புத்தியை தீட்டும் கல்லூரியில் கோடாரிக்கு என்ன வேலை? சாய் அபயங்கர் செயலை கேள்வி கேட்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கல்லூரி மேடையில் கையில் கோடாரியைத் தூக்கிக்கொண்டு ஆட்டம் போடுவது இப்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் செய்த இந்த செயலை பார்த்து, புத்தியை தீட்ட வேண்டிய கல்லூரி வளாகத்தில் இதுபோன்ற ஆயுதங்களைக் கெத்தாக காட்ட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் இந்த விவகாரத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழா சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கரும் கலந்துகொண்டு மேடையில் பாடி ஆடியிருக்கிறார். அப்போது 'வீழா வீரா மாவீரா' பாடலுக்கு கையில் கோடாரி போன்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு அவர் ஆடிய காட்சிதான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.

Sai Abhyankar

பொதுவாக இசை நிகழ்ச்சி என்றால் பாடல், நடனம், ரசிகர்களின் உற்சாகம் என நிகழ்ச்சி களைகட்டுவது வழக்கம். ஆனால் இங்கே கையில் கோடாரியை தூக்கிக்கொண்டு ஆடியிருப்பது தேவையில்லாத ஒரு விஷயமாகப் பலருக்கும் தோன்றியிருக்கிறது. அதுவும் மாணவர்கள் படிக்கும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்படியொரு காட்சி இடம்பெற்றிருப்பது விமர்சனத்தை அதிகப்படுத்தியுள்ளது.

ப்ளூ சட்டை மாறன் கேள்வி

இந்த வீடியோவை பகிர்ந்த திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், சாய் அபயங்கரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று கேள்வி எழுப்பியதுடன், சாய்ராம் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தையும் விமர்சித்திருக்கிறார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் காலேஜ் பீஸ் கட்டுகிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் எதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? சினிமா நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பதிலாக மாணவர்களுக்கு அறிவூட்டும் வகையில் அறிஞர்கள், கல்வியாளர்களை அழைக்கலாமே என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கோடாரி, கத்தி காட்டுவது கெத்தா?

இந்த விமர்சனத்துக்கு பின்னால் இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது. சினிமாவில் வன்முறை காட்சிகள் இடம்பெறுவது புதிதல்ல. ஆனால் சமீபகாலமாக படங்களின் விளம்பர நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலும் அரிவாள், கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்களை ஒரு ஸ்டைலாகக் காட்டும் போக்கு அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் எழுகின்றன. படங்களில் வன்முறை காட்சிகள் எப்படி கையாளப்படுகின்றன என்பதிலும் கவனம் தேவை. குறிப்பாக குழந்தைகள் பார்க்கும் திரைப்படங்களில் ரத்தம், ஆயுதம், கொடூரமான தாக்குதல் போன்ற காட்சிகளை எந்த அளவுக்குக் காட்ட வேண்டும் என்பதில் படைப்பாளிகளுக்கு சமூக பொறுப்பு இருக்கிறது.

ஏற்கனவே தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடும், கொலை, கொள்ளை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்திய தீபாவளி பண்டிகையில் மட்டும் 17க்கும் மேற்பட்ட கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவே பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது மேலும் இளைஞர்கள் மனதில் வன்முறையை தூண்டுவது போல கோடரியை தூக்கி வைத்து சாய் அபயங்கர் டான்ஸ் ஆடுவது பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

மக்கள் கருத்து

புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய இடம் கல்லூரி. அப்படிப்பட்ட இடத்தில் மாணவர்கள் முன்னிலையில் கோடாரியை தூக்கிக்கொண்டு ஆடுவது உண்மையிலேயே அவசியமா என்ற கேள்வி நியாயமானதுதான். மேடையில் இருப்பவர்கள் என்ன செய்தாலும் அதை ரசிக்க வேண்டும் என்று இல்லை. குறிப்பாக இளைஞர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் கலைஞர்கள், தங்களுடைய செயல்கள் என்ன மாதிரியான செய்தியை சொல்கின்றன என்பதையும் யோசிக்க வேண்டும். சாய் அபயங்கரின் இசையை ரசிக்கும் ரசிகர்கள் ஏராளம். அவருடைய திறமையைப் பாராட்டுவதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில், கோடாரியைத் தூக்கிக்கொண்டு ஆடிய இந்தச் செயலை விமர்சிப்பதற்கும் ரசிகர்களுக்கு உரிமை இருக்கிறது. இசையைக் கொண்டாட வேண்டிய மேடையில் ஆயுதங்களைக் கெத்தாக காட்ட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் முக்கியமான கேள்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+