கஷ்டப்பட்டு வாங்கிய முதல் சம்பளத்தை S.J சூர்யா செய்த செயல்.. மனம் திறந்த மாரிமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனராகவும் நடிகராகவும் இருக்கும் எஸ்ஜே சூர்யா பற்றி நடிகர் மாரிமுத்து பல ரகசியங்களை கூறியிருக்கிறார்.

எஸ் ஜே சூர்யா ஆரம்பத்தில் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்பு தான் ஒரு இயக்குனராகவும் மாறி இருக்கிறார்.

 What S.J Surya did to earn his first hard-earned salary Marimuthu opened his heart

ஆனாலும் அவர் முதல் முறையாக லட்சத்தில் வாங்கிய சம்பளத்தை தன்னோடு பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு பைக் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்.

தமிழ் திரை உலகில் இயக்குனராகம், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தவிர்க்க முடியாத ஒரு நபராகத் தான் எஸ்.ஜே சூர்யா வளம் வந்து கொண்டிருக்கிறார். கதாநாயகனாக இருந்தாலும் சரி வில்லத்தனமாக இருந்தாலும் சரி, இவருடைய தனித்துவம் வேற லெவல் என்று ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது வளர்ச்சியின் உச்சத்தில் பலருக்கும் பரிச்சயமாக இருக்கும் எஸ் ஜே சூர்யா ஆரம்ப காலகட்டத்தில் உதவி இயக்குனராக ரொம்பவே கஷ்டங்களை தாங்கி இருக்கிறார். ஒரு நேர சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் தவித்திருக்கிறாராம். ஆனாலும் தன்னுடைய விடா முயற்சி மற்றும் உழைப்பால் மட்டும்தான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார் என்று அவருடைய நண்பர்கள் கூறி இருக்கின்றனர்.

பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்து பின்பு தான் குஷி மற்றும் வாலி என இரண்டு திரைப்படங்களை இயக்கி இரண்டும் செம ஹிட் ஆகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து தான் நியூ என்று திரைப்படத்தில் தன்னை ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்தி இருந்தார். அதை தொடர்ந்து இப்போ பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பொம்மை என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

அந்த திரைப்படம் வரும் ஜூன் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் எஸ்ஜே சூர்யா கலந்து கொண்டு இருந்தார். அதுபோல அதே நிகழ்ச்சியில் அவரைப் பற்றி பேச அவருடைய நெருங்கிய நண்பராகவும் நடிகராகவும் இருக்கும் மாரிமுத்து கலந்து கொண்டிருந்தார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு மாரிமுத்து எஸ்.ஜே சூர்யா வோடு குஷி படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் பேசி இருந்தார். அது பெரும் வைரலாகி இருந்தது. அது மாதிரி தான் தற்போது கூட அதே திரைப்பட அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதில் மாரிமுத்து பேசுகையில் நானும் எஸ்.ஜே சூர்யாவும் முதலில் இயக்குனர் வசந்த்திடம் உதவி இயக்குனராகப் வேலை செஞ்சுட்டு இருந்தோம். அதற்குப் பிறகு எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் உருவான குஷி படத்தில் நான் அவருடைய உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். அப்போ குஷி படத்திற்காக அவர் ஒரு சில லட்சங்களை அட்வான்ஸ் ஆக பெற்றார்.

முதல் முதலாக பல லட்சங்களை கையில் பார்த்த எஸ் ஜே சூர்யா அதை வீட்டில் கொண்டு போய் கொடுக்காமல் செய்த செயல் எனக்கு பெரும் வியப்பை கொடுத்திருந்தது. நானா இருந்தா கண்டிப்பா அப்படி எல்லாம் செஞ்சிருக்கவே மாட்டேன். நான் என்னோட பொண்டாட்டி கைல கொடுத்து என்ன செய்யணுமோ அதை செஞ்சு இருப்பேன். ஆனால் எஸ்.ஜே சூரியா பணத்தை வாங்கிய கையோடு எங்க ஏழு உதவி இயக்குனர்களுக்கு பைக் வாங்கி கொடுத்தார்.

அந்த ஏழு பேரில் ஏ.ஆர் முருகதாஸூம் உண்டு. அவர் இப்போதும் அந்த பைக்கை பத்திரமாக வச்சிருக்கார் என்று மாரிமுத்து கலகலப்பாக பேசிய இந்த வார்த்தை பலருக்கும் வியப்பை கொடுத்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+