என்னாது நடிகை நளினிக்கும் அனுராதாவுக்கும் இப்படிப்பட்ட ஒரு உறவுமுறையா? இது தெரியாம போச்சே!
சென்னை: நடிகை நளினிக்கும் நடிகை அனுராதாவுக்கும் இப்படி ஒரு உறவா? எங்கோ வைக்கம் என்ற இடத்தில் பிறந்த நளினிக்கு மும்பை, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் உறவுக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்!
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: வைக்கம் மூர்த்தி என்று கேரள சினிமாவில் 75 காலகட்டத்தில் ஒரு நடன இயக்குனர் இருந்தார். ப்ரேம் நஸீருக்கே நடனம் அமைத்தவர்.

வைக்கம் மூர்த்தி தான் நடிகை சீமா குரூப் டான்சர் சாந்தியிலிருந்து நாயகி சீமாவாக மாற உத்வேகமாக இருந்தவர். இவரது மனைவி ப்ரேமா. இந்த தம்பதிக்கு ஆறு ஆண் குழந்தைகள். இரண்டு பெண் குழந்தைகள். இதில் ஒரு பெண் தான் நளினி என்கிற ராணி.
நளினியின் நான்கு அண்ணன்களில் இருவர் சினிமாத்துறை. இருவர் பிஸினஸ். சினிமாத் துறையின் இரு அண்ணன்களில் ஒருவர் குமார். இவர் 80களில் நடன இயக்குனராக இருந்தவர். நளினியின் ஆரம்ப கால படங்களில் குமார் நடன இயக்குனராக இருந்தார். இவரது மனைவி சாந்தி.
குமார் இப்போது உயிரோடு இல்லை. சாந்தி குமார் 90களில் மலையாள சினிமாக்களில் பெரிய மாஸ்டர். இப்போதும் டான்ஸ் கொரியோகிராபி செய்கிறார். சாந்தியும் ஒரு நடன இயக்குனரின் தங்கை. அவர் பெயர் சதீஷ். மனைவி பெயர் நடிகை அனுராதா. அனுராதா, கிருஷ்ணகுமார் என்கிற டான்சருக்கும், சரோஜா என்கிற ஹேர்டிரஸ்ஸருக்கும் பிறந்த பெண். பெயர் சுலோச்சனா. பின்னாளில் சினிமாவுக்காக அனுராதாவானார். அனுராதா-சதீஷ் தம்பதிக்கு அபிநயஸ்ரீ என்கிற மகளும், காளிச்சரண் என்கிற மகனும். காளிச்சரண் கெவின் என்கிற பெயரில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
நளினி ராமராஜனை திருமணம் செய்து கொண்டது நமக்கு தெரியுமே. நளினியின் தங்கை லக்ஷ்மி. நளினி ராமராஜனோடு போனதும் லக்ஷ்மியை சினிமாவில் நாயகியாக்க முயற்சி நடந்தது. முயற்சிகளில் எம்.ஏ.சுப்பையா என்கிற பி.ஆர்.ஓவுடன் திருமணத்தில் முடிந்தது. சுப்பையா-லக்ஷ்மி கிசுகிசுக்கள் பயில்வான் ரங்கநாதனால் அன்றும் பரபரப்பாக்கப்பட்டது.
நளினியில் இரு தம்பிகளில் ஒருவரை ஜீவன் என்ற பெயரிலும், கடைக்குட்டியை தேவ் ஆனந்த் என்ற பெயரிலும் சுப்பையா-லக்ஷ்மி தம்பதி புதிய படத்தை தயாரித்து அறிமுகப்படுத்தியது. படம் மகுடிக்காரன். நாயகி தேவி. தேவி பின்னாளில் சன்டிவி சீரியல்களில் பிரபலம். படம் மகுடிக்காரன். சரத்குமார் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார்.
வைக்கம் மூர்த்தி, குமார், சாந்தி பணியாற்றி மகள் லக்ஷ்மி தயாரித்து, மகன்கள் நடித்த 'குடும்பப் படம்' அது. ஆனாலும் படம் ஓடவில்லை. தேவ் ஆனந்த் என்கிற பெயரில் வந்த கடைக்குட்டி ஆனந்த் பின் வாய்ப்பில்லாமல் நடனமாட தொடங்கினார். விஷ்ணுதேவா என பெயர் மாற்றம் செய்து நடன இயக்குனரானார்.
விஷ்ணுதேவா போக்கிரி, சம்திங் சம்திங் போன்ற படங்களுக்கு நடனம் அமைத்தவர். இவரது மனைவி பெயர் கமலா நாயர். மும்பை பெண்ணான கமலா நாயரின் அண்ணன் தான் கணேஷ் ஆச்சார்யா. டான்ஸ் மாஸ்டர். கணேஷ் ஆச்சார்யா தன் குண்டு உருவத்தால் புகழ் பெற்றவர். தமிழில் ரௌத்திரம் படத்தில் வில்லனாக நடித்தார். புகழ் பெற்ற கத்ரினாவின் 'chikni chameli' பாட்டின் நடன அமைப்பு கணேஷ் தான்.
கணேஷ் 12 வயதில் நடனக் குழு தொடங்கி 19 வயதில் மாஸ்டராகி 21 வயதில் முதல் சினிமாவில் மாஸ்டரானார். இவரது மனைவி பெயர் விதி. கணேஷ் நான்கு படங்களை இயக்கியும் இருக்கிறார். நளினி பற்றி நமக்குத் தெரியும். ராணி சினிமாவுக்காக நளினியானார். குமரேசன் என்கிற ராமராஜனை மணந்து அதன் மூலம் தென்மதுரையிலிருந்து டெல்லி பாராளுமன்றம் வரை விசிட் செய்தவர்.
அருண், அருணா பிள்ளைகள். அருண் லண்டனில் பணிபுரிகிறார். கேரளாவில் வைக்கம் என்கிற ஊரில் பிறந்த ஒரு தலைமுறை இன்று மதுரை, ஒடிஸா, மும்பை என தன் உறவுகளை பல மைல்கள் பயணித்தும் வளர்த்து வருகிறது. இதில் பல மொழிகள், உணவு முறை, பழக்க வழக்கம் வேறு வேறாக இருந்தாலும் அதன் வேர்கள் இந்தியா முழுமைக்கான ஒருமைப் பாடாக விளங்குகின்றன. இவர்களை எல்லாம் ஒன்றாக இணைப்பது நடனம் தான். நாம் தான் குண்டு சட்டிக்குள் 'ராஜாவின் பார்வை' பாடிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications