ஜூலியின் அம்மன் வேடத்தை பற்றி கருத்து சொன்ன ராதா ரவி... "என்னத்த சொல்லுவது” இப்படி முடிச்சுட்டாரே!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் தெரிந்த ஜூலியின் அம்மன் வேடத்தைப் பற்றி ராதாரவி பேசிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த காலத்தில் கே ஆர் விஜயாவை பார்க்கும் போது கையெடுத்து கும்பிட தோணும் ஆனால் இப்போ ஜூலியின் யின் வேடத்தை பார்க்கும் போது "கருமம்" என்னத்த சொல்லுவது என்று முடித்து விட்டார்.

முதல் சீசன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது பல சீசன் ஒளிபரப்பாகி வருகிறது .ஆனால் பலருக்கும் புதுமையாகவும் விருவிருப்பாகவும் இருந்த சீசன் என்றால் முதல் சீசன் என்று கூறுவர். அந்த சீசன் தான் போட்டியாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், தங்கள் நடந்து கொள்வதை எப்படி வெளியே காட்டுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமலே ரியலாக விளையாடிய போட்டியாளர்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவார்கள். அதற்கு பின்பு வந்த சீசன்களில் எல்லாம் போட்டியாளர்கள் அதற்கு முந்தைய சீசன்களை நன்றாக பார்த்து டிரைனிங் ஆகித்தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

மெரினா கடற்கரையில் ஆரவாரம்
பிக் பாஸ் நிகழ்ச்சி எத்தனை சீசன்கள் வந்தாலும் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒரு சிலரை யாரும் அவ்வளவு எளிமையாக மறந்து விட மாட்டார்கள் அதில் ஒருவராக ஜூலி இருந்து வருகிறார். இவர் மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தீவிரமாக கத்தியே பிரபலமடைந்து விட்டார். இவருடைய போராட்டத்தை பார்த்து மிரண்டு போன விஜய் டிவி இவரை ஒரு போட்டியாளராக உள்ளே இறக்கினால் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் பஞ்சம் இருக்காது என்பதை அப்போதே தெரிந்து பக்காவாக பிளான் பண்ணி உள்ளே இறக்கி விட்டார்கள்.

அதே இடத்தில் கிடைத்த தீர்வு
நிகழ்ச்சி ஆரம்பமான ஒரு சில வாரங்கள் சக போட்டியாளர்களுடன் ஜூலி செய்த சேட்டைகள் குழந்தைத்தனமாக இருக்கிறது என்று ரசித்து வந்த ரசிகர்களுக்கு ஓவியாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் பிரச்சனை காரணமாக, இவர் ரசிகர்கள் வெறுக்கும் ஒரு போட்டியாளராக மாறிவிட்டார். இவர் அதுவரைக்கும் கட்டி காப்பாற்றி வைத்திருந்த நல்ல பெயரை எல்லாம் இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் முழுவதும் இழந்து விட்டு தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருந்தார் .அதற்கு பிறகு இவர் என்ன செய்தாலும் இதனை வைத்து பலர் கலாய்த்து கொண்டிருந்தனர். நெகட்டிவ் கருத்துக்களை கண்ணா பின்னாவேன இவரை சுத்தி ரசிகர்கள் அனுப்பி வந்தனர். இந்த நிலையில் தற்போது இவர் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் இதுவரைக்கும் வைத்திருந்த நெகட்டிவ் கருத்துக்களை எல்லாம் கொஞ்சம் குறைத்து விட்டு வந்திருந்தார்.

ராதா ரவியின் கருத்து
இந்த நிலையில் தற்போது ஜூலி அம்மன் வேடமிட்டு நடித்த அம்மன் தாயே திரைப்பட ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. அதை குறித்து எம் ஆர் ராதா பேசியிருக்கிறார். அதில் போராட்டத்தில் கத்திய அந்தப் பெண் ஜூலி அம்மன் வேஷம் போட்டு ஒரு படத்தில் பண்ணி இருக்கு, அம்மன் என்றால் கே ஆர் விஜயா போன்ற சில நடிகைகளை சொல்லலாம். அவர்களை பார்க்கும்போது கையெடுத்து கும்பிட தோணும். தான் இதுவரைக்கும் பல இடங்களில் சாமி வந்து ஆடுவதை பார்த்திருக்கிறேன். அப்படியே தத்ரூபமாக இருக்கும். அந்த வேடங்களை போட்டுக் கொண்ட நடிகைகளை பார்க்கும்போது, ஆனால் இந்த ஜூலி பொண்ணு அம்மன் வேடம் போட்டிருக்கு போடட்டும்.... அம்மன் என்ன கண்ணையா குத்த போகுது!?கருமம் என்னத்த சொல்லுவது!! என்று அவர் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
-
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications