நடிகர் மனோபாலாவிற்கு என்ன பிரச்சினை..திடீர் மரணத்தால் திரை பிரபலங்கள் அதிர்ச்சி
சென்னை: தமிழ் நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா உடல் நலக்குறைவினால் காலமானார். கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த மனோபாலா மரணமடைந்தது பல திரை உலக பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவருடன் பயணித்த திரை உலக பிரபலங்கள் கூறியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மனோபாலா. இவர் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். ஒரு காலத்தில் பரபரப்பாக காணப்பட்ட பிஸி இயக்குநரான இவர் நகைச்சுவை நடிகராகவும் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆகாய கங்கை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். ரஜினிகாந்த் நடித்த ஊர்காவலன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் மனோபாலாவிற்கு கடந்த ஜனவரி மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் சில மாதங்கள் ஓய்வெடுத்து வந்தார்.
இவர் தளபதி 67 ஆவது படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக அவர் தளபதி 67 படத்திற்கான அப்டேட்டை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில், "தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. லோகேஷ் கனகராஜ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன், அதே ஆற்றல் மற்றும் முழு வீச்சில்.. முதல் நாளே.. தூள்.." என பதிவிட்டார்.
இந்த நிலையில் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட மனோபாலா இன்று உடல் நலக்குறைவினால் மரணமடைந்துள்ளார். கடந்த 15 நாட்களாகவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோபாலா இன்று உடல் நலக்குறைவினால் மரணமடைந்துள்ளார்.
மனோபாலாவின் மரணத்திற்கு திரை உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எளிமையான மனிதர் அனைவராலும் இவரை எளிதாக அணுக முடியும் என்றும் மனோபாலா உடன் பல திரைப்படங்களில் நடித்துள்ள கருணாஸ் கூறியுள்ளார். அவரது இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது என்றும் நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications