அயலி பட கதாநாயகிக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கும் இப்படி ஒரு உறவா? புகைப்படத்தால் வெளிவந்த உண்மை
சென்னை: அயலி வெப் சீரிஸ் கதாநாயகியான அபினக்ஷத்ரா நடிகர் விஜய் சேதுபதியோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
விஜய் சேதுபதி குறித்து அபினக்ஷத்ரா வெளியிட்ட பதிவு தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
விஜய் சேதுபதி தன்னுடைய மாமா என்று அபினக்ஷத்ரா குறிப்பிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் இந்த ரகசியம் தெரியாமல் போய்விட்டதே என்று கருத்து கூறி வருகிறார்கள்.

உறவினர்களின் தொல்லை
அயலி வெப் சீரியஸ் கதையில் தத்ரூபமாக தமிழ்ச்செல்வியாகவே மாறி இருக்கும் அபினக்ஷத்ரா 2005 ஆம் ஆண்டு தான் பிறந்திருக்கிறார். இவருடைய சொந்த ஊர் மதுரை பக்கம் உள்ள ராஜபாளையம் தானாம். இவர் மூக்குத்தி அம்மன், நவரசா, நெஞ்சுக்கு நீதி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதல் முறையாக இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆரம்பிக்கும் போது இவருடைய அம்மா அப்பா இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தாலும் குடும்பத்தினர் அதிகமாக இவருடைய பெற்றோருக்கு டார்ச்சர் கொடுத்து இருக்கிறார்கள். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி தான் இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவதாக கூறியிருக்கிறார். கிராமத்து கதையில் அப்படியே மாறி இருக்கும் அபி இந்த திரைப்படத்தில் எந்த மேக்கப் போடாமல் தான் நடித்திருந்தாராம். அபி நட்சத்திராவின் அப்பா திரைப்படங்களில் ஏற்கனவே பணி புரிந்திருக்கிறாராம். எஸ் சந்திரசேகர் திரைப்படங்களில் அவர் வேலை செய்திருக்கிறாராம்.ஆனால் திருமணத்திற்கு பிறகு நட்சத்திரா வின் தாத்தாவால் அவர் பிசினஸ் பார்க்கும் நிலை ஆகிவிட்டதால் அபி நட்சத்திரா சினிமாவில் நடிக்கிறார் என்பதன் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறாராம்.

பயந்த இடம்
அயலி திரைப்படத்தில் தமிழ்ச்செல்வியின் அம்மாவாக மலையாள நடிகை அனுமோல் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவருடைய தந்தையாக மதன் மற்றும் லிங்கா, சிங்கம்புலி என பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தாலும் அனைவரும் ஒரு குடும்பம் போல தான் இந்த திரைப்படத்தில் நடித்ததாகவும் தான் பல இடங்களில் திணறும்போதெல்லாம் தனக்கு கூட நடித்தவர்கள் உதவி செய்தார்கள் என்று கூறி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு உறுதுணையாக இயக்குனர் முத்துக்குமார் இருந்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் கடைசி சீனில் இவருக்கு தாலி கட்டுவது போன்று வருவது நடிப்பதில் இவர் பயந்தாராம். ஆனால் பிறகு அந்த சீன் இந்த அளவிற்கு பேசப்படும் என்று தெரிந்த பிறகு சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். ஆனால் இந்த சீனில் நடிக்கும் போது கெத்தாக நடித்திருந்தாராம். இது இப்போதும் கிராமத்தில் பலர் இந்த சீனை பார்த்தால் சந்தோஷப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

தத்ரூபமான நடிப்பு
இந்தத் திரைப்படத்தில் அதிகமாக இவர் அழும் சீன்கள் இருந்த நிலையில் பல இடங்களில் இவர் நிஜமாகவே அழுது இருக்கிறாராம். குறிப்பாக இவர் கத்தி பேசும் இடங்களில் ஒரே சாட்டில் பேசி முடித்து அந்த இடங்களில் இவரை மீறியும் அழுது இருக்கிறாராம். தமிழ் செல்வியாக முழுவதுமாக மாறிய இவர் கடைசி எபிசோட்டில் பஸ்ஸில் ஏறாமல் பேசும் வசனங்கள் கூட இவர் தூக்கத்தில் இருந்து எழும்பி ஒரு முறை இயக்குனர் கூறியதும் அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடித்து முடித்ததுதானாம். அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் தன்னுடைய கவனத்தை இவர் செலுத்தியதால் தான் இவரால் தத்ரூபமாக இந்த திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை காட்ட முடிந்தது என்று கூறியிருக்கிறார். அதனால் தான் ரசிகர்களுக்கும் இந்த திரைப்படத்தை இந்த அளவிற்கு பிடித்து போய்விட்டதோ என்னவோ.

இருவருக்கும் உள்ள சொந்தம்
இந்த நிலையில் அபினக்ஷத்ரா விஜய் சேதுபதியோடு எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததும் அது வைரலாகி வருகிறது. ஏற்கனவே அவர் நடித்த அயலி வெப் சீரிஸ் வெளியான புதியதில் விஜய் சேதுபதி திரைப்படத்தை குறித்து பாராட்டி இருந்தார். அது மட்டுமல்லாமல் பல திறை பிரபலங்களும் இவருடைய நடிப்பை பாராட்டி இருந்த நிலையில் தற்போது," என் அன்புக்குரிய சேது மாமா.. நாங்கள் ஒன்றாக வேலை செய்து சென்னைக்கு பயணித்தோம்" என்று அபினக்ஷத்ரா வெளியிட்ட பதிவு குறித்து அப்போ இரண்டு பேரும் ஏதோ ஒரே திரைப்படத்தில் நடிக்கிறார்களா? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் இன்னும் ஒரு ரசிகர்கள் இரண்டு பேருக்கும் பூர்வீகம் ராஜபாளையம் அதனால் தான் இவர்கள் உறவினர்கள் என்றும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications