேல் ஜோடி ஒன்றாகவே சோஹேலின் குடும்பத்துடன் வசித்து வந்தனர். ஆனால், சோஹேலின் குடும்பத்தினர் பெரியது. இருப்பினும், பெரிய குடும்பத்துடன் ஹன்சிகாவுக்கு ஒத்து வரவில்லை என்றும் அவர்களுடன் இருப்பதில் சிக்கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் முதலில் அதே கட்டிடத்தில் வேறொரு வீட்டிற்கு அவர்கள் மாறியுள்ளனர். இருப்பினும், கருத்து வேறுபாடுகள் தொடர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்தே இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. சீக்கிரம் விவாகரத்து பெறலாம் என்றும் கூட நெட்டிசன்கள் கூறினர். இந்தச் செய்தி வெளியானது முதலே பரபரப்பைக் கிளப்பியது..
ஹன்சிகா- சோஹல் பதில் என்ன
இந்த விவாகரத்தில் ஹன்சிகா மோத்வானி இதுவரை மவுனமாகவே இருந்து வருகிறார். விவாகரத்து அல்லது பிரிந்து வாழும் செய்திகளை அவர் ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை.. எந்தவொரு கருத்தையும் சொல்லாமலேயே இருக்கிறார். அதேநேரம் தொழிலதிபர் சோஹேல் இது குறித்து விளக்கமளித்தார். விவாகரத்து குறித்த செய்தியை சோஹேல் மறுத்தார். அதேநேரம் பிரிந்து வாழ்வது குறித்துக் கேட்டபோது அதற்கு அவர் எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.
ஹன்சிகா
ஹன்சிகா மோத்வானி 2000களில் வெளியான ஷக்கலக்க பூம் பூம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு இந்தியில் தான் முதலில் கதாநாயகியாக அறிமுகமானார். இருப்பினும், இந்தியைக் காட்டிலும் அவருக்குத் தமிழில் அதிக வரவேற்பு இருந்தது. வேலாயுதம், அரண்மனை, ரோமியோ ஜூலியட், சிங்கம் 2 எனப் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications