தனலட்சுமி சொன்னது எல்லாம் பொய்யா? நாஞ்சில் விஜயன் பேசிய வார்த்தைகளை பிடித்துக் கொள்ளும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தனலட்சுமி சொன்ன விஷயங்கள் பொய்யா என்று ரசிகர்கள் இப்போது நாஞ்சில் விஜயனின் பேச்சை பார்த்த பிறகு கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.
முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களில் ஒருவராக கலந்து கொண்டிருக்கும் தனலட்சுமி குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவருடன் வெப் சீரியலில் ஒன்றாக நடித்த விஜய் டிவியை சார்ந்த நாஞ்சில் விஜயன் பதிலளித்திருக்கிறார்.

மக்கள் பிரதிநிதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த முறை இதுவரைக்கும் இல்லாத வகையில் பல மாற்றங்கள் நடைபெற்று இருக்கிறது. முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் பல்வேறு தரப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர் .அது மட்டுமல்லாமல் முதல் முறையாக மக்களிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கின்றனர் .அந்த வகையில் தனலட்சுமி மக்கள் பிரதிநிதியாக களம் இறங்கி இருக்கிறார். இந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பொய்களை கூறிவிட்டார் என்று பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தனலட்சுமியின் நிஜ கேரக்டரை குறித்து விஜய் டிவி சார்ந்த நாஞ்சில் விஜயன் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.

வியப்பதற்கான காரணம்
எப்படியாவது தனது நடிப்பு உலகத்திற்கு காட்டி விட வேண்டும் தனக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என்று தனலட்சுமி ஆரம்பம் முதலே போராடிக் கொண்டு வருகிறார் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தனலட்சுமி தன்னுடன் நடித்த வெப் சீரியலுக்காக ஈரோட்டில் இருந்து தான் வருவாராம். இதைப்பற்றி நாஞ்சில் விஜயன் கேட்டதற்கு, நீங்கள் எப்போ வேணும் என்றாலும் டப்பிங் கூப்பிடுங்கள் நான் உடனே அங்கிருந்து கிளம்பி வந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். இவருடைய இந்த வார்த்தையை கேட்டு நாஞ்சில் விஜயன் மெய்சிலிர்த்து போயிருக்கிறாராம் காரணம் இந்த சின்ன வயதிலேயே தன்னுடைய வேலையின் மீது எவ்வளவு ஒரு பற்று இருக்கிறது என்று இவரை வியந்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

ஒருவேளை அப்படியும் இருக்கலாம்
தனலட்சுமி இருக்கும் வீடு மிகவும் பெரியது அதைப்பற்றி பலரும் கமெண்ட்களில் கூறி வருவதை பற்றி நான் பார்த்து இருக்கிறேன் ஆனால் அந்த வீடு லீசுக்கு தான் வாங்கியது. தனலட்சுமியின் அம்மா சேலை பிசினஸ் செய்து வந்தார் அதைப்பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும் அதில் வரும் வருமானத்தை வைத்துதான் தனலட்சுமி நடிப்பதற்கு பயன்படுத்தி வந்தார்கள் என்றும் கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தனலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்காக செயினை வித்துதான் வந்தேன் என்று கூறியதை குறித்து அது உண்மையாக கூட இருக்கலாம் காரணம் எப்போதும் எல்லோரும் வசதியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார்.

ரசிகர்கள் கேட்கும் கேள்வி அதுதான்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் தனலட்சுமி உள்ளே செல்கிறார் என்று தெரிந்ததும் எப்படியும் இரண்டு நாட்களுக்கு மேலே உள்ள தாக்குபிடிக்க மாட்டார் என்று தான் நினைத்தேன். அந்த அளவிற்கு கோபம் வந்தால் என்ன செய்கிறோம் என்பதே தெரியாத வகையில் தனலட்சுமி செய்து வருவார். அவருடைய கோபத்தை அவரால் கண்ட்ரோல் செய்ய முடியாது ஆனால் கொஞ்ச நேரம் கழித்து நிதானமான பிறகு தன்னுடைய கோபத்தை நினைத்து வருந்தி இருக்கிறார் .அதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். நாஞ்சில் விஜயனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் அது எப்படி அவர் நகைவிற்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போயிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் ஆனால் இவருடன் வெப் சீரியலுக்கு நடிப்பதற்கு அடிக்கடி ஈரோட்டில் இருந்து சென்னைக்கு சென்று வந்திருக்கிறார் சொந்தமாக ஒரு படத்தையும் தயாரித்து இருக்கிறார் என்றால் அதற்கு பணம் இல்லாமலா என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications