இத்தனை வருடங்களில் ஒருமுறை கூட கமலஹாசன் உடன் நடிக்காத காரணம்.. உண்மையை உளறிய நதியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நதியா இது வரைக்கும் ஒரு முறை கூட கமல்ஹாசனுடன் நடிக்காத காரணத்தைப் பற்றி முதல் முறையாக பேசி இருக்கிறார்.

1984 ஆம் ஆண்டு முதல் இப்ப வரைக்கும் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்துவரும் நதியா ஒரு முறை கூட கமல்ஹாசன் உடன் நடிக்க வில்லையாம்.

பூவே பூச்சூடவா திரைப்படத்தில் அறிமுகம்

பூவே பூச்சூடவா திரைப்படத்தில் அறிமுகம்

நடிகை நதியாவின் உண்மையான பெயர் சரீனா அனுஷா மோய்டு தானாம். இவர் 1984 ஆம் ஆண்டில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலமாக திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். முதல் திரைப்படத்திலேயே எதார்த்தமான அழகால், அதிகமான மேக்கப் இல்லாத பக்கத்து வீட்டு பெண் போன்ற இவருடைய எளிமையான கேரக்டரால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டார். அப்போது தொடங்கிய அதே அழகு இப்ப வரைக்கும் அவரிடம் விட்டு விலகவில்லையே என்று இப்ப வரைக்கும் ரசிகர்கள் பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

ரசிகர்களை கவர்ந்த பெயர்

ரசிகர்களை கவர்ந்த பெயர்

பல்வேறு ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நதியா ஆரம்ப காலகட்டத்தில் எந்த பொருளை எடுத்தாலும் இது நதியா பொருள் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார். உதாரணமாக நதியாவின் வளையல், நதியா செருப்பு, நதியா புடவை, நதியா பெண்கள் சைக்கிள் என்று சொல்லும் வகையில் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். இந்த நிலையில் சில வருடங்களாக இவர் திரைப்படங்களை விட்டு விலகி இருந்து தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் அறிமுகமாகி இருக்கிறார். இவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் எதிர் பார்க்காத அளவில் இவருடைய பெயரை மீண்டும் பறக்க செய்து விட்டது.

வயசே ஆகாதா

வயசே ஆகாதா

நடிகையாக இருக்கும் இவர் 2008 ஆம் ஆண்டு ஆரோக்கியா பால் மற்றும் தங்கமயில் ஜுவல்லரியின் பிராண்டட் தூதராக கையெழுத்துட்டு இருக்கிறார். ஜெயா டிவியில் நடிகை குஷ்புவுக்கு பதிலாக ஜாக்பாட் என்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியை நதியா தொகுத்து வழங்கி சின்ன திரையிலும் பிரபலமாகி விட்டார். கதாநாயகியாகவே பார்த்துக் கொண்டிருந்த இவரை இப்போது துணை கதாநாயகியாக பார்த்தாலும் இதுவும் அழகாகத் தான் இருக்கிறது. இவருடைய அழகுக்கு மட்டும் வயதே ஆகாதா என்று இப்பிருக்கும் இளைஞர்கள் வரை இவரிடம் டிப்ஸ் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இவர் கமல்ஹாசன் பற்றி சில தகவல்களை கூறி இருக்கிறார். அது ரசிகர்களின் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒருமுறை கூட நடிக்கவில்லை

ஒருமுறை கூட நடிக்கவில்லை

தொடர்ந்து இத்தனை வருடங்களாக கதாநாயகியாகவும் துணை கதாநாயகியாகவும் நடித்து கலக்கிக் கொண்டிருக்கும் நதியா இதுவரைக்கும் ஒரு முறை கூட நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்காமல் இருந்து வருகிறார். இதைக் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் இவரிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு கமல்ஹாசன் உடன் நான் நடிக்காமல் போனது எனக்கு வருத்தமாக தான் உள்ளது. அதற்கு ஒரே ஒரு காரணம்தான் கால்ஷீட் பிரச்சனை தான். அவர் பட வாய்ப்பு வரும்போது வேறு படங்களில் பிசியாக இருப்பேன். விக்ரம் படத்தில் கூட முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது பிறகு என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+