எல்லாவற்றிற்கும் காரணம் "காதல்”தான்.. நெகிழ்ச்சியோடு மணிமேகலை வெளியிட்ட வீடியோ
விஜே மணிமேகலை தன்னுடைய கணவரோடு எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: வி ஜே மணிமேகலை சமீபத்தில் தன்னுடைய கிராமத்தில் புது வீடு கட்டி இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டு நெகிழ்ச்சியோடு ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் காதலுக்கு இலக்கணம் நீங்கள்தான் என்று மணிமேகலையை ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.

சன் மியூசிக்கில் பிரபலம்
சன்மியூசிக் புகழ் 'விஜே மணிமேகலை' 90'ஸ்கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை பெரும்பாலான இளைஞர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள்.அந்த அளவிற்கு தனது நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ஸ்டைலால் பிரபலமாய் இருக்கிறார். இவர் ஒருமுறை சன் மியூசிக்கில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது.. அதனிடையே ஒளிபரப்பப்பட்ட லாரன்ஸ் பட பாடலில் ஆடிய இளைஞரின் நடனத்தால் கவரப்பட்டு.. அவரை பாராட்டுவதற்காக இவர் தொடர்பு கொண்டது இறுதியில் காதலில் வந்து முடிந்தது.அந்த இளைஞர் தான் தற்பொழுது விஜே மணிமேகலை காதலித்து திருமணம் முடித்து இருக்கும் சினிமா நடன உதவி இயக்குனர் ஹுசைன் ஆவார்.

காதல் திருமணம்
மதத்தை காரணம் காட்டி இவர்களுடைய காதலுக்கு மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு கிளம்ப தன் பெற்றோரை எதிர்த்து ஹுசைனை திருமணம் செய்து கொண்டார் .இவரது கணவர் டான்ஸ் சூட்டிங்கில் பிஸியாக இருக்க, இவரும் சின்னத்திரையில் போட்டியாளர்,வர்ணனையாளர், பேச்சாளர், என்ற பன்முகத் திறமையோடு ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே தனியாக யூடியூப் சேனல்கள் வெற்றிகரமாக நடத்திவருகிறார். யூடியூப் சேனலில் தங்களது அன்றாட நடவடிக்கைகளை வீடியோவாக அப்லோட் செய்து வருவது இவர்களது பாலோயர்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கிராமத்தில் கொண்டாட்டம்
தன் கணவர் ஹுசைனுடன் அவ்வப்போது கிராமத்திற்குச் செல்லும் மணிமேகலை..அங்கு அந்த ஊர்க்காரர்கள் உடன் இணைந்து செய்யும் குறும்புத்தனங்கள் வீடியோவாக எடுத்து போஸ்ட் செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.கொரனா ஊரடங்கு காலத்தில் இவர் போட்ட வீடியோக்கள் அனைத்தும் பாசிட்டிவ் கமெண்ட்டுகளையே பெற்று வைரலானது.இந்த நிலையில் தன்னுடைய கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு தான் சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி இருப்பதாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். தற்போது அதே இடத்தில் தான் புதியதாக வீடு கட்ட இருப்பதாக ரசிகர்களிடம் மகிழ்ச்சியோடு புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்.

காதலுக்கு வெற்றி தான்
இந்த நிலையில் தன்னுடைய வீட்டிற்கான பாலக்கால் பூஜை நடைபெறும் போது எடுத்த புகைப்படங்களை வீடியோவாக மணிமேகலை வெளியிட்டு இருக்கிறார். அதிலும் குறிப்பாக காதல் திருமணம் செய்து கொண்ட மணிமேகலை, ஜெயம் ரவி நடித்த உனக்கும் எனக்கும் திரைப்படத்தில் வரும் காதலர்களுக்கு மோட்டிவேஷன் கொடுக்கும் பாடலான "ஆகாயம் மண்மீது" என்கிற பாடலில் "கஷ்டம் காதலுக்கு இஷ்டம்" என்கிற லைனை பயன்படுத்தி இருக்கிறார். இந்த வீடியோவிற்கு அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் மேலும் மேலும் மணிமேகலை இதே போல மகிழ்ச்சியோடு வளர்ச்சி அடைய வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications