இது என்ன தமிழ் சினிமாவின் colour code? மமிதா பைஜூவை வைத்து வந்த விவாதம்? மாறுமா இயக்குனர்களின் மனநிலை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்து பார்த்தால் சில விஷயங்கள் மட்டும் ரொம்பவே வேடிக்கையாக இருக்கும். கதாநாயகன் கிராமத்தில் இருந்தாலும் சரி, சிட்டியில் இருந்தாலும் சரி அவர் கம்பீரமாகவே காட்டப்படுவார். ஆனால் கதாநாயகிகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு. கிராமத்து கதாநாயகிகள் எல்லாருமே கருப்பாக இருப்பார்கள். அதேபோல சிட்டி கதாநாயகிகள் என்றால் அவர்கள் வெள்ளையாக படு மாடலாக இருப்பார்கள். ஏன் கிராமத்திலும் கலரான பெண்கள் இல்லையா? இவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதுதான் நமது கேள்வி.

சினிமா மாற்றம்

இந்த ஏற்றத்தாழ்வுகள் இன்று நேற்று நடந்த நடந்தது இல்லை. பல வருடங்களுக்கு முந்தைய படங்களிலேயே இதே ஏற்றத்தாழ்வுகள் தான் இருக்கிறது. கிராமத்து ஹீரோயினி என்றால் அவர் பாவாடை தாவணி அணிந்து கொண்டு என்னை தலையுடன் கருப்பாக இருப்பார். இதற்கு சில நடிகைகள் நிஜத்தில் கலராக இருந்தாலும் அவர்களுக்கு பெயிண்ட் அடித்து வைத்து விடுவார்கள். அதே ஊருக்கு சிட்டியில் இருந்து ஒரு பெண் வருகிறார் என்றால் அவர் படும் மாடனாக இருப்பார். வெள்ளை கலரில் இருப்பார். இதுதான் பல வருஷத்துக்கு முந்தைய கதை ஆனால் இப்போதும் அதுவே தொடர்வது தான் வேடிக்கையாக இருக்கிறது.

Mamitha Baiju Tamil cinema

மமீதா பைஜு கேரக்டர்

இதற்கு உதாரணமாக சமீபத்தில் மமீதா பைஜுவின் 2 பட காட்சிகளை எடுத்துக்கலாம். ஒரு பக்கம் தனுஷ் நடிப்பில் வந்த கரா இன்னொரு பக்கம் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இரண்டிலுமே ஹீரோயினி மமீதா தான் ஆனா கேரக்டரில் பின்னணி மாறியது. அவருடைய திரை தோற்றமும் அப்படியே வேறு உலகத்துக்கு போய்விடுகிறது. செல்வி என்ற கேரக்டரில் கருப்பான மமிதாவை காட்டுவார்கள். அதே விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தில் மேடி செம வெள்ளையாக மாடர்னாக இருப்பார்.

Mamitha Baiju Tamil cinema

மாறாத ஹீரோயின் ஸ்டைல்

அந்த காலத்து ஸ்ரீதேவிக்கு பெயிண்ட் அடிப்பது போலத்தான் இன்றைய காலத்தில் பெயிண்ட் அடிக்கிறார்கள். இவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள்? கிராமத்தில் பெண்கள் எல்லோரும் கருப்பாக மட்டும் தான் இருப்பார்கள் என்று இவர்கள் சொல்கிறார்களா? அல்லது நாங்க சினிமாவில் எத்தனையோ தொழில்நுட்ப மாற்றங்கள் வந்தாலும் இன்னும் பழைய பஞ்சாங்கத்தை தான் காட்டிக் கொண்டிருப்போம் என்று சொல்கிறார்களா? என்பது தான் நமக்கு வரும் கேள்வி.

கிராம ஏற்றதாழ்வு

நம்ம சினிமா சில நேரங்களில் கிராமம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு ரூல் புக் வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சில சீரியல்களை இப்போது பார்க்கும் போதும் அங்கு ஹீரோயினிகள் கிராமத்தில் ரொம்ப கஷ்டப்பட்டுற குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும் ஹீரோக்கள், பணக்கார வீட்டு பையன்களாகவே இருக்கிறார்கள். அந்த பணக்கார வீட்டில் அவரை கல்யாணம் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு அத்தை மகளோ, மாமன் மகளோ உகர்ந்திருப்பார். ஆனால் ஹீரோவுக்கும் ஹீரோயினிக்கும் எதிர்பாராத விதத்தில் கல்யாணம் நடந்துவிடும்.

Viswanath & Sons: விஸ்வநாத் & சன்ஸ் எப்படி இருக்கு? சூர்யாக்கு கம்பேக்? ரசிகர்கள் சொல்வது இதுதான்
பிறகு அந்த வில்லி ஹீரோவையும் ஹீரோயியையும் சேர்ந்து வாழ விடாமல் தொந்தரவு பண்ணுவார். அதே தான் சினிமாவிலும் கிராமத்து ஹீரோயினி என்றால் கலரா இருக்கும் நடிகைக்கும் பெயிண்ட் அடித்து கருப்பாக காட்டுவோம் என்று இயக்குனர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் போல. இந்த ஏற்றத்தாழ்வு எப்ப தான் மாறும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. கிராமத்து பொண்ணுக்கும், சிட்டி பொண்ணுக்கும் ஒரே சூரியன் தான் சார் கலர் கோடு மட்டும் சினிமாவுக்குள்ள தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+