சிறகடிக்க ஆசையில் ஒன்று சேர்ந்த முத்துவும் அருணும்! அடுத்த பிரச்சனை விஜயாவுக்கு தானா? ரோகிணி பிளான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வெற்றி வசந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருண் கேரக்டரில் நடிக்கும் நடிகரோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதோடு சில விஷயங்களை அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த சீரியலில் சீதா மற்றும் அருண் காதலுக்கு முத்து மட்டும் எதிரியாக இருக்கிறார். அருண் நல்லவன் இல்லை அவன் ஈகோ பிடித்தவன் என்று ஆரம்பத்திலிருந்து முத்து இந்த கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருக்கின்றார். அனல் சீதா நான் அருணை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

முத்துவின் எதிர்ப்பு
அதுபோல சீதாவின் காதலுக்கு மீனாவும் சத்யாவும் சப்போர்ட்டாக இருக்கிறார்கள். ஒருவேளை அருணுக்கும் சீதாவுக்கும் முத்துவை எதிர்த்து கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார்களா? என்று எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கிடையில் நேற்றைய எபிசோடில் முத்துவும் அருணும் சேர்ந்து தான் ஒரு பெண்ணை காப்பாற்றி அவரை மிரட்டிய திருடனை பிடித்து இருந்தனர். ஆனால் அருண் ஏதோ தானே சாதித்தது போல ஒவ்வொரு பில்டப் செய்து இப்போது அவருக்கு பிரச்சனையும் வந்திருக்கிறது.
ஏமாற்றிய அருண்
நான்தான் அந்த திருடனை தனியாக பிடித்தது என்று அவர் பிரஸ் மீட்டிங்கில் பேசியதால் அவருக்கு பதவி உயர்வுக்கு இன்ஸ்பெக்டர் ரெக்கமெண்ட் செய்திருக்கிறார். இப்படியான நிலையில் முத்து அந்த பெண்ணிடம் பேசி அந்த பெண் முத்துக்கு ஒரு தங்க சங்கிலியையும் பரிசாக கொடுத்து இருக்கிறார். இதனால் போலீஸ் ஆபீசர் அருணுக்கு போன் செய்து அவரை மிரட்டி இருக்கின்றனர்.

நடிகர் வெற்றி வசந்த் பதிவு
இந்த சீரியல் இப்படி கதை பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் சீரியலில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் அருணும் முத்துவும் சூட்டிங் ஸ்பாட்டில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை, இந்த சீரியலில் முத்து கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் வெற்றி வசந்த் பகிர்ந்து இருக்கிறார். இந்த போட்டோஸ் எடுத்து சில வாரங்கள் ஆகிவிட்டது. இதை போஸ்ட் போடாமல் தான் இருந்தேன் ஆனால் இப்போது அந்த காட்சிகள் டெலிகாஸ்ட் ஆகிவிட்டதால் அதை போஸ்ட் போடுகிறேன் மன்னித்துக்கொள் நண்பா என்று வெற்றி வசந்த் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications