எதிர்நீச்சல் சத்யபிரியாவிற்கும் நடிகை கே.ஆர் விஜயாவிற்கும் இப்படி ஒரு உறவா? வெளியான ரகசியங்கள்
சென்னை: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை சத்யபிரியா குணசேகரனுக்கு அம்மா கேரக்டரில் விசாலாட்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் இந்த சீரியலில் வில்லியாக இருந்த விசாலாட்சி இப்போது மருமகள்களை புரிந்து கொண்ட மாமியாராக மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் சத்யபிரியா நடிகை கேஆர் விஜயாவோடு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பல தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
சினிமாவாக இருந்தாலும் சரி, சீரியலாக இருந்தாலும் சரி நடிக்கும் நடிகர்களின் கேரக்டர் படித்தான் ரசிகர்கள் அவர்களை மனதில் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த வகையில் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் வில்லியாகவும் குணசித்திர கேரக்டரிலும் நடித்துக் கொண்டிருக்கும் சத்யபிரியா பலருக்கும் பரீட்சையமானவர் தான்.
இவர் நல்லவரா கெட்டவரா என்று யோசிக்க முடியாமல் தான் இருக்கின்றது. ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வந்த சத்யபிரியா சூரிய வம்சம் திரைப்படத்தில் தேவயானியின் அம்மாவாக நடித்தது யாராலும் மறந்து இருக்க முடியாது. சூரியவம்சம் திரைப்படம் எந்த அளவிற்கு பிரபலமானதோ அந்த அளவிற்கு நந்தினியின் அம்மா அவர் செய்த இட்லி உப்புமாவை திருட்டுத்தனமாக சாப்பிட்டு பிரபலம் அடைந்திருந்தார்.
திரைப்படங்களில் அதிகமாக நடித்துக் கொண்டிருந்த சத்திய பிரியா சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலின் மூலம் பெரிய அளவில் சின்னத்திரை ரசிகர்களின் மனதிலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதைத் தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சீரியலில் ஆரம்பத்தில் இவருக்கு பட்டம்மாள் அப்பத்தாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் அதுவெல்லாம் வருவதற்கு ரொம்ப நாள் ஆகும் எனக்கு நெகட்டிவ் கேரக்டர் தான் வேண்டும் என்று இயக்குனரிடம் கேட்டு விசாலாட்சி கேரக்டரை வாங்கி இருக்கிறார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இப்போ தன்னுடைய மகளுக்கு துணையாக மருமகள்களை புரிந்து கொண்டு நல்ல ஒரு கேரக்டராக மாறிய விசாலாட்சியை ரசிகர்கள் பாராட்டியும் வருகிறார்கள்.

சீரியலில் என்னதான் நல்லவரா கெட்டவரா என்று இருந்தாலும் நிஜத்தில் எப்போதும் நான் இப்படித்தான் என்று சொல்வது போலத்தான் இவர் பல இன்டர்வியூகளில் போல்டாக தன்னுடைய கேரக்டரை வெளிக்காட்டி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை கே.ஆர் விஜயாவை சந்தித்து புகைப்படம் எடுத்த சத்யபிரியா அந்த மகிழ்ச்சியான செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதில், நீண்ட நாட்களுக்குப் பிறகு கேஆர் விஜயா அம்மாவை சந்தித்தேன். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு சந்தோஷமாக இருக்கிறார். அவரோடு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கே.ஆர் விஜயா அம்மா எனக்கு வேறு யாரும் இல்லை, என்னுடைய நெருங்கிய தோழியின் அக்கா தான். கேஆர் விஜயா அம்மாவின் தங்கை ஆர் வத்சலாவால் தான் அவரை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு என்னுடைய தோழிக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications