கடைசி நாட்களில்.. கடுமையாக கஷ்டப்பட்ட மனோபாலா.. வீட்டில் இன்று காலை என்ன ஆனது? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளரும், பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலா (69) உடல்நலக்குறைவால் காலமானார். அவர் கடந்த சில நாட்களாக கடுமையான நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு வந்தார்.

நடிகர் மனோபாலா தமிழ் திரையுலகில் பல முகங்களை கொண்ட நடிகர். இவர் தயாரிப்பாளராக, இயக்குனராக, காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக பல வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் இதுவரை 40 படங்களை இயக்கி உள்ளார். 16 தொலைக்காட்சி தொடர்களை இயக்கி இருக்கிறார்.

200க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து இருக்கிறார். 69 வயதாகும் இவர் சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்து உள்ளார்.

1994ல் தாய்மாமன் என்ற படத்தில் இவர் அறிமுகம் ஆனார்.

What really happened to actor director Manobala and How much he struggled during last days?

மரணம் : இந்த நிலையில் இல்லத்தில் இன்று ஓய்வு எடுத்துக்கொண்டு மனோபாலா திடீரென மரணம் அடைந்தார். அவர் கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார்.

அவருக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை இருந்தது. இந்த கல்லீரல் பிரச்சனை காரணமாக அவர் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கே சிகிச்சை முடித்த அவரை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

அவருக்கு கல்லீரல் பிரச்சனையோடு கடந்த சில நாட்களாக கடுமையான நெஞ்சு வலியும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரால் மூச்சு விட முடியாமல் திணறி உள்ளார்.

What really happened to actor director Manobala and How much he struggled during last days?

கஷ்டப்பட்டார்: அவரின் உறவினர்கள் ஊடகங்களில் அளித்த பேட்டியில், அவர் கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முக்கியமாக மூச்சு விட முடியாமல் அவர் கடுமையாக திணறி வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. இன்று அதிகாலை நெஞ்சு வலி அதிகம் ஆகவே அவர் மரணம் அடைந்தார்.கடந்த ஜனவரி மாதம் மனோபாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவே அவரின் மரணத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா உலகை அவரின் மரணம் உடைத்து போட்டு உள்ளது. எல்லோருடனும் அன்புடனும், நட்புடனும் இருப்பவர் நடிகர் மனோபாலா. சினிமா உலகில் மிகவும் நல்ல பெயர் கொண்டவர் இவர்.

அப்படிப்பட்ட மனோபாலாவில் மரணம் சினிமா உலகில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

What really happened to actor director Manobala and How much he struggled during last days?

மயில்சாமி: சமீபத்தில்தான் பிரபல நடிகர் மயில்சாமி மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் மயில்சாமி. கடந்த சில மாதங்களுக்கு அவர் மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றார்.

இந்த கோவிலுக்கு அவர் அடிக்கடி செல்வார் என்று கூறப்படுகிறது. இங்கே நடந்த கச்சேரியிலும் கலந்து கொண்டார்.

இரவு முழுக்க இங்கே தூங்காமல் அவர் வழிபாடு நடத்தி இருக்கிறார். நன்றாக சாப்பிட்டுவிட்டு இவர் கோவிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

வழிபாடு முடித்துவிட்டு, அதிகாலையில் மயில்சாமி சாலிகிராமத்திற்கு அருகே இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த ரோட்டில் இருக்கும் டீ கடை ஒன்றில் இவர் நின்று டீ குடித்துள்ளார். அங்கேதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு அப்போதுதான் லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டது போல நெஞ்சை பிடித்துக்கொண்டு படுத்து உள்ளார்.

அங்கேயே நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்தவர் மயங்கி உள்ளார். சுந்தர் டீ கடையில் இருந்த சுந்தர் அதன்பின் அவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி அனுப்பி உள்ளார். அங்கிருந்துதான் அவரை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து சென்றனர். ஆனால் அவரது உயிர் மருத்துவமனைக்கு வரும்போதே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மயில்சாமி மரணம் இன்னும் சினிமா உலகை விட்டு நீங்காத நிலையில் மனோபாலா மரணம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+